Header Ads



சு.க.யின் மேதின ஏற்பாட்டுக் குழு, தலைவராக ஹிஸ்புல்லாஹ்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடிவெம்புக் கிராமத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

எதிர்வரும் 7ஆம் திகதி சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இடம் பெறும் இக்கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளுக்கும் பொறுப்பான ஏற்பாட்டுக்குழுவின் தலைவராக தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக புதன்கிழமை 25.04.2018 இந்த விவரங்களைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஏற்ற மேதினக் கூட்டத்திற்கான ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதற்காக ஜனாதிபதியால் எனது தலைமையில் நியமிக்கப்பட்ட குழு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்தது.

கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் கூட்டத்தில் பங்குபற்ற வரும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்களை அழைத்து வருவதற்காக சுமார் 1500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெளியூர்களிலிருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

தமிழ் பேசும் சமூகத்திற்கு ஸ்ரீலஙடகா சுதந்திரக் கட்சி மதிப்பளித்து இந்த தொழிலாளர் தினத்தை தமிழ் பேசும் பிரதேசத்தில் நடாத்துகின்றது.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் பெருந்தேசிய பூர்வீகக் கட்சியொன்று அதனது மேதினக் கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் நடாத்துவது இதுவே முதற்தடவையாகும்.


2 comments:

  1. Mr. Hisbullah don't betray your community for this puppet.

    ReplyDelete
  2. ஹிஸ்புல்லாஹ் அவர்களே, முஸ்லீம் சமூகத்துக்கும் உங்களது அரசியல் பயணத்துக்கும் எப்பவுமே முரண்பாடாகவே உள்ளது. சற்று திரும்பிப் பாருங்கள். ஏறாவூருக்கு எம்பி என்ற, தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி, மொஹிடீன் அவர்களுக்கும் ஏறாவூருக்கும் செய்த வாக்குறுதி மீறல் தொடக்கம், சென்ற ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவுக்கு ஆதரவளித்ததில் வரைக்கும் சமூகத்துடன் முரண்பாடாகவே இருந்துள்ளீர்கள். சரி போனாப்போகுது என்று பார்த்தல் இப்ப என்ன நடக்கிறது. மைத்ரி முஸ்லிம்களின் மாபெரும் நஞ்சாகவே அவரை நாம் பார்க்கிறோம். பலசேனாக்களுடனும், சிங்கள இனத்துவேசிகளுடனும் நல்ல இணக்கமாகவே இருக்கிறார். ஆனால் நீங்களோ அவருடன் இணக்கமாக இருக்கிறீர்கள், நல்லா அனுபவிக்கிறீர்கள். அடுத்த தேர்தலில் இவரை முஸ்லிம்கள் நம்புவது அரசியல் தட் கொலைக்கு சமமானது ஆகும். ஆக நீங்கள் எப்படியும் எதோ ஒருவருக்கு துரோகியாகவே கருதப்படுவீர்கள். அடுத்தது மைத்திரிக்கு எங்கேயுமே கூட்டம் சேராது அதனால் இது உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் யதார்த்தம். இனியாவது சமூகத்துடன் சேர்ந்து பயணிப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள இந்த மேதின கூட்ட பொறுப்பு வெற்றிகரமாக நடந்தேற எமது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.