Header Ads



பைஸர் முஸ்தபாவின் சகோதரர் போன்று, நான் அவரது பின்னால் இருப்பேன் - தயாசிறி

21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளை வாழ்த்துவதற்காக இன்று -19- விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டார்.

அவுஸ்திரேலியாவின்​ Gold Coast நகரில் நடைபெற்ற 21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை ஒரு வெள்ளி, 5 வெண்கலம் அடங்கலாக 6 பதக்கங்களுடன் 31ஆம் இடத்தைப்பெற்றது.

இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கையின் அதிசிறந்த பெறுபேறாகும்.

https://www.youtube.com/watch?time_continue=57&v=1pLjACPzPfQ

No comments

Powered by Blogger.