Header Ads



இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது, அவர் தகுதியானவரா என தேடிப்பாரப்பேன்

நாட்டு  மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான   புதிய  அமைச்­ச­ர­வையை  உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன்.   புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்­கும்­போது அமைச்சுப் பதவி வழங்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் சர்­வ­தேச  பிர­தி­ப­லிப்பு குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  தெரி­வித்­துள்ளார். 

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  லண்­ட­னுக்கு சென்­றி­ருந்­த­போது அங்கு பி.பி. சி. சிங்­கள செய்தி சேவைக்கு நேற்று முன்தினம் வழங்­கிய  செவ்­வி­யி­லேயே  இந்த விட­யத்தை குறிப்­பிட்­டுள்ளார்.  அதில்  அவர்  மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

புதிய அமைச்­ச­ர­வைக்கு  அமைச்­சர்­களை நிய­மிக்­கும்­போது அவர்­களின் உள்­நாட்டு நிலைமை மட்­டு­மன்றி சர்­வ­தேச  பிர­தி­ப­லிப்பு குறித்தும் ஆரா­யப்­படும்.  

அண்­மையில்  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பத­விக்­கான  நிய­ம­னத்­தின்­போது சர்­வ­தேச நிலை­மை­க­ளையும் பார்க்­க­வேண்­டிய  தேவை எனக்கு இருந்­தது. 

எந்­த­வொரு விட­ய­மா­னாலும்    ஒரு அமைச்­சரை நிய­மிக்­கும்­போது அவர் சர்­வ­தேச  ரீதி­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­ப­வ­ராக இருக்­க­வேண்டும்.  

தற்­போது அமைச்­ச­ரவை  மாற்றம்  இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. மாறாக   புதிய  அமைச்­ச­ர­வையை  உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். நாட்டு  மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான   புதிய  அமைச்­ச­ர­வையை  உரு­வாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன் என்றார். 

இதன்­போது  புதிய அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்கை குறித்து   பி.பி. சி. செய்­தி­யாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  அதற்கு இன்னும் ஒரு­வார காலம் உள்­ளது என்று குறிப்­பிட்டார். 

மேலும்  குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாகி  பதவி விலக்­கப்­பட்ட அமைச்­சர்­களை மீண்டும் நிய­மிப்­பதா இல்­லையா என்­பது குறித்து அர­சியல் கட்­சி­களே  தீர்­மானம் எடுக்கவேண்டும்.  

நான் இம்முறை  அமைச்சர்களை நியமிக்கும்போது அவர் அந்த பதவிக்கு   தகுதியானவரா என்பது குறித்து தேடிப்பாரப்பேன்.   அதன்படி  மக்கள் நம்பிக்கை வைக்கும்  வகையிலான அமைச்சரவையை    நியமிப்பேன் என்றார். 

1 comment:

  1. first of all you are not suitable for president post.

    ReplyDelete

Powered by Blogger.