Header Ads



அரச கரும மொழிகள் ஆணைக்குழு தலைவராக, பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம்

பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரத்தை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக, நியமிப்பதை எண்ணி மகிழ்வடைவதாக அமைச்சர் ​மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வியியல்துறையில் பேராதனை பல்கலைக்கழக, ஹிரோஷிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியும், கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல்துறை முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவரும், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய, மற்றும்  கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும்  தமிழ், ஆங்கில, சிங்கள மொழி புலமைகள் கொண்டவருமான, பேராசிரியர் சோமசுந்தரத்தை, 1991 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு, முதன்முதலாக தமிழர் ஒருவரை நியமித்துள்ளதையிட்டு, பெருமகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

1 comment:

  1. இச் சிறு தீவின் எத்திக்கிலும் தமிழ் பேசுவோர் தம் அனைத்து அரச சேவைகளையும் தமிழிலேயே பெற்றுக்கொள்ள முத்தான உங்கள் பதவிகள் கைகொடுக்கும் என்றால் அதைவிட இனிப்பான செய்தி வேறு கிடையாது!  வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.