Header Ads



"கொள்ளைக்காரர்கள் அமைச்சரவையில் அனுமதி பெற்றுக்கொள்ள முனைகின்றனர்"

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தரப்பினர் லாபமடைய முயற்சிக்கலாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று -10- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாட்டில் இன்று அரசியல் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

கட்சியின் செயலாளரை நியமிப்பதிலும், பொதுச் செயலாளரை தெரிவு செய்வதிலுமே கவனம் செலுத்தப்படுகின்றது.

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகின்றது.

இதனைப் பயன்படுத்திக்கொண்டு வர்த்தகர்களும், கொள்ளைக்காரர்களும் தமக்கு சாதகமான திட்டங்களை தயாரித்து அமைச்சரவையில் அனுமதியை பெற்றுக்கொள்ள முனைகின்றனர்.

இது நாட்டை மீள முடியாத சிக்கலில் தள்ளிவிடும்.

இந்த நிலையில், நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.