April 26, 2018

மலே­சி­யாவில் பலஸ்தீன விரிவுரையாளரைக் கொன்றவர்கள், விலை செலுத்த வேண்டிவரும் - ஹமாஸ்

-M.I.Abdul Nazar-

மலே­சி­யாவில் பலஸ்­தீன விரி­வு­ரை­யா­ளரும் மின்­சாரப் பொறி­யி­லா­ள­ரு­மான பாதி மொஹமட் அல்-பத்ஷ் படு­கொ­லையின் பின்­னா­லுள்ள அனைத்துக் கார­ணங்­க­ளையும் கண்­ட­றி­யாமல் விட­மாட்டோம் என பலஸ்­தீன ஹமாஸ் அமைப்பின் அர­சியல் பணி­ய­கத்தின் தலைவர் இஸ்­மாயில் ஹனியாஹ் தெரி­வித்­துள்ளார்.

அல்-­பத்ஷை படு­கொலை செய்­த­வர்கள் அதற்­கான விலை­யினைச் செலுத்­தி­யே­யாக வேண்டும் என பலஸ்­தீன தகவல் மத்­திய நியைத்தின் செய்தி இணை­யத்­த­ளத்­திற்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ணலில் ஹனியாஹ் தெரி­வித்தார்.

அல்-பத்ஷ் படு­கொ­லையின் பின்­ன­ணியில் டெல் அவிவ் அர­சாங்­கமும் இஸ்­ரே­லிய உளவுப் பிரி­வான மொஸாட்டும் இருப்­ப­தா­கவும் இந்த நேர்­கா­ண­லின்­போது இஸ்­மாயில் ஹனியாஹ் குற்றம் சாட்­டினார்.

அல்-பத்ஷ், பலஸ்­தீ­னர்­க­ளி­டையே சிறந்த பிர­தி­நி­தி­யாக இருந்தார். அவ­ரது அறிவு, பணி, தொழில்­பாங்கு, ஆக்­கத்­திறன் மற்றும் கண்­டு­பி­டிப்­புக்கள் நன்­றிக்­கு­ரி­யன. அவர் பலஸ்­தீ­னர்கள், மலே­சி­யர்கள் மற்றும் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் பெறு­ம­தி­மிக்க சேவை­யினை வழங்­கி­யி­ருந்தார் எனவும் ஹமாஸ் தலைவர் சுட்­டிக்­காட்­டினார்.

35 வய­தான பாதி மொஹமட் அல்-பத்ஷ் மலே­சியத் தலை­நகர் கோலா­லம்­பூரில் இடாமன் புட்­டே­ரியில் அமைந்­துள்ள தனது இல்­லத்தில் வைத்து சக்­தி­வாய்ந்த மோட்டார் சைக்­கிளில் வந்த இரு துப்­பாக்­கி­தா­ரி­களால் கடந்த சனிக்­கி­ழமை சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக மலே­சியப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சந்­தேக நபர்கள் 10 துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துள்­ளனர். அவற்றுள் நான்கு விரி­வு­ரை­யா­ளரின் தலை மற்றும் உடலில் தாக்­கி­யி­ருந்­தன. அவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார் என கோலா­லம்பூர் தலைமை பொலிஸ் அதி­காரி மஸ்லான் லாஸிமை மேற்­கோள்­காட்டி உத்­தி­யோ­க­பூர்வ பேர்­னமா ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­தது.

பலஸ்­தீன விரி­வு­ரை­யா­ளரின் வரு­கைக்­காக இருவர் சுமார் 20 நிமி­டங்கள் சம்­பவ இடத்தில் காத்­தி­ருப்­பது அவ்­வி­டத்­தி­லி­ருந்த சிசி­ரிவி கரு­வியில் பதி­வா­கி­யுள்­ளது.

