Header Ads



குழந்தையுடன் பரீட்சை எழுதிய பெண்: இப்போது எப்படியிருக்கிறார்..?


ஆப்கானிஸ்தானில் கைக்குழந்தையுடன் பெண்ணொருவர் தேர்வு எழுதிய புகைப்படம் வைரலானது, நம்மில் பலரும் இதை படித்திருப்போம்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜஹன்தாப் அஹம்தி(வயது 25), மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தேர்வு எழுதினார்.

இதை பல்கலைகழக பேராசிரியர் நாசிர் குஸ்ரா வெளியிட வைரலானது, உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவி செய்ய முன்வந்தது.

இதனை தொடர்ந்து, புகழ்பெற்ற காபூல் பல்கலைகழகம் பொருளாதாரம் படிக்க இடம்வழங்கியுள்ளது.

பெண் அரசியல்வாதி ஒருவர் ஜஹன்தாப் அஹம்தியின் கல்விச்செலவை ஏற்றிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது துணை ஜனாதிபதி, ஒரு வருடம் இலவசமாக தங்கிக்கொள்ள வீடு ஒன்றை வழங்கியுள்ளார்.

காபூலில் உள்ள பெண்கள் வெளியே சென்று வர அனுமதி உள்ளது, ஆனால் எனது கிராமம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், படிப்பை முடித்த பின்னர் கிராம பெண்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் அஹம்தி.


No comments

Powered by Blogger.