April 10, 2018

"தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வதா, இல்­லையா என ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும்"

ஐக்­கிய தேசிய கட்சி மாத்­திரம் தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­க­வில்லை . ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்­களின் பங்­க­ளிப்­பு­ட­னேயே ஆட்சி அதி­காரம் காணப்­ப­டு­கின்­றது என  அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

எமக்கு எதி­ரான கருத்­துக்­களை தெரி­விக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் உறுப்­பி­னர்கள் தாம் வந்த பாதையை  மறந்து செயற்­பட கூடாது. தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வதா இல்­லையா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார். 

சுக­த­தாஸ விளை­யாட்டு மைதா­னத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அமைச்சர்  தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த 60 வரு­ட­கா­ல­மாக ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் பாரிய முரண்­பா­டுகள் காணப்­பட்­டன. இதன் கார­ண­மாக பல தேசிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் தோல்­வி­யினை கண்­டன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­னைந்து தேசிய அர­சாங்­க­மாக நாட்டின் நிர்­வா­கத்­தினை முன்­னெ­டுத்து செல்­வது சிறப்­பான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்­தினை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றார். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினை தனி­மைப்­ப­டுத்தும் கருத்­துக்­களை பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் பின்னர் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

ஐக்­கிய தேசிய கட்சி மாத்­திரம் தேசிய அர­சாங்­கத்­தினை உரு­வாக்­க­வில்லை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 42 உறுப்­பி­னர்கள் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வினை அடிப்­ப­டை­யாக கொண்டே தேசிய அர­சாங்கம் தோற்றம் பெற்­றது  என்ற விட­யத்­தினை மறந்­து­விடக் கூடாது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 6 உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­யதன் பின்னர் இரண்டு கட்­சி­களும் தொடர்ந்து செயற்­ப­டுமா என்ற சந்­தேகம் தோற்றம் பெற்­றுள்­ளது. பிணை­முறி விவ­கா­ரத்­தினை மையப்­ப­டுத்­தியே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. குறித்த பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­கி­யமை எமது தனிப்­பட்ட விடயம்.  இதில் எவ்­வித கட்சி அழுத்­தங்­களோ, அர­சியல் உள்­நோக்­கங்­களோ கிடை­யாது.

தேசிய அர­சாங்­கத்தில் எனது பொறுப்பில் காணப்­பட்ட  விளை­யாட்­டுத்­துறை தற்­போது பாரிய முன்­னேற்­றத்­தினை அடைந்­துள்­ளது. கடந்த காலங்­களில் சில வரை­ய­றை­க­ளுக்­குட்­பட்ட நிலையில் காணப்­பட்ட விளை­யாட்­டுத்­துறை தற்­போது நாடு­த­ழு­விய ரீதியில் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எமக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை மறந்து செயற்பட கூடாது. தேசிய அரசாங்கம் தொடர்ந்த செயற்படுமா என்ற விடயத்தினை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment