April 27, 2018

அபாயா அணிய மறுப்பு - சம்பந்தனுக்கு, றிசாத் கடிதம் அனுப்பிவைப்பு

-ஊடகப்பிரிவு-

சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் திருகோணமலை ஷண்முகா அபாயா பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ’அபாயா’ விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம்  ஆகிய மூவினமும் பரஸ்பர புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும். 

யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் - முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய கால கட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.

திருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், அந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும். அது மட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒரு போதுமே துணை போனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். இந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக் காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.

முஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று, நேற்று திடீரென்று வந்த ஒன்றல்ல என்பதை, முஸ்லிம்களுடன் நெருங்கிப்பழகும் நீங்கள் நன்கறிவீர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழி பேசும் சிறுபான்மைச் சமூகமாகும். கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற்சில  பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் ஈடுபட்டன. அதே போன்று மீண்டும் தமிழ் - முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீயசக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.

எனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்து வாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்பட  வேண்டியது காலத்தின் தேவையாகும்.
அந்தவகையில், தற்போது மீள உருவாகி வரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்து விடக்கூடாது.

எனவே,திருமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள்,  திருமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத்தலைவர்கள், இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டோர் மற்றும் கல்விசார் ஆர்வலர்கள் அனைவரையும்  அழைத்து, சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப்பிரச்சினைக்கு சுமூகமான, நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு நான் அன்பாய் வேண்டுகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

6 கருத்துரைகள்:

அந்த ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட இடமாற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதே நேரம் எந்த முஸ்லீம் ஆசிரியையும் முஸ்லிம்களின் வரையறைக்குட்பட்ட ஆடைகள் அணிவதை சட்ட ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முயட்சி செய்வாரா அமைச்சர்???

சீருடை மாணவர்களுக்கு மட்டுமே, ஆசிரியர்களுக்கு அல்ல என்பது எனது கருத்து.

அனால்இப்படியான தமிழ்-முஸ்லிம் பிரச்சனைகளுக்கு காரணம் “முஸ்லிம் அரசியல்வாதிகள்” மட்டுமே என்பது 100% உண்மை.

இவர்கள் வெளியில் நீதி-நியாயம்-ஒற்றுமை என சும்மா கதைப்பார்கள், கடிதம் எழுதுவார்கள். ஆனால், திரைமறைவில் தமிழர்களுக்கு எதிராக கள்ள வேலைகளும், துரோகங்களும் செய்வார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டு, துன்பபட்டு, விரத்தியிலேயே முஸ்லிம்களுக்கு எதிராக, இப்படியன சிறிய விடயங்களுக்கும் போராடுகிறார்கள்.

This is only a tip of the ice berg.

Thamil sakothararkalukku,

Thayawu seythu muslimkalin maarka vidayangalil thalai ida wendam. Nangal ewarum ungal marka widayangalil thalai iduwathu illai. Awar awarukku awar awar virumbiya maarkaththai pinpatra mulu urimai undu.muslim padasalaiku warum hindu aasiriyarkalai abaya podumpadi nangal oru pothum solluwathu illai.

இந்த அந்தோனி வரலாறு பாடத்தில் சித்தியடைந்திருக்க வாய்ப்பில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட இனத்துவ வாதி அனாகரிக தர்மபாலவை மீட்டெடுக்கப் பிரித்தானியாவரை சென்றதுடன் தொடர்ந்து முஸ்லிம்களின் இருப்புக்கு எதிராக பாசிச புலிகளை நேரடியாகவும் டயஸ்போறாக்களை மறைமுகமாகவும் பயன்படுத்தி வருவதை பலிச்சிந்தனை கொண்ட இவர் களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

naangal innum idai sariyaga purinthu kolla villai.irunda tharapinarun nanga purinthu kolla vendum.arasiyal vadigal thanadu arasiyal vaalkaikaga thanadu thaayayum kooti koduppaargal.agave podumakkal idai perusu padatha venadaam

"முஸ்லிம்களின் கலாச்சார உடையானது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல." - இலங்கை முஸ்லிம்களின் கலாச்சார உடையை இலங்கை முஸ்லிம்கள் கை விட்டு இது காலவரை அராபியாவில் உடுத்தும் உடையை தாமும் அணிய போகிறோம் என்று பிடிவாதம் பிடிப்பதால் உண்டான பிரச்சினை இது. இந்த அராபிய உடை அணியாமல் சேலை உடுத்தும் இலங்கை முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை பின்பற்றவில்லையா? ஆபாசமாகவா இந்த முஸ்லிம் பெண்கள் வாழ்கிறார்கள்? வாழ்ந்தார்கள்?

Post a Comment