Header Ads



ஆப்கான் குண்டுத் தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் மரணம் - இலங்கையும் கண்டனம்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக குறித்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.  

குறித்த தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பிரதம புகைப்பட பிடிப்பாளர் ஷா மராய் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்திற்கு முன்னதாக காபுலில் வாக்காளர் பதிவு நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம்,முட்டாள்தனமான இந்த தாக்குதலில்,  காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. Also remember 100s of Kids who memorized Quran were killed by DRONE attack. We should condemn that attack also. But unfortunately no government condemns that attack as it was carried our by Afghan and US governments ...

    Whoever dies... innocents public.. All those involved in this brutal behavior STATES or Groups should be condemned for their evil acts.

    ReplyDelete
  2. Killing fields - Afghan, Syria...and Yemen... Maithiri's government issues condemnation in a flash but overlooks the problems in their own back yard.

    ReplyDelete

Powered by Blogger.