April 09, 2018

இஸ்லாத்தை மாற்று மதத்தவர்களுக்கு வழங்க, தவறியதற்காக தௌபா செய்யவேண்டும் - ரிஸ்வி முப்தி

2018.04.08 ஆம் திகதி ஞாயற்றுக்கிழமை ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாயலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான செயலமர்வு ஒன்று நடை பெற்றது. இச்செயலமர்வில் அனைத்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் தலா பத்து நபர்களும், அரபுக்கல்லூரியின் அதிபர்கள் மற்றும் நிருவாகத் தலைவர்களும் , இன்னும் பல நலன்விரும்பிகளும் உள்ளடங்கலாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

ஹைஅத்துல் குர்ஆன் உயர்கற்கை நெறி கலாபீடத்தின் அதிபர் அஷ்-ஷைக் பவாஸ் அவர்களுடைய கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையையும், செயலமர்வின் முக்கியத்துவத்தையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் நிகழ்த்தினார்கள். அவர் தனது உரையில் நமது முன்னோர்கள் நாட்டிற்கு செய்த தியாகங்களையும், முஸ்லிம்களது வரலாற்றையும் அழகிய முறையில் தெளிவு படுத்தினார். தொடர்ந்து தற்கால பிரச்சினைகளை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களால் உரை ஒன்று நிகழ்த்தப்பட்டது. பிரச்சினைகள் எழுகின்ற போது நாம் நிதானம் இழந்து செயற்படுவதிலோ, அல்லது அந்ந சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிற மதத்வர்களுடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்துவதினூடாகவோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமூக்த்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சட்டத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி அஷ்-ஷைக் எம். அஷ்ரப் அவர்களால் சிறந்த வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு உரை இடம் பெற்றது.

அடுத்து தற்காலப் பிரச்சினைகளும் ஊடகமும் எனும் தலைப்பில் விழிர்ப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் அவர்கள் அழகிய முறையில் நிகழ்த்தினார்கள். இதன் போது நாம் ஊடகங்களை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும் என்றும் தமக்கான ஒரு ஊடகம் உருவாக்குவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அன்றைய செயலமர்வின் முக்கிய நிகழ்வாக சகவாழ்வும், அதனை முன்னெடுப்பதில் உள்ள சவால்களும், அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களால் ஒரு உரை நிகழ்த்தப்பட்டது. அந்நிகழ்வில் சகவாழ்வு என்றால் என்ன அதை முன்னெடுப்பதில் உள்ள தடைகள் என்ன அவற்றுக்கான தீர்வுகள் என்ன என்பன பற்றிய பூரண தெளிவு ஒன்றை வழங்கினார். இத்துடன் செயலமர்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவிற்கு வந்தது.

லுஹர் தொழுகையை தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வு அனைத்து மாவட்டங்களையும் எட்டு குழுக்காளாக பிரித்து கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் இதுவரை தமது மாவட்டங்கள் சகவாழ்விற்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் செய்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு குழுக்களினதும் மும்மொழிவுகள் சபையோருக்கு முன்வைக்கப்பட்டது.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பமான நிகழ்வின் இறுதியமர்வின் முதல் நிகழ்வாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப-தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் முப்தி யூசுப் ஹனீபா அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் எப்போதும் நாம் அல்லாஹ்வுடனான தொடர்பை சீர் செய்ய வேண்டுமென்றும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், நாட்டுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென்றும் சிறந்த வழிகாட்டல் ஒன்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி ரிஸ்வி அவர்களின் உரை இடம் பெற்றது. தனது உரையில் மாற்றுமதத்தவர்களுடனான எமது தொடர்பு இஸ்லாமிய வரயறைகளை  மிஞ்சியதாக இருக்கக் கூடாது என்றும் அதே நேரம் அவர்களுடன் எந்த தொடர்பும் அற்றவர்களாக நாம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும் சகவாழ்வு என்பது இன்று தவறாக புரியப்பட்டிருப்பதாகவும் அவற்றை உலமாக்கள் தெளிவு படுத்த வேண்டும் என்றும் எமது மார்க்கத்தை பற்றிய தெளிவுகளை மாற்று மதத்தவர்களுக்கு வழங்க தவறிவிட்டதை நினைத்து தௌபா செய்வதுடன் அந்தப் பணியை செய்ய உலமாக்களும், துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரச்சினைகளின் போது தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் ஜம்இய்யா பற்றி வீணாக விமர்சிப்பதை முற்றாகத் தவிர்ந்து ஜம்இய்யா பற்றிய தெளிவுகள் தேவைப்படுபவர்கள் நேரடியக வந்து பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தியதுடன் இயக்க வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்படுமாறும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து தனது உரையை முடிவிற்கு இட்டுச் சென்றார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலீல் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

8 கருத்துரைகள்:

முதலில் அரபுக்கல்லூரிகளில் சிங்களத்தை தாராளமாக மௌலவி மாணவர்களுக்கு படிப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உலமாக்களுக்கு சிங்களம் தெரியாத பெரும் குறைதான் இந்த பிரச்சினைக்கு அரைவாசி காரணம் .

