April 25, 2018

சவூதியினால் நிறுவப்பட்ட, வீடுகளுக்கு என்னாச்சு...?

காடுகளுக்குள் வளர்ந்த வீடுகளும் சாம்பலாகிய கனவுகளும்

-றிசாத் ஏ.காதர்-

இலங்கை திரு­நாட்டின் அனர்த்தம் ஒன்­றினால் பாதிப்­புற்று, வாழ்­வ­துக்கு இட­மற்று வாழ்ந்து கொண்­டி­ருக்கும் மக்கள் இன்னும் இந்த தீவிலே வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அம்­மக்­களின் வாழ்­வியல் துன்­பங்கள் என்­பது எண்­ணி­ல­டங்­கா­தவை.

அதன் ஒரு பகு­திதான் அம்­பாறை மாவட்­டத்தில், அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்­காக சவூதி அர­சினால்  நுரைச்­சோலை பகு­தியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கிங் ஹுசைன் மாதிரிக் கிராமம். அங்­குள்ள வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு தசாப்­தத்தை எட்­டி­யுள்­ளது.  ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்னும் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வில்லை. தற்­போ­துள்ள சூழலில் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு ஏது­வாக அவைகள் இல்­லா­மல்­போ­யி­ருப்­பது வேத­னை­யா­னதே. குறித்த வீடுகள் காடு­க­ளாக பரி­ணாம வளர்ச்­சி­ய­டைய இந்த நாட்டில் விதைக்­கப்­பட்ட இன­வாத சிந்­த­னை­களின் ஆரம்­பப்­புள்ளி என்­பது மிகைப்­ப­டுத்­தலல்ல.

குறித்த பகு­தியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட 500 வீடு­களில் 303 வீடு­களை ஜனா­தி­பதி செய­லகம் பகிர்ந்­த­ளிக்­க­வுள்­ள­தாக சொல்­லப்­பட்­டது. இந்த எண்­ணிக்கை முஸ்லிம் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­துக்­கான சாத்­தி­யங்கள் அதிகம் என்­கிற கருத்து மேலோங்­கியே காணப்­ப­டு­கின்­றது. மீத­முள்ள 197 வீடு­க­ளையும் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் சிங்­கள, தமிழ் மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்பார் எனவும் நம்­பப்­பட்­டது. ஆனால் கருத்து ரீதி­யா­கவே அத்­த­னையும் இது­வரை இருந்­து­வ­ரு­கின்­றது. செயற்­பா­டுகள் செத்து மடி­யத்­தொ­டங்­கிற்று. 

கட்­டப்­பட்ட வீடு­க­ளில் வாழும் கன­வுடன் ஒரு தசாப்­தமாக காத்­தி­ருந்து இந்த உலகை விட்டு பிரிந்­த­வர்கள் ஏரா­ள­மா­ன­வர்கள். சந்­த­தி­க­ளுக்­கேனும் தமது கன­வுகள் நன­வா­குமா என்ற ஏக்­கத்­து­டனே அவர்­களின் மர­ணங்கள் சம்­ப­வித்­தி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

இந்த மக்­களின் வாழ்­வியல் நிலை பற்­றியும் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களின் தற்­போ­துள்ள சூழல் பற்­றியும் ஏலவே பல­முறை இப்­பத்­தி­ரிகை எடுத்­தி­யம்­பி­யது.

அவை­களில் எதுவும் எமது சமூ­கத்­தி­லுள்ள அர­சியல் தலை­வர்­களின் காது­க­ளுக்கு எட்­ட­வில்லை அல்­லது அவர்­களின் இத­யங்­களை இழ­கச்­செய்­ய­வில்லை என்று சொல்­வதே பொருத்தம்.

ஓர் அனர்த்தம் நிகழ்ந்து சாதாரண­மான வாழ்க்கை முறை ஓரிரு வரு­டங்­க­ளுக்குள் மீள­மைக்­கப்­ப­டு­வது வழமை. ஆனால் 13வரு­டங்கள் பூர்த்­தி­ய­டை­ந்­தா­யிற்று. இன்னும் அதன் வலி­க­ளையும், ரணங்­க­ளையும் அணு­வ­ணுவாய் புசிப்­ப­துக்கு விட்­டால்­போலவே அம்­மக்­களின் துயர் நிரம்­பி­யி­ருக்­கின்­றது. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இந்த நிலைவ­ரங்­களை புரிந்­து­கொள்­வ­தற்­கான ஆற்றல் இல்­லாமல் போய்­விட்­டது போலவே அன்­றாட செயற்­பா­டுகள் நக­ரத்­தொ­டங்­கிற்று.
நுரைச்­சோலை வீட்­டுத்­திட்ட விவ­கா­ரத்­தினை மிக இல­கு­வாக பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அரி­ய­தொரு சந்­தர்ப்பம் நமது முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கு வாய்த்­தி­ருந்­தது. ஆனால் அந்த விட­யத்­துக்கு கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம் என்ன என்­ப­துவே இன்­றுள்ள கேள்வி.

