April 23, 2018

ஜனாதிபதி ஜெயவர்த்தனாக்கு, ஏகத்துவத்தை எத்திவைத்த நிசார் குவ்வதீ

இலங்கையில் 1949,50 காலப்பகுதிகளில் தர்வேஷ் ஹாஜியார் அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு வித்திட்டதன் பிற்பாடு கொழும்பைச் சேர்ந்த நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களால் மீண்டும் புதுப்பொலிவுடன் அப்பிரச்சாரம் இலங்கையில் சுடர் விட ஆரம்பித்தது.

தர்வேஷ் ஹாஜியார் பற்றி ஆக்கங்கள் சில எழுதப்பட்டுள்ளன என்ற வகையில் அவருக்கு அடுத்தபடியாக இலங்கை நாட்டில் ஏகத்துவ எழுச்சிக்கு வித்திட்ட நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றிய சுருக்க அறிமுகத்தை இங்கு வழங்க முயற்சிக்கிறேன்.

பிறப்பு : நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 1932 ம் ஆண்டு கொழும்பு, புதுக்கடையில் ஷேகு இஸ்மாஈல் என்பவருக்கு மகனாக பிறந்தார்கள்.

கல்வி : ஷரீஆ ஆரம்பக்கல்வியை மஹரகம கபூரிய்யா அரபுக்கலாசாலையில் கற்றார்கள், தமது 18 ஆவது வயதில் தென்னிந்தியாவின் பேட்டையிலுள்ள மத்ரஸா குவ்வதியில் உயர் கல்வியை தொடர்ந்தார்கள், அங்கிருந்து தமது 30 ஆவது வயதில் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தார்கள்.

ஷரீஆ துறையில் சிறுந்து விளங்கிய நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமிழ், அரபு, ஆங்கிலம், சிங்களம், மலே, ஹிந்தி, உருது, ஆகிய இந்த ஏழு மொழிகளையும் சரளமாக தெரிந்து வைத்திருந்தார்கள்.

தொழில் : கொழும்பு பாதிமா பெண்கள் பாடசாலையில் அரபுப்பாட ஆசிரியராக கடமை புரிந்தார்கள்.

திருமணம் : கண்டியைச் சேர்ந்த அமீனா அப்துல் அஸீஸ் என்பவரை 1952 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மனைவி அமீனா அப்துல் அஸீஸ் அவர்கள் தமது 55 ஆவது வயதில் மக்காவிலுள்ள தாருத் தௌஹீத் லிந்நிஸா கல்விக்கூடத்தில் மூன்று வருடங்கள் கல்வி கற்று தமது கணவரின் ஏகத்துவ பிரச்சாரப் பணிக்கு உதவுமுகமாக மார்க்க அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

குடும்பம் : நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு மொத்தம் எட்டு பிள்ளைகளில் ஆண்கள் ஆறுபேரும் பெண்கள் இரண்டு பேரும் அடங்குவர்.

1969 ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்ற வேளை முன்னைய நாள் முப்தியுல் மம்லகா அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களை சந்தித்து அவர்களின் வழிகாட்டலில் ஏகத்துவ பிரச்சாரப்பணியை மேற்கொண்டார்கள்.
1970 ம் ஆண்டு "வான் சுடர்" மாதாந்த சஞ்சிகையை ஆரம்பம் செய்து அதனூடாக ஏகத்துவப் பிரச்சாரத்தை இந்நாட்டில் துளிர் விடச்செய்தார்கள், ஏக காலத்திலே கொழும்பில் மஸ்ஜித் தௌஹீதையும் நிறுவி அதனூடாகவும் பிரச்சாரத்தை மெருகூட்டினார்கள்.

எமது இலங்கை நாட்டின் முன்னைய நாள் ஜனாதிபதி JR ஜயவர்தன அவர்களை நேரில் சந்தித்து இந்த ஏகத்துவக் கொள்கையை பிரச்சாரம் செய்துள்ளார்கள் என்பது இவர்களது துணிவையும் கொள்கைப் பற்றையும் இறையன்பை அடைய வேண்டும் என்பதிலுள்ள அலாதியான அவாவையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

வபாத் : மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் எளிமையுமிக்க நிசார் குவ்வதீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 1984 ம் ஆண்டு கொழும்பு, தெமடகொடயில் வபாத்தாகி மாளிகாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள், ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றார்கள் என்பதுவும் இவர்களது மக்களுடனான நல்லுறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அல்லாஹ் அவரையும் நம் எல்லோரையும் பொருந்திக் கொள்வானாக!

By - Shk TM Mufaris Rashadi. 

2 கருத்துரைகள்:

We are -in Sri lanka- still suffering from the consequences of Wahhabism brought by Darweesh and nizar.

இவ்வாறானவர்களின் மார்க்கப்பணி மெெச்சப்படவேண்டியது. ஆனால் இன்று நிலமை அன்னியவர்களுக்கு முதல் முஸ்லீம் யுவதிகள், யுவதிகளின் பெற்றோர்களுக்கு மார்க்கதைதை பருக்கவேண்டியுள்ளது.

Post a Comment