Header Ads



ஐ.தே.க.யின் அரசியல் பீடத்தில், முஸ்லிம்களுக்கு இடமில்லை

அண்மையில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் பீடம், நாளைய தினம் முதன்முறையாக சந்திக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இந்த குழு கடந்த வாரம் உருவாக்கப்பட்டது.

இதன் முதலாவது கூட்டம் நாளை நடைபெறுகின்ற போதும், இதில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளே இடம்பெறும் என்றும், முக்கியமான தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இல்லை என்றும் குறித்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நாளையதினம் பிரதமரை சந்திக்கவிருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க.யின் அரசியல் பீடத்தில்இ முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

முன்னாள் செயலாளர் கபீர் காசிமுக்கு இடம்கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் அவரைவிட இளயவர்களுக்கு இடம் கிடைத்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.