இந்த நாட்­டி­னு­டைய பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை என்­பது இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு நீண்ட கால­மாக தீர்­க்கப்­ப­டா­ம­லுள்ள முரண்­பாட்­டுடன் கூடிய விட­யங்­களை தீர்ப்­ப­துக்கு பொருத்­த­மான தரு­ண­மாக இருந்து கைந­ழு­விப்­போ­யிற்று என்று சொல்­வதில் தவ­றுகள் இல்லை.

குறிப்­பாக தமிழ் தரப்­பி­னரை பொறுத்­த­மட்டில் பிர­த­ம­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யினை மையப்­ப­டுத்தி பல விட­யங்­களை எழுத்து மூலம் ஒப்­பந்­த­மாக செய்­து­கொண்­டனர். அவை அர­சியல் அரங்கில் சிலா­கித்­துப்­பே­சப்­ப­டு­கின்­றது. அதேபோல் விமர்­சிக்­கப்­ப­டு­வதும் குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நாட்டில் ஒப்­பந்­தங்கள் ஒன்றும் செய்­து­வி­டப்­போ­வ­தில்லை என நமது அர­சியல் தலை­மைகள் விமர்­சித்­தாலும் குறித்த ஒப்­பந்த நடை­மு­றைக்கு சில பெறு­மா­னங்கள் இல்­லா­ம­லில்லை என்­பது வெளிப்­ப­டையே. ஆனால் தமிழ் தரப்பு சில விட­யங்­களை தமது சமூ­கத்­துக்கு பெற்­றுக்­கொ­டுக்கும் முயற்­சியில் தங்­களை ஈடு­ப­டுத்­திக்­கொண்­டு­முள்­ளது.

ஆக, எது எப்­ப­டியோ இந்த நாட்டில் மிக நீண்­ட­கா­ல­மாக முஸ்லிம் மக்­களின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சினை ஒன்­றாக நுரைச்­சோலை வீட்­டுத்­திட்ட விவ­கா­ரத்­தையே பார்த்தல் வேண்டும். குறித்த விடயம் இந்த நாட்­டி­லுள்ள ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் அவ­மா­னப்­ப­டுத்­திய விடயம் என்றே பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் நமது முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் பேசா மடந்­தை­க­ளாகவே இந்த விவ­கா­ரத்தில் இருப்­பது வெட்­கித்­த­லை­கு­னி­வ­துடன், வேத­னைப்­பட்­டுக்­கொள்­­வ­தாக புத்­தி­ஜீ­விகள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

நல்­லாட்சி நிறு­வப்­ப­டு­வ­தற்கு ஏரா­ள­மான வாக்­கு­று­திகள் சிறு­பான்மை மக்­களை நோக்கி அள்­ளி­வீ­சப்­பட்­டன.  கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்­களை மையப்­ப­டுத்தி வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களில் மிக முக்­கி­ய­மா­னது அக்­க­ரைப்­பற்று பிர­தேச சபைக்­குட்­பட்ட நுரைச்­சோலை வீட்­டுத்­திட்ட  விட­ய­மாகும். குறித்த விட­யத்தை அர­சியல் அரங்கில் வெற்­றி­கொள்ள எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் பூச்­சி­யமே. 

நுரைச்­சோலை வீட்டுத்திட்ட விவ­கா­ரத்தை பூதா­க­ர­மாக்கி நீதி­மன்று வரை­கொண்டு சென்று அர­சியல் அரங்கில் தனக்­கி­ருந்த செல்­வாக்கின் பெறு­மா­னத்தை வெளிப்­ப­டுத்­திக்­காட்­டி­யது ஹெல உறு­மய என்­கிற கட்­சிக்­கா­ரர்கள். அதற்கு சொந்­தக்­கா­ர­ராக இருப்­பவர் இந்த ஆட்­சி­யிலும் மிக்க பலம்­பொ­ருந்­தி­ய­வ­ரா­கவே இருப்­பது இங்­குள்ள விசேட அம்­ச­மாகும்.

இவ்­வா­றான விடயம் நடந்­தேறி ஆட்­சி­மாற்றம் இடம்­பெற வழி­ச­மைத்­துக்­கொ­டுத்த நமது முஸ்லிம் தலை­மைகள் எதனை மையப்­ப­டுத்தி ஆட்­சிக்கு ஒத்­தடம் வழங்­கி­யது என்­பது இது­வரை இம்­மக்கள் ஐயப்­பாட்­டு­டனே இருப்­பது மக்­களின் குரல்­களின் ஊடாக அறிந்­து­கொள்­ளவும் முடி­கின்­றது.

