Header Ads



ரணிலின் வெற்றி, பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பட்டாசுகொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் தேற்கடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் ரணிலுக்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக, ஹட்டன் நகரப்பகுதியில் பட்டாசுகொளுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


2 comments:

  1. பணியாரமும் சுட்டு ஒத்தப்படல் வேண்டும்

    ReplyDelete
  2. why we celebrate ? what we achieved after this govt came to power ? nothing other than losing billions to crooks through central bank and cant even find the address of the master mind singaporean. no peace. economy is dead. law and order dead. the country is almost dead. and we are celebrating. what a shame ? WONDER OF ASIA.

    ReplyDelete

Powered by Blogger.