Header Ads



முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான சம்­பவங்கள், முடி­வுற்­று­விட்­ட­தாக எண்­ணி­வி­ட­லா­காது - ஹஜ்ஜுல் அக்பர்

மஸ்­ஜி­து­களை நிர்­மா­ணிக்க செல­விடும் இலட்சக் கணக்­கான நிதியைக் கொண்டு முஸ்லிம் சமூ­கத்தின் தேவை­யாக உள்ள தமிழ், சிங்­கள ஊடக நிறு­வ­ன­மொன்றை ஏற்­ப­டுத்­தலாம் இதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பய­னுண்டு என்று ஜமா­அத்தே இஸ்­லாமி அமீர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் தெரி­வித்தார்.

ஜமா­அத்தே இஸ்­லாமி உக்­கு­வளை கிளையின் சமூ­க­சே­வைப்­பி­ரிவு, ‘இன்­றைய பாடங்­களும் இனி­யுள்ள கட­மை­களும்’ என்ற தலைப்பில் உக்­கு­வளை அஜ்மீர் தேசிய பாட­சாலை புதிய பிர­தான மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்த இந்­நி­கழ்வில் உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கூறி­ய­தா­வது,

அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வா­தி­களின் செயற்­பா­டு­களால் முஸ்­லிம்கள் சேதங்­களை எதிர்­கொண்­ட­துடன் அச்ச நிலை­மைக்­குள்­ளா­னார்கள். கடந்த கால கிரீஸ் மனிதன் விவ­கா­ரமும் அவ்­வா­றா­னதே. எமது இளை­ஞர்கள் சம்­பந்­தப்­பட்ட திகன சிறிய சம்­பவம் பார­தூ­ர­மான சம்­ப­வ­மாக அமைந்­து­விட்­டது. முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இவ்­வா­றான சம்­பவம் இத்­துடன் முடி­வுற்­று­விட்­ட­தாக எண்­ணி­வி­ட­லா­காது. மே-லும் இதற்குக் கார­ண­மா­ன­வர்­களை விமர்­சிப்­ப­திலும் பய­னில்லை. அவ்­வப்­போது இடம்­பெறும் இது­போன்ற சம்­ப­வங்கள் மூலம் முஸ்லிம் சமூகம் பெற்­றுக்­கொண்ட பாடம் என்­ன­வென்­பதைப் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இன­வா­தி­களோ மற்­ற­வர்­களோ முஸ்­லிம்­களின் செயற்­பா­டு­களில் எவற்றைக் கண்டு எரிச்­ச­ல­டை­கி­றார்­களோ அவற்­றையும் அவர்­களால் வெளி­யி­டப்­படும் பொய்கள், அவ­தூ­று­க­ளையும் இஸ்லாம் பற்றி அவர்கள் கொண்­டுள்ள தவ­றான கருத்­துக்கள் என்­ப­வற்­றையும் வகைப்­ப­டுத்தி அவை­களைச் சீர்ப்­ப­டுத்தி நல்ல சூழலை ஏற்­ப­டுத்திக் கொள்­வதில் காத்­தி­ர­மான முயற்­சி­களை மேற்­கொள்­வதே இன்­றைய நிலை­மைக்­கான வழி­யாகும்.

திகன சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பலரும், சில சமூக அமைப்­புக்­களும் நிவா­ரணப் பொருட்­களைச் சேக­ரித்து எடுத்துச் சென்று வழங்­கினர். எனினும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் ஏற்­ப­டா­தி­ருக்கும் வகையில் முஸ்­லிம்­க­ளது ஒன்­றித்த மற்றும் நல்­லெண்ண பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளுக்­கான சம­யோ­சித செயற்­பா­டுகள் அமை­வ­தில்லை. முஸ்லிம் சமூகம் சுன்­னத்­தான விட­யங்­க­ளுக்­கான ஜமா­அத்­துக்கள் பிரச்­சி­னை­பட்டுக் கொள்ளும் நிலை­யையும் காண­மு­டி­கி­றது.

திகன சம்­பவம் பாரி­ய­தொரு சம்­ப­வ­மாக அமைந்­தது. இச்­சம்­பவம் பற்றி ஊட­கங்கள் வெளி­யிட்ட தக­வல்­களால் நம் நாட்டில் மட்­டு­மல்ல வெளி­நா­டு­க­ளிலும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யதை மறந்­து­வி­ட­மு­டி­யாது. அந்­த­ள­வுக்கு இச்­சம்­பவம் பிர­பல்­ய­மாக்­கப்­பட்­டது. இன­வா­திகள் மட்­டு­மன்றி அவர்­க­ளுடன் தொடர்பு கொண்­ட­வர்­க­ளையும் சிந்­திக்க வைத்­து­விட்­டது என்றே சொல்ல வேண்டும். இன்­றைய சூழலில் சக்­தி­மிக்­க­தாக இருப்­பது ஊட­கங்கள் தான். ஊட­கங்­களால் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் முடியும் 

நம் நாட்டில் பல்­வேறு பத்­தி­ரி­கைகள், தொலைக்­காட்சி போன்ற ஊட­கங்கள் இயங்­கு­கின்­றன. அவற்றில் அவ­ரவர் தக­வல்கள், கருத்­துக்கள் என இன்­னோ­ரன்­னவை வெளி­யி­டப்­ப­டு­வதை பார்த்து மக்கள் பய­ன­டை­கின்­றனர். இந்­நி­லையில் நமது உண்­மை­மிக்க கருத்­துக்கள், சிந்­த­னைகள், தக­வல்கள் நிலை­மை­களை உல­க­றிய எடுத்துச் செல்­வ­தற்கு ஊட­கத்தின் அவ­சி­யத்தை விளங்க முடி­கி­றது. எனவே அதனைக் கருத்தில் கொண்டு மஸ்­ஜி­து­களை நிர்­மா­ணிக்கச் செல­விடும் இலட்சக் கணக்­கான நிதி­யைக்­கொண்டு முஸ்லிம் சமூ­கத்­துக்கு அவ­சியத் தேவை­யான தமிழ் சிங்­கள ஊடக நிறு­வ­ன­மொன்றை ஏற்­ப­டுத்­து­வது முஸ்லிம் சமூ­கத்­துக்குப் பயன்­தரும். அது பத்­தி­ரி­கை­யாக, தொலைக்­காட்­சி­யாக இருக்­கலாம்.  

முஸ்­லி­க­ளுக்கு அல்லாஹ் நல்ல வளங்­களை வழங்­கி­யுள்ளான். அத்துடன் நம்மில் படித்தவர்கள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள், விற்பன்னர்கள், எழுத்தாளர்கள், பணவசதியுள்ளவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், திறமைசாலிகள் மற்றும் அரசியல்வாதிகள் என நிறையவே இருக்கின்றனர். அதற்காக இவர்களது பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். தேவையாயின் அதற்கான பயிற்சிகளையும் வழங்கி அவர்களை ஊக்குவிக்கலாம் திட்டமிட்டுச் செயற்பட்டால் முடியாதது எதுவுமில்லை என்றார்.  

2 comments:

  1. மிகவும் அவசியமான விடயம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகம் கவனத்தில் எடுத்து அவசரமாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும்.


    ReplyDelete
  2. கடந்த 30 வருடங்களாக பேசி வரக்கூடிய முஸ்லீம் ஊடக விடயம் தற்போது சாத்தியப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது .

    ReplyDelete

Powered by Blogger.