Header Ads



அமைச்சர் றிசாத்தின் கவனத்திற்கு..!

பெரும்போகத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் நேற்று -23- ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 16 மாவட்டங்களில் பெரும்போக செய்கை பாதிக்கப்பட்டிருந்தது அந்த மாவட்டங்களில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் காணப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் முசலிப்பிரதேசம் பெரும்போக நெற்செய்கையில் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட விசாயிகள் ஒரு ஏக்கருக்கு 675.ரூபா காப்புறுதி தொகை செலுத்தி பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தி ஒருமாத காலத்திற்கு முன்னரே மன்னார் மாவட்ட கமநல காப்புறுதி சபை உதவிப்பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்....

மேலும் செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4.0000 ரூபா வரை வழங்கப்படும் என விவசாய காப்புறுதி சபை தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ள நிலையில் ஆனால் மன்னார் மாவட்டத்தில் நிலைமை வேறாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 2.0000 ரூபா தொடக்கம் 25000 ரூபா வரையில் தான் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட கமநல காப்புறுதி சபை உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார் இந்த உண்மை தண்மையை அறிந்த விவசாயிகள் மிகவும் மனவேதனையுடன் காணப்படுகின்றனர்....

விவசாய அமைச்சரே, 
வன்னி மாவட்ட அமைச்சர் றிசாத் பதியூதீனே,

 இந்த விடயத்தை விசாரித்து மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீட்டு தொகை உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுப்பாரா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்......

ஏ.எம். றிசாத் 

No comments

Powered by Blogger.