Header Ads



ரமழான் வருகிறது, கஞ்சி கொடுப்பது பர்ளா..?


*வித்தியாசமாக சிந்திப்போமே!*

ரமலான் நெருங்கிட்டா  اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان என்ற துஆ ஒரு பக்கத்துல.

மருபக்கம் கஞ்சிக்கு தயாராகுது இன்னொரு கூட்டம்.

மூன்றாவது ஒரு கூட்டம் ரமலான் பயான் லிஸ்ட் போட தொடங்கிட்டாங்க. 

நான்காவது ஒரு கூட்டம் வழக்கம்போன்று இவ்வருடமும்  பெBனருடன் இப்தார் ஏற்பாடுகள் செய்து அதில் சுற்றி சுற்றி Photo எடுக்க ஆலோசனை செய்யவும் தயாராகி இருப்பார்கள்.

கஞ்சி கொடுக்குறத இப்தார் கொடுப்பதை பர்லாக நினைக்கும் நமது சமூகம் அதே பணத்தை சேகரித்து ஊரிலுள்ள ஏழைகளுக்கும் பொது சேவைகளுக்கும் நம் சமூக கல்வி வளர்ச்சிக்காகவும் செலவு செய்யுமாக இருந்தால் காலப்போக்கில் எவ்வளவு முன்னேற்றத்தைக் காணலாம்????

எத்தனை ரமலானில் கஞ்சி கொடுத்துட்டோம்? 

ரமலானில் எத்தனை பயான் லிஸ்ட் போட்டு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்? 
ஒவ்வொரு ரமலான் முடியும் போதும் நம் சமூகத்தில் என்ன மாற்றத்தை கண்டுள்ளோம்? காணவில்லையே. இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போமே!

*நிர்வாகிகள் முன்னோக்க வேண்டிய பிரச்சனைகள்*

ஊரில் ஏது நடந்தாலும் நிர்வாகத்தினரை விமர்சனம் செய்பவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

ஊரிலுள்ள ரமலானில் பயான் கேட்டு பழகிய வயது முதிர்ந்தவர்கள் விஷேட  பயான் இல்லையென்றால் அதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். தாருமாராக விமர்சனத்தை கொட்டுவார்கள். 

வழமையான இப்தார் ஏற்பாடுகளை செய்பவர்களோடும் சில மனக்கசப்புகளை சந்திக்க நேரிடும். 

*என்ன தீர்வு?*

1) உலகில் பொதுச்சேவைகள் செய்பவர்களுக்கு அல்குர்ஆன் கூறும் மிகப்பெரிய உபதேசம் இதோ 

லுக்மான் (அலை) தனது மகனுக்கு " என் அருமை மகனே!  தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி தீமையை தடுப்பாயாக.  உனக்கு ஏற்படும் கஷ்டங்களின் போது பொறுமைை காப்பாயாக." (சூரா லுக்மான்).

அதாவது சமூகத்தில் பொதுச்சேவைகளை செய்யும்போது விமர்சனங்கள் வருவது நிச்சயம். எனவே அதை 100% தடுக்க முடியாது. இதை அனைவரும் புரிந்துகொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். 

2) இவ்வாறு செய்வதால் ஏற்படும் மாற்றங்களை மிக மிக தெளிவாக நிதானமாக ஆழமாக ஊர்மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். 

*இதை விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் விரைவார்களே!*

பயானே வேண்டாம், இப்தாரே வேண்டாம்    என்பது கருத்து அல்ல மாற்றமாக சிலவுகளை குறைப்போம். ஒவ்வொரு பள்ளியிலும் இமாம்களை வைத்து அல்லது ஊர் உலமாக்களை வைத்து பயான்களை செய்யலாமே!

இதை அதிகம் அதிகம் பகிருங்கள். இம்முறை ஒரு ஊரிலாவது ஒரு மாற்றம் நடந்தால் எல்லா ஊரிலும் மாற்றம் உண்டாக அதுவே போதும்.

-அபூ அப்தில்லாஹ்-

2 comments:

  1. It's not compulsory to stop above mentioned things to be stopped to do social work. If plan properly xan do many things without disturb traditions

    ReplyDelete
  2. கஞ்சி கொடுப்பது பர்ளல்ல.. ஆனால் அது ஒரு சதகா... நாம் கொடுக்கும் இந்த கஞ்சியினை நோன்பு திறக்கும்போது குடிக்கும் எத்தனையோ சகோதரங்கள் அதனை இரவு வேளைக்கான ஆகாரமாக ஆக்கிக் கொண்டுள்ளனர். ..
    எனவே. ...
    சதகாவினை அதிகம் செய்து நன்மைகளை அதிகரிக்க வேண்டிய இம்மாதத்தில் கஞ்சியில் கஞ்சத்தனம் காட்டலாமா?...

    உங்கள் வித்தியாசமான சிந்தனையை வரவேற்கின்றோம்.. அதனை வேறு விதத்தில் நடைமுறைபடுத்தலாமே!..

    அழ்ழாஹ் குர்ஆனில் "உண்ணுங்கள் பருகுங்கள்..வீண் விரயம் செய்யாதீர்கள்" என எச்சரிக்கின்றான். அதேவேளை ரசூல் (ஸல்) அவர்களும் வீண்விரயத்தினை தடுத்துள்ளார்கள்.
    எனவே ..
    இம்முறை நாம் வீண் விரயத்தை தவிர்த்து அதனை ஏழைகளுக்கு பங்களிப்பு செய்து வாழ்வதில் கவனம் செலுத்தலாமே...
    இம்முறை ரமழானில் உணவிலும் சரி எடுக்கும் உடுப்பிலும் சரி வீண்விரயங்களை தவிர்த்து எமது சமூகத்தில் உள்ள நோன்பு நோற்கும் ஏழைகளை அடையாளம் கண்டு கூட்டு முயற்சியாக அனைத்து இயக்கங்களும் சேர்ந்து உதவலாமே!..

    நாம் செய்யும் நல்ல அமல்களும் நிரந்தர தர்மமும் மட்டுமே மரணத்தின் பின் எமக்கு பயன்தரும்.

    எனவே.
    சிந்திப்போம் ...

    ReplyDelete

Powered by Blogger.