காடு­க­ளா­கிய வீடு­களை மீளத் திருத்தி கைய­ளிக்­க­வுள்­ளாதாக ஆட்­சி­யாளர் தொடங்கி அமைச்­சர்கள் வரை சிலா­கிக்கத் தொடங்­கினர். ஆனால் அதுவும் வெறும் படங்­காட்­ட­லா­கவே போயிற்று. கிழக்கு மாகாண ஆட்சி மு.கா.கட்­சியின் ஆட்­சியில் இருந்­த­போது எந்த அரசு வீடு­களை நிர்­மா­ணிக்க உதவி வழங்­கி­யதோ அந்த அரசின் சமய விவ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பான அதி­காரி வர­வ­ழைக்­கப்­பட்டு மாகாண ஆட்­சி­யா­ளர்கள் படை­பட்­டா­ளங்­க­ளோடு ஊட­கங்­க­ளுக்கு முன்னால் வலம் வந்த நிலை­மை­யினை மட்­டுமே மக்கள் பார்த்­தனர். தொடர் நட­வ­டிக்கை இது­வரை கைகூ­ட­வில்லை. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி இடம்­பெற்ற அந்­நி­கழ்வை மக்கள் “டிசம்பர் மாதம் இடம்­பெ­ற­வுள்ள கவ­ன­யீர்ப்பு நட­வ­டிக்­கைக்கு ஆசு­வா­சப்­ப­டுத்த” மேற்­கொண்ட முயற்­சி­யா­கவே பார்க்கத் தொடங்­கினர். அதில் தவ­றுகள் ஏது­மில்லை என்றே சொல்­லுதல் இன்னும் சிறப்­பா­க­வி­ருக்கும். 
அத­னையும் தாண்டி வீடுகள் வழங்கும் துரித நட­வ­டிக்கை என்­கிற தோர­ணையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் மீள நேர்­முகத் தெரி­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அந்த நடை­மு­றைக்கும் வருடம் ஒன்­றா­கப்­போ­கின்­றது. மாற்­றங்கள் அல்­லது சாதக நட­வ­டிக்கை என்­பது இன்­னு­மில்­லாமல் இருக்­கின்­றது.

இவற்றை எல்லாம் வைத்து அனு­மா­னிக்­கின்­ற­போது நல்­லாட்சி என்­கிற பெயரில் ஆட்சி புரி­கின்ற அர­சாங்கம் தமது காலத்­துக்குள் கொதி­நிலை அர­சி­யலை தவிர்த்து முஸ்லிம் மக்­களை ஆசு­வா­சப்­ப­டுத்த அவர்­களின் தலை­வர்­களை கொண்டே நாடகம் ஆடு­கின்­றது என்­பது வெளிப்­படை உண்­மை­யா­கவே தெரிகின்றது.

மீளத் திருத்­தங்கள் இன்னும் இடம்­பெ­ற­வில்லை, இடம்­பெ­றப்­போ­வ­து­மில்லை. காடுகள் பெருங்­கா­டு­க­ளாக காட்சி தரு­கின்­றன. இன்னும் சில­காலம் கடந்தால் வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம் கைய­கப்­ப­டுத்தி விலங்குகள் வாழ்­கி­ன்றன அதற்கு தொந்­தொ­ரவு செய்ய அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என்­கிற வாச­கத்­துடன் பதா­தைகள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டலாம். அதற்­குரிய காலம் வெகு தொலை­வி­லில்லை.

மேற்­சொன்ன எந்த நிலை­களை பற்­றியும் நமது அர­சியல் தலை­மைகள் சிந்­திக்கத் தலைப்­ப­ட­வில்லை. தமது கட்­சிக்கு அமைச்­சுக்கள், பிர­தி­ய­மைச்­சுக்கள் எத்­தனை பெற்­றுக்­கொள்­வது என்­பதில் காட்­டு­கின்ற ஆர்வம் சமூக விட­யங்­களில் இல்­லாமல் போய்­விட்­டது. அர­சியல் என்­பது மிக இல­கு­வாக சம்­பா­திக்கும் ஒரு தொழில் என்று இன்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதே தவிர சமூக விட­யங்­க­ளுக்கு உரிய தீர்வு வழங்­கப்­ப­டாது போனால் அரசியல் சுத்த ஏமாற்று வியாபாரம் என்கிற விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளதே உண்மை.

விடிவெள்ளி

2 கருத்துரைகள்:

No one address to the Saudi Government about the plight of those houses.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளால் தீர்க்கப்பட முடியாதுபோன இந்த அமானிதத்தை, ஆன்மிகத் தலைமையான உலமா சபை தீர்த்து வைக்க வேண்டிய ஓர் கடமை அதற்கு உள்ளது.

Post a Comment