'குறித்த விரி­வு­ரை­யா­ளரே அவர்­களின் இலக்­காக இருந்­துள்­ளது. ஏனெனில் அதற்கு முன்­ன­தாக அவ்­வ­ழியால் சென்ற இரு­வ­ருக்கு எவ்­வித பாதிப்பும் அவர்­களால் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை' என அவர் மேலும் தொவித்தார்.

அல் பத்ஷ் மலே­சி­யாவில் 10 வரு­டங்­க­ளாக வசித்து வரு­கின்றார். அதி­காலைத் தொழு­கை­யான சுபஹ் தொழு­கை­யினை நிறை­வேற்­று­வ­தற்கு செல்லும்போதே அவர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். அல் பத்ஷ் தனியார் பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றி வந்தார்.

இத­னி­டையே இக் கொலைக்கு வெளி­நாட்டு முக­வ­ர­மைப்­புக்­களின் தொடர்பு இருப்­ப­தற்­கான சாத்­தியம் உள்­ள­தாக மலே­சியா தெரி­வத்­துள்­ளது.

அல்-பத்ஷ், பலஸ்­தீன விவ­காரம் தொடர்பில் சமூக வலைத்­த­ளத்தில் வெளிப்­ப­டை­யாகக் குரல் கொடுத்து வந்­தவர். பலஸ்­தீ­னர்கள் மீளத் தமது வாழி­டங்­க­ளுக்குச் செல்­வ­தற்­கான நில தினப் போராட்டம் சார்­பான பல டுவிட்டர் பதி­வு­களை அவர் பகிர்வு செய்­தி­ருந்­த­தோடு, இதன்­போது உயி­ரி­ழந்த பலஸ்­தீன ஊட­க­வி­ய­லாளர் யாஸீர் முர்­த­ஜா­வுக்கும் தனது அனு­தா­பத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

கடந்த காலங்­களில் வெளி­நா­டு­க­ளி­லுள்ள பல பலஸ்­தீன செயற்­பாட்­டா­ளர்­களின் படு­கொ­லை­க­ளுடன் இஸ்­ரே­லிய முக­வர்கள் தொடர்­பு­பட்­டி­ருந்­த­தாக நம்­பப்­ப­டு­கின்­றது.

பலஸ்­தீன ஆளில்லா விமான நிபு­ண­ரான மொஹமட் அல் ஸவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி துனி­சி­யாவில் ஸ்பக்­ஸிற்கு வடக்கே ஏழு கிலோ­மீற்றர் தொலைவில் அமைந்­துள்ள எல் எயின் நக­ரி­லுள்ள தனது வீட்­டிற்கு முன்னால் அவ­ரது காரினுள் இருந்த நிலையில் துப்­பாக்­கியால் பல முறை சுடப்­பட்டு கொல்­லப்­பட்டார்.

ஸவாரி தமது அமைப்பில் 10 ஆண்­டு­களே அங்­கத்­த­வ­ராக இருந்­த­தா­கவும், தமது அமைப்பின் ஆளில்லா விமான நிகழ்ச்­சித்­திட்ட கண்­கா­ணிப்­பா­ள­ராக மாத்­தி­ரமே பணி­யாற்­றி­ய­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்த பலஸ்­தீன ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் கஸ்ஸாம் படைப்பிரிவு இக் கொலைக்கு இஸ்ரேலே காரணம் எனக் குற்றம்சாட்டியது.

கடந்த 2010 ஜனவரி 19 ஆம் திகதி சிரேஷ்ட ஹமாஸ் இராணுவத் தளபதியும் கஸ்ஸாம் படைப்பிரிவின் தாபக உறுப்பினர்களுள் ஒருவருமான மஹ்மூத் அப்துல் றஊப் அல் மப்ஹெள ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலுள்ள அல் பஸ்தான் ரொட்டானா ஹோட்டலில் வைத்து மொஸாட் முகவர்களினால் கொல்லப்பட்டார்.

-Vidivelli

0 கருத்துரைகள்:

Post a Comment