Header Ads



ஐ.தே.க. க்கு ஜனாதிபதி எச்சரிக்கை, நெத்திடியடி கொடுத்த மங்கள

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகங்கள், இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐதேகவினரிடம் மைத்திரிபால . எச்சரித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்து தொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை  வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கட்டத்தில், 2015 அதிபர் தேர்தலில்  மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதை, அமைச்சர் மங்கள சமரவீர நினைவுபடுத்தியுள்ளார்.

2 comments:

  1. biggest political joker we have ever got as a president.

    ReplyDelete
  2. அப்போ சிறு பான்மை மக்கள் இவர்களுக்கு வாக்கு போட மட்டும்தான் தேவை ஜனநாயக வேளைகளில் பங்கடுக்க கூடாது இனவாதாம் கக்கும் இந்த அரச தலைவர்கள் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது.ஏன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த நாட்டு பிரஜை இல்லையா இவர்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா? தனக்கு தேவை என்றால மட்டும் கரி வேப்பிலை தேவை முடிந்தால் வீசுவது வேறு யாருக்கும் பிரயோசனம் ஆக கூடாது இதுதான் இவர்களை முடிவு.பிரதமரை தோல்வியடைய செய்வதில் பல வலிகளை கையாளலாம் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை நீங்கள் உபயோகிக்க கூடாது என்று தென்னிலங்கை பற்றி இனவாதத்தோடு கலந்து பிர்த்து பார்பதான கருத்து எவ்வகையிலும் சிறந்தது இல்லை

    ReplyDelete

Powered by Blogger.