April 25, 2018

ஹபாயா அணிபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் - மகஜர் கையளிப்பு


பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர்  ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள்  என மிரட்டிய கணவர்கள் மீதும்  குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று (25) திருகோணமலை சிறிசன்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

இதனையடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும், வலயக்கல்வி திணைக்களத்திற்கும் மகஜரொன்றினையும் வழங்கி வைத்தனர்.

அம்மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது 

கல்வி  ஒழுக்கம்  நேர்மை  என்பதை அடிப்படையாகக் கொண்டே நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இயங்குகின்றது. கல்விமாண்களை உருவாக்குதல் என்பதை விட நற்பிரசைகளை உருவாக்க வேண்டும் என்பதே அத்தனை கல்வி நிறுவனங்களினதும் அரசினதும் முதல் நோக்கமாகும்.

பல்லினமக்கள் வாழும் இந்நாட்டில் கடந்தகால பிரிவினைகளையும் அதன்பால் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும் கருத்தில் கொண்டு இனி ஒருபோதும் இவ்வாறான நிகழ்வுகள் குரோதங்கள் வளரக்கூடாது என்பதில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் மிகக்கவனத்துடன் பயணிக்கின்றோம்.

அந்த வகையில் எதிர்கால சந்ததியினர் மத்தியில் அவற்றை மிகக்கவனமான கொண்டு செல்ல வேண்டிய தலையாய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அது பாடசாலைகளின் மூலம் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம் அதன்படி வழி நடத்தப்படுகின்றோம்.

இவ்வாறிருந்தும் இந்நாட்டில் தேசிய கொள்கைகளுக்கமைய பாடசாலைகள் இருமொழியாகவும் மூவினத்திற்கும் என தனித்தனியாக இயங்குகின்றது. இங்கு அரச சட்டதிட்டங்கள்  ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் இனரீதியான பாடசாலைகள் தமது கலாச்சாரம்  சமயம்  பிரதேசம்இ தாபிக்கப்பட்டதன் நோக்கம் என்பவற்றுக்கு அமைய பிரத்தியேக ஒழுங்கு முறைகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்து வருவது ஒன்றும் புதிதல்ல. இந்த ஒழுங்குகளுக்கும் விதிமுறைகளிலும் ஒருவர் தலையிடுவதும் இல்லை குறைத்துமதிப்பிடுவதும் இல்லை. இவை சுமுகமாக சென்றுகொண்டிருக்கும் ஒன்று.

பாடசாலை முதலாம் தர அனுமதியில் கூட அரசு குறித்த சமயப் பாடசாலைகளுக்கு பிறசமயத்தவர் எனின் 5 வீதத்தை மட்டுமே வழங்குகின்றது. அவ்வாறு விரும்பி சேரும் மாணவர்கள் குறித்த பாடசாலையின் நடைமுறைப் பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர்.

சேலை முழு இலங்கைப் பாடசாலைகளிலும் ஒரு பொதுவான ஆடையாக சிறுசிறு வேறுபாடுகளுடன் அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப அணியப்படுகின்றது. இது சுமுகமாக சென்றுகொண்டிருக்கும் போது அண்மைக்காலமாக முழு ஆடையணிந்த முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப்பாடசாலைகளின் வருகையும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது. அந்த வகையில் தி.ஸ்ரீ.சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இப்பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன் இப்பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது.
இதுகாலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுக்காற்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்கட்படுத்தியுள்ளது.

அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும். இப்பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இனவேறுபாட்டை இவ்வாசிரியர்கள் தூண்டப்படுவது ஆரோக்கியமானதல்ல.

எனவே கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய பாடசாலை பகிஸ்கரிப்பையும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்துகின்றோம்.

1. அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும் குறிப்பிட்ட  ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன் எமது பாடசாலை விதிகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

3. ஏதிர்காலத்தில் இவ்வாறு மதக் காரணங்களைக் காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை   நியமிக்கக்கூடாது.

4. ஆரம்ப நிலையில் இப்பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் கி/மா கல்விப்பணிப்பாளர்   கிழக்கு மாகாண கல்விச்செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கிறோம்.

5. இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது என

மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும்  அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.

