Header Ads



இலங்கையர் அனைவருக்கும், இலத்திரனியல் சுகாதார அட்டைகள்

இலங்கையர் அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் சுமார் 21 மில்லியன் இலத்திரனியல் சுகாதார அட்டைகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலத்திரனியல் சுகாதார அட்டைகளின் அறிமுக வைபவம் கடந்த 07ஆம் திகதி உலக சுகதார தினத்தில் தாமரைத் தடாகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், இலங்கையர் அனைவருக்கும் அவரவரின் நோய், சிகிச்சை விபரங்கள், இரத்த வகை என்பன போன்ற சுகாதார தகவல்களை உள்ளடக்கிய இலத்திரனியல் சுகாதார அட்டைகளை விநியோகிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்த நடவடிக்கையை பூரணப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை மூலம் நோயாளிகளுக்கு விரைவானதும், தரமானதுமான சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.