Header Ads



சவுதி இளவரசரின் அரண்மனை மீது, பறந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மத் பின் சல்மான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இளவரசர் தங்கியிருந்த அரண்மனை அருகே நேற்று பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் முகம்மத் பின் சல்மான் சவுதியில் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதால் பலத்த கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சவுதி தலைநகர் ரியாத்தில், இளவரசர் முகம்மத் பின் சல்மான் தங்கியிருந்த அரண்மனை அருகே துப்பாக்கி சத்தமும், அதையடுத்து சிறிய குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அப்பகுதி உடனடியாக பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. பின்னர் அரண்மனையில் இருந்த இளவரசர் சல்மான், அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த பதுங்கு குழியில் தங்கவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சவுதி அரசு, அரண்மனை மேல் ஆளில்லா உளவு விமானம் பறந்தது உண்மை தான், அரண்மனை மீது பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதுவும் நடைபெறவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

2 comments:

Powered by Blogger.