13 கருத்துரைகள்:

அரை குறை சாரி மற்றும் ஆடைகளில் அங்கங்கள் தெரியும் அளவுக்கு நீங்கள் அனியும் சாரிகளின் நிர்வானா கோலம் உங்களுக்கு ஒழுக்கம் உள்ள சமூகத்தை ஒரு போதும் உருவாக்காது குறிப்பாக அதன் கவைர்ச்சியின் இச்சையில் பாலியல் குற்றத்தை உருவாக்கும் சீரழீந்த சமூகத்தை மாத்திரமே உருவாக்கும் என்பது உறுதி

இனத்துவேசத்தின் ஒட்டுமொத்த வடிவமே இந்த போராட்டம். மனித நேயம் என்றால் என்ன என்று புரியாமல் ஒருவர் மனிதம் பற்றிய அட்டையை தூக்கிக் கொண்டு நிட்கின்றார். ஹபாயாவுக்கும், சாஹிரா கல்லுரியில் எத்தனை தமிழ் மாணவர்கள்? என்பதட்கும் என்ன சம்பந்தமோ புரியவில்லை..!! சேலை யூனிபோமாக இருக்குமானால் பரவாயில்லை, வண்ண வண்ணமாக நீண்ட முந்தானை, குட்டை முந்தானை, இறுக்கமான பிளவுஸ், குட்ட கை பிளவுஸ், நீண்ட கை பிளவுஸ் என்று பல மாதிரி அணிந்து கொண்டு வருகிறார்கள். ஒரு மதத்தை பின்பற்றும் ஒருவர் அந்த மதத்தின் சட்ட திட்டங்களை ஒழுகி நடக்க முட்பட்டால் அதட்கு எதிர்ப்பு. மிகவும் கவலைக்குரிய விடயம். மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு மதத்தின், இனத்தின், தனிமனிதனின் உரிமை பிரச்சினை. இந்த உரிமை மறுக்கப்பட்டது மாத்திரம் இல்லாமல் மிகப்பெரும் வெளிப்படையாக ஒரு இனத்துவேச ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ் இனம் வெட்கப்பட வேண்டிய விடயம். "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்." வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதட்கு இது நல்ல உதாரணம் புரிந்து கொள்வார்களா தமிழ் அரசியல் தலைவர்கள். முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கும் இது நல்லதொரு எச்சரிக்கையாகும்.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 7:27)

Ok..then all muslim and sinhala schools should kick this tamil assholes who are keeping hindu identiese such as satanic pottu etc..

Foolish Hindu Teachers if you can go to school with your pottu similarly Muslims also can go with their dress.

This matter shows that Sri Lankan Hindu not a Civalized Human, all of you still living in the first century.

முஸ்லீம் பாடசாலையில் அபாயா போட்டுதான் வரவேண்டுமெனில் நீங்கள் என்ன செய்வீர்கள் அப்படி சொல்வது நாகரீகமான செயலாகுமா.

“ஹபாயாவை கழட்டு”
என்று ஹர்த்தால் நடத்தும் சகோதரனே! சகோதரியே!

ஒரு ஹிந்துவை பார்த்து எந்தவொரு முஸ்லிமும்...

ஏன் நீ பொட்டு வைத்தாய் என்று போர் தொடுப்பதுமில்லை, புண்படுத்துவதுமில்லை.

ஏன் கோவணம் உடுத்தாய் என்று கோவிப்பதுமில்லை கொச்சைப்படுத்துவதுமில்லை.

ஏன் திருநீறு பூசினாய் என்று திட்டுவதுமில்லை,
உன்னை துரத்துவதுமில்லை.

நீ மேல் சாதியா? என்று மோருவதுமில்லை
நீ கீழ் சாதியா என்று கேவலப்படுத்துவதும் இல்லை.

இடுப்பை ஏன் காட்டுகிறாய் என்று உன்னை இழிவு படுத்தியதுமில்லை,
சாறி ஏன் உடுக்கிறாய் என்று உன்னை சச்சரவு செய்ததுமில்லை.

ஆமிக்காரன் உன்னை ஆச்சினை செய்வானென்று முக்காடு போட்டு உன்னை மூடி மறைத்து பத்திரமாய் அனுப்பி வைத்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள் பதிந்து இருக்கிறது.

பொலிஸ்காரன் உன்னை பொல்லால் அடிப்பானென்று போர்த்தி கொண்டு சென்று உன்னை பொக்கிசமாய் அனுப்பிய நாட்களும் நெஞ்சத்து நினைவில் இருக்கிறது.

நீ மட்டும் ஏன் ஹபாயாவை கழட்டு என்று
இப்போது கங்கணம் கட்டி நிற்கிறாய்?

அவள் அரபு படி என்று அடித்தாளா?
அல்லது தொழு என்று உன்னை தோல்லை தந்தாளா?

புத்தகத்தில் இருப்பதை மட்டுமே உனக்கு போதிக்கிறாள்.
நீ புரியாமல் ஏன் பேதிக்கிறாய்?

நீ முற்றிலும் துற என்கிறாயா?
முத்தி விட்டது துற என்கிறாயா?

