April 19, 2018

பள்ளிவாசல்களும், மாற்று மதத்தினரும்


இலங்­கையைப் பொறுத்­த­வரை ஆயிரக் கணக்­கான பள்­ளி­வா­சல்கள் நாடெங்கும் நிறைந்­துள்ள போதிலும் அவை மாற்று மத சகோ­த­ரர்­க­ளுக்­காக திறக்­கப்­ப­டு­வ­தில்லை. அத­னால்தான் அவர்கள் இன்று வரை பள்­ளி­வா­சல்­களை சந்­தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை நீடிக்­கின்­றது. இதனை மாற்று மத தலைவர்களே அடிக்கடி வலியுறுத்துவதை அவதானிக்க முடிகிறது. 

கடந்த காலங்­களில் பள்­ளி­வா­சல்கள் ஆயுதப் பயிற்சி அளிக்­கப்­படும் இடங்­க­ளா­கவும் முஸ்­லிம்­களை வன்­மு­றையின் பால் தூண்­டு­கின்ற இட­மா­க­வுமே இன­வா­தி­களால் சித்­த­ரிக்­கப்­பட்­டன. இன்றும் இவ்வாறுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். அண்மைய கண்டி வன்முறைகளின் பின்னரும் இந்தக் கருத்துக்கள் அதிகம் மேலெழுந்தன.
மேற்கு நாடு­க­ளிலும் மத்­திய கிழக்கு நாடு­க­ளிலும் பள்­ளி­வா­சல்கள் கத­வுகள் எந்­நே­ரமும் திறந்தே வைக்­கப்­ப­டு­கின்­றன. இஸ்லாம் தொடர்­பான சந்­தே­கங்கள் அங்கு நிவர்த்­திக்­கப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் முஸ்­லிம்கள் தொடர்­பா­கவும் இஸ்லாம் தொடர்­பா­கவும் நிலவும் சந்­தே­கங்கள் களை­யப்­ப­டு­கின்­றன. அதனால்தான் அங்கு சாரிசாரியாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் வந்தவண்ணமிருக்கிறார்கள்.

துர­திஷ்­ட­வ­ச­மாக நமது நாட்டில் பள்­ளி­வா­சல்­களை மாற்று மதத்­தி­ன­ருக்­காக திறந்து கொடுக்­கவும் அவர்­களை உள்ளே அழைத்து உப­ச­­ரிக்­கவும் தயங்­கு­கிறோம். ஏன் முஸ்லிம் பெண்­களைக் கூட ரமழான் தவிர்ந்த நாட்களில் பள்­ளி­வா­சல்­களில் அனு­ம­திப்­பதை ஏற்றுக் கொள்ள முடி­யாத மனோ நிலைதான் இன்று நமது சமூ­கத்தில் நீடிக்­கி­றது.

இவ்­வா­றான பிற்­போக்­குத்­த­ன­மான சிந்­த­னைகள் கைவி­டப்­பட வேண்டும். பள்­ளி­வா­சல்கள் நமது பெண்­க­ளுக்­காக மாத்­தி­ர­மன்றி மாற்று மத ஆண்கள் பெண்­க­ளுக்­கா­கவும் திறக்­கப்­பட்டு, அவர்­க­ளது உள்­ளங்­களில் இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் நல்லெண்ணம் வளர இடமளிக்கப்பட வேண்டும்.

இதுவிடயத்தில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற வரையறைகளைப் பேண வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இது தொடர்பில் பத்வா ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில் மஸ்ஜித் வளாகத்தில் இதற்கென்று பிரத்தியேக இடமொன்றை ஒழுங்கு செய்து கொள்தல், இணைவைத்தலுடன் சம்பந்தமான எந்தக் காரியமும் நிகழா வண்ணம் ஏலவே உத்தரவாதப்படுத்திக்கொள்ளல், மஸ்ஜிதைத் தரிசிக்க வருவோருக்கு மஸ்ஜிதின் மகத்துவம் மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றிய தெளிவொன்றை ஆரம்பத்திலேயே வழங்குதல், ஆண், பெண் இருபாலாரினதும் ஆடைகள் ஒழுக்கமான முறையில் இருத்தல், மஸ்ஜிதில் நுழைய விரும்பும் பெண்களுக்கு பிரத்தியேக ஆடையொன்றை ஏற்பாடு செய்தல்,  பாதணிகளுடன் மஸ்ஜிதிற்குள் நுழைவதை அனுமதிக்காதிருத்தல், எவரும் போதையுடன் இல்லாதிருத்தல், எக்காரணம் கொண்டும் தொழுகை மற்றும் ஜுமுஆ போன்ற வழிபாடுகளுக்கு இடையூறு இல்லாததாக இருத்தல்,  றமழானுடைய மாதத்தில் இப்தாருடைய நேரத்தில் அவர்களை அழைக்கும் பொழுது இப்தாருடன் சம்பந்தப்பட்ட வணக்கங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அந்நேரங்களில் அவர்களை அழைப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல் ஆகிய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றைத் தழுவியதாக பள்ளிவாசல்களில் மாற்று மதத்தவர்களை அனுமதிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவது சிறந்தது என வலியுறுத்த விரும்புகிறோம்.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

2 கருத்துரைகள்:

அரபு நாடுகளில் கண்ட கண்ட மாதிரியல்லாம் பள்ளிகள் திறந்து வைக்கப்படவில்லை.மாற்று மத சகோதரர்களுக்கு அனுமதிக்க வேண்டும் ஆனால் அத்து மீறும் வகையில் அனுமதிக்க முடியாது.

Masjid only for praying Allah unbeleavers forbiden who's heart filled with shirk even little it's forbiden to entering inside masjid it's rabbulaalemeens strong order.

Post a Comment