Header Ads



பிரித்தானிய பாராளுமன்றத்தில், ஆசிபா குறித்து பேச்சு

இந்தியாவில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி பிரித்தானியா பாரளுமன்றத்தில் பேசியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியான ஆஷிபா மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து கிடந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி சிறுமியை கொடூரமாக கொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாரளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் எம்.பியான Ahmed ஜம்மு காஷ்மீரில் சிறுமியான ஆஷிபா மிகக் கொடுமையான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் பிரித்தானியா அரசு இது குறித்து தலையீட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரித்தானியா அரசு சார்பில் Baroness Stedman-Scott, இந்தியாவில் இது போன்ற விடயங்களுக்கு மனித உரிமைகளை நிலைநாட்ட ஜனநாயக கட்டமைப்பு பலமாக உள்ளது.

இந்திய பிரதமரான நரேந்திர மோடி சிறுமி ஆஷிபா விவகாரத்தில் நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.