இஸ்லாத்தை பள்ளிக்குள்ளேயும் தஹ்லீம் கிதாபுக்குள்ளும் சுருக்கிக்கொண்டால் எவ்வாறு மற்ற சமூகங்களுக்கு இஸ்லாம் சென்றடைய முடியும்? ஒருவர் கக்ஷ்ட்டப்பட்டு குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தால் அதையும் குறை காணும் கூட்டம் ஒன்று இருக்கும் வரை எப்படி இஸ்லாம் மற்றவர்களை சென்றடைய முடியும் ? 3 நாள் 40 நாள் ஆயுள் என்று திரியும் கூட்டம் இதை சிந்திக்க வேண்டும்.

If the Ulema has to make a constructive contribution in community relationship building it would be necessary that future Ulema to have substantial knowledge in politics and conflict resolution methods besides Quaranic and Religious knowledge.

இஸ்லாம்  -  அது சாந்தி மார்க்கம்
இலங்கைக்குச்  சொந்த மார்க்கம் உலகத்தாருக்காக வந்த மார்க்கம்

"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். "
(அல்குர்ஆன் : 4:1)

"(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:158)
www.tamililquran.com

O/L மற்றும் A/L பரீட்சைகளில் சித்தி அடையும் மாணவர்களில் இருந்து வைத்தியர்கள், பொறியியளாளர்கள்,கணக்காளர்கள், ஆசிரியர்களை உருவாக்குவது போல மவ்லவிமார்களும் சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்ளில் இருந்தே உருவாக்கப்பட வேண்டும்.

றிஸ்வான் அவர் என்ன சொல்கிறார் நீர் என்ன சொல்கிறீர். எடுத்ததெற்கெல்லாம் ஜம்யாவைய விமர்சிக்கும் மனநோய் இணையத்தளங்களில் உள்ளோரிடம் அதிகம் வளர்ந்து வருகிறது. உம்மிடமும் அந்த நோயின் அறிகுறி தென்படுகிறது. அடுத்த மத்த்தவர்என்ற ஒரே காரணத்திற்காக நாம் மாற்றுமத சகோதர்ர்களை வெறுப்பதில்லை ஆனால் தாம் சார்ந்த கொள்கை இல்லை என்பதற்காக முஸ்லிம் சகோதரனையே வெறுத்து காழ்ப்புணர்ச்சி கருத்துக்களை வெளியிடுகிறோம்.இதையா இஸ்லாம் சொல்கிறது.இப்படியானவர்கள் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படை புரியாதவர்கள் அத்தோடு மனித சிந்தனையின் பன்மைத்துவ தன்மையைப் புரியாதவர்களும் கூட.

I agree with Rizwan Junaideen idea of educational qualification of Moulavies and M.Marzooks idea of political knowledge to be moulavies.In top of all that is very important is Moulavies to keep off the politics and to become a stooges of politicians.

Present problem in Muslim world and Srilanka is created by This Jamiathul Ulama and Rifvi Mufthi himself and Niyaz Moulavi who acted as a stooges of Mahinda and visited UNO against America and UNO without knowing the consequences and nature of America and UNO.It is because this Moulavies lack of knowledge of world politics and UNO.

Not only these Moulavies but also Muslim Countries too no nothing of nature of America, UNO and Tamil problem.that's what they voted against UNO and America.Even the Buddhist countries Thailand and Japan abstain from voting as they know the consequences if they vote for srilanka.It says that "foolish tread where Angels feared to tread"So the result is Muslim world is burning and Srilanka Muslims are under attack.

It s the big joke that Jamiathul Ulama says that the problem is simply because Muslims failed to carry the message to majority people but failed to understand that it is the main problem that BBS and Tamils accused that Muslims imposing Islam on their people and convert them.Recently one Tamil politician said that conversion of their people into other religion is big problem and must stop any cost.So it is very dangerous that in 1980ies Christina church are attacked and one commission too appointed to find out if their any conversion happen. Now it is Muslims mainly by BBs.So stop imposing idealogies to other people which make more problem.

சில அநாமதேய நபர்கள், இஸ்லாமியப் பெயர்களில் சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், நம் சகோதரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்.

Post a Comment