Header Ads



ஹபாயா விவகாரம், அமைச்சர்களுக்கு செல்கிறது..!


திருகோணமலை  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர்க் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று  வரும் சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தற்போது இந்த கல்லூரியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலைக்குள் பாடசாலை அதிபரின் அனுமதி இன்றி நுழைந்து பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளுக்கு யார் குழப்பம் விளைவித்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. பாடசாலையில் அக்கறைகொண்ட பெற்றோர் என்ற ரீதியில் இந்த நடவடிக்கையை கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் நடாத்துவதிலும் தவறில்லை.

ஆனாலும் சண்முகா இந்து மகளிர்க் கல்லலூரியில் இன்று நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் அதன் நோக்கங்களை தாண்டி இனவாதத்தை தூண்டுவதாகவே அமைந்தது வருத்தமளிக்கிறது.

அந்த பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அணியும் ஆடை விடயத்தில் ஏதாவது பிரட்சினை காணப்படின் அதை கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் பேசி சுமூக தீர்வொன்றை கண்டிருக்கலா.ம் ஆனால் இந்த பிரட்சனையை இந்த அளவு பூதாகரமாக்கிய பாடசாலை நிர்வாகம் ,சம்மந்தப்பட ஆரியர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆடை அணியும் சுதந்திரம் தனிமனித உரிமை சார்ந்தது. முஸ்லிம் பாடசாலைகளில் பல தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதுவரை அந்த ஆசரியர்களை முஸ்லிம் கலாசார ஆடைகளை அணியுமாறு பாடசாலை நிர்வாகம் கூறியதாக நான் அறியவில்லை. அத்துடன் தமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசார ஆடைகள் அணிய வேண்டுமாயின் ஆசிரியர்கள் காட்சட்டை அணியாமல் வேட்டி சட்டி அணித்துவருமாறும் யாரும் கூறியதில்லை.

நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் “இந்து பாடசாலை இந்துக்களுக்கே” என எழுதி எழுதி இருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு “பௌத்த நாடு பௌத்தர்களுக்கே” என கூறியதால்தான் முப்பது வருட யுத்தம் நடைபெற்றது என்பதை பதாகையை ஏந்தியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அன்று சிங்கள மக்கள் உங்களுக்கு செய்ததுக்கும் பதாகையை ஏந்தியவர்கள் சொல்ல வருவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

நாடுமுழுவதிலும் பல முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் மாணவர்களும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வி கற்பதை நாம் உணர்ந்து அவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த பிரட்சனைக்கு சுமூக தீவோன்ரை நாம் கான வேண்டும்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில்விராஜ் காரியவசம், சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவுடன் இன்று கலந்துரையாடியுள்ளேன். இந்த பிரட்சனைக்கு  உரிய தீர்வை எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்போடும் கலந்துரையாடி பெறமுடியும் என நாம் நம்புகிறேன்.

அதுவரை இனவாதத்தை தூண்டும் பிரச்சாரங்களில் இருந்து விலகி இன ஒற்றுமையை சீர்குலைக்கா வண்ணம் செயற்படுமாறு இருதரப்பினருக்கும் நாம் வேண்டுகோள்விடுக்கிறேன்

5 comments:

  1. This is not a sudden incident Mr. Mahroof.
    fully planned by SivSena like Hindutva parties..ve vigilant
    To all Tamil friends.. Dont let Lanka to become like India

    ReplyDelete
  2. “Man in The early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is regressive back to ancient TIMES.”

    ReplyDelete
  3. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் மேற்படி கருத்து உண்மையில் வரவேற்கத்தக்கது. அக்கருத்துக்களைத் தோற்கடிப்பதற்கு எந்த நியாயமான கருத்தும் இருக்கமுடியாது.
    இங்கு தமிழ் மக்கள் கூறுவது நியாயம் என்றால் பெரும்பாண்மை சிங்கள மக்களின் நிலைப்பாடும் நியாயமானது என்பதைத்தான் இங்கு தமிழர்கள் உணர்த்தியுள்ளனர். மேலும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் மடமைத்தனமும் கேலிக்கூத்தும் மிக்கது என்பதை அவர்களே நிறுவிவிட்டனர். மேற்கொண்டு எக்கருத்தும் அவசியமில்லையென நான் நினைக்கின்றேன்.

    ReplyDelete
  4. முஸ்லிம் அரசியல்வாதிகள் திரைக்கு பின்னால் தமிழர்களுக்கு எதிராக கள்ள வேலைகளும், துரோகங்களும் செய்வதால் தான், இப்படியான பிரச்சனைகளுக்கு ழூலகாரணம்.

    ReplyDelete
  5. தனது இனம் என்ற போர்வைக்குள் முழு இலங்கையையும் காட்டிக்கொடுத்து வயிற்றுப் பிழைப்பு நடாத்துவதை அன்றைய ராமநாதன் முதல் இன்றைய சம்பந்தன் வரையான தமிழ் தலைமைகளின் வாடிக்கையாகிவிட்டது. இதை உணர முடியாத மூளைப் பதர்களுக்கு( அந்தோனிமற்றும் சந்திரபோல்) ஒன்றிணைந்த தேசியத்திற்காக இணைந்து செல்லும் முஸ்லிம்களுடன் குரோதம் கொள்வது ஒன்றும் புதிதல்ல.

    ReplyDelete

Powered by Blogger.