Header Ads



இஸ்­ரே­லி­யர்­களே, உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்துள்­ளன - பத்­தே­கம சமித்த தேரர்

இஸ்­ரே­லி­யர்­களே!  உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்து போயுள்­ளன. முத்­திரை ஒட்­டு­வ­தற்­காக பூசப்­பட்­டுள்ள பசை­களில் மிரு­கங்­களின் சேர்க்­கைகள் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று உத்­த­ர­வா­த­ம­ளித்­துள்ள நீங்கள் பலஸ்தீன் காஸாவில் பலஸ்­தீ­னர்­களை மிரு­கங்­க­ளைப்போல் சுட்டுக் கொல்­கி­றீர்கள். அப்­பாவி பலஸ்தீன் மக்­க­ளுக்­காக இலங்­கை­யர்கள் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தென்மாகாணசபை உறுப்பினர் பத்­தே­கம சமித்த தேரர் தெரி­வித்தார்.

பலஸ்­தீனில் நடை­பெற்ற சர்­வதே மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக விண்­ணப்­பித்து இஸ்­ரே­லினால் விசா மறுக்­கப்­பட்­டமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்­கான ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேய அவர் இவ்­வாறு கூறினார்.

கொழும்­பி­லுள்ள பலஸ்தீன் தூத­ர­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்து விளக்­க­ம­ளிக்­கையில்;

இஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடாகும். பலஸ்தீன் மக்­களை அடி­மைப்­ப­டுத்தும் நாடாகும். இலங்­கை­ய­ரான எமக்கு பலஸ்­தீ­னுக்கு செல்­வ­தற்கு விசா மறுக்­கப்­பட்­டமை அநீ­தி­யாகும். ஏன் எமக்கு விசா வழங்­க­வில்லை. நாங்கள் நிச்­ச­ய­மாக பலஸ்­தீன மக்கள் சுதந்­திரம் பெற்­றுக்­கொள்ளும் வரை அவர்­க­ளுக்­காக குரல் கொடுப்போம். ஆத­ர­வ­ளிப்போம்.

இஸ்ரேல் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக உலகில் மக்­களைத் திரட்­டு­வ­தற்­கான எமது முன்­னெ­டுப்­புகள் தொடரும். வரு­டாந்தம் பலஸ்­தீனில் நடை­பெறும் மாநாட்­டுக்குச் செல்­வ­தற்கு விசா கோரியே நான் விண்­ணப்­பித்­தி­ருந்தேன். நான் இலங்­கையன். பயங்­க­ர­வா­தி­யல்ல. கரு­ணை­யைப்­போ­திக்கும் ஒரு மதத்­துக்குச் சொந்­தக்­காரன். ஆனால் எனக்கு இஸ்ரேல் விசா­வினை மறுத்­து­விட்­டது.

இதி­லி­ருந்து இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு பயங்­க­ர­வாதம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையர்கள் நாம் குரல் கொடுப்போம் என்றார்.

நிகழ்வில் பலஸ்தீனின் இலங்கைக்கான தூதரக அதிகாரி ஹிசாம் அபூ தாஹாவும் கலந்துகொண்டிருந்தார்.

-Vidivelli

1 comment:

  1. Isreal terrorist is the only reason Muslims suffering all over the world. If we want peace to be prevail in the world we have to eradicate Israel from this world.

    ReplyDelete

Powered by Blogger.