ஏன் இந்த அநியாயம்?

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் உயர்ந்த சொல்லுக்கு சொந்தக்காரன் நீ.

ஒழுக்கம் கலைந்து, உடுக்கை களைந்து பள்ளிக்கு வா என்று ஏன் பாவியாய் வம்புக்கு இழுக்கிறாய்?

முற்றிலும் துறந்து முழு உலகும் சீர் கெட்டு கிடக்கிறது!
புத்தி இருந்தால் நீ புரிந்து கொள்வாய் இதை.

“Man in The early times was almost naked, and as his intellect evolved he started wearing clothes. What I am today and what I’m wearing represents the highest level of thought and civilization that man has achieved, and is not regressive. It’s the removal of clothes again that is regressive back to ancient TIMES.”

தமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசாரம் பேணப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்பட வேண்டுமல்லவா. அவ்வாறாயின் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலாவது எந்தவொரு தமிழ் ஆசிரியையோ அல்லது தமிழ் மாணவியோ முஸ்லிம்களின் கலாசாரப்படி ஆடை அணிந்து வரவேண்டுமென முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரால் எப்போதாவது வேண்டப்பட்டுள்ளனரா அல்லது வற்புறுத்தப்பட்டுள்ளனரா? எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா? அல்லது கேள்விப்பட்டதுண்டா? ஏன் இந்து மக்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? இங்கு இனவாதத்தை விதைப்பது யார்? பல தசாப்தங்களாக தமது உயிரையும் கொடுத்து தமது உரிமைக்காக குரல் கொடுத்த இவர்கள், மற்றவர்களின் உரிமைகளை ஏன் மதிக்கக் கூடாது?
ஒழுக்கம், நோ்மை, கல்விமான்களை உருவாக்குதல், நற்பிரஜைகளை உருவாக்குதல், மற்றும் பிரிவினை வேண்டாம், குரோதங்களை வளர்க்கக் கூடாது என இன்னோரன்னச் சோடிப்பு வசனங்களை தமது மகஜரில் குறிப்பிட்டுள்ள இவர்களால், பிரிவினைக்கும் குரோதங்களுக்கும் இங்கு விதை தூவுவது யார் என்பதை புரிந்துகொள்ள முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.
இவர்கள் கல்வி கற்பிற்கும் ஆசான்களா? அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா? இதுதான் உங்கள் இலட்சனமா?
நீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம், நோ்மை நற்பிரஜை பிரிவினையின்மை, குரோதமின்மை போன்ற விடயங்களுக்கு வழியமைப்பது தான் இந்த உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைக் கலாசாரமாகுமே தவிர அது எந்த வகையிலும் எந்த நற்பண்புகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தப்போவதில்லையே! இந்த ஆடைக் கலாசாரம் மூலம் ஏற்படக்கூடிய ஒரு சிறிய தீமையைத்தான் சுட்டிக்காட்ட முடியுமா?
குரோதம் வேண்டாம் எனக்கூறிக்கொண்டு குரோதத்திற்கு வித்திடும் நடிப்புக் கலாசாரம் இனியும் வேண்டாம்...

முஸ்லிம்கள் முஸ்லீமல்லாத பாடசாலைகளில் கட்பித்து கொடுப்பது தவிர்த்துக்கொள்ள வேண்டும் அவர்கள் ஒரே கடவுளுக்கு அப்பால்பட்டு வணங்கும் கூட்டம் அவர்களின் சிந்தனை நடைமுறைகள் எல்லாம் வேறுபட்டது.நான் 90 ஆண்டு பகுதியில் பாடசாலையில் படிக்கும் போது எங்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்கள் எப்போதும் மனசுக்குள் துவேஷத்தை வைத்து தான் கட்பிப்பார்கள் ஒருநாளும் சரியாக சொல்லித்தரமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் தமிழ் மாணவர்கள் O/L , A /L பரீட்சசையின் போது பாட வினாத்தாள்களில் "ஓம்" என்று எழுதுவார்கள் அதை திருத்துவர்கள் தமிழ் ஆசிரியர்ரென்றால் நிச்சியமாக மிக அதிக புள்ளிகள் கொடுப்பார்கள்.

ஒரு பவுத்த பிக்கு ஆசிரியராக, சண்முக கல்லூரிக்கு படிப்பிக்க வந்தால், அந்தக் கல்லூரி அதிபர் வாய் சிறிதுகூட, அசைந்திருக்காது.

இவர்களின் இனவாதத்தை நாதியற்ற முஸ்லிம்களின்மேல் காட்ட முனைகிறது.

Post a Comment