April 22, 2018

பால்மா 75 ரூபாவாலும், சிலிண்­ட­ர் 245 ரூபா­வாலும் விலை அதிகரிக்கலாம்...!

பால்மா ஒரு கிலோவின்  விலை  75 ரூபா­வாலும்  சமையல் வாயு  சிலிண்­ட­ரொன்றின்  விலை  245 ரூபா­வாலும்  இன்னும்  சில தினங்­களில்  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக  அரச  வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

தற்­போது  லண்­ட­னுக்கு விஜயம்  மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  நாடு திரும்­பி­யதும்  பால்மா விலை மற்றும்  சமையல்  கேஸ் விலை  அதி­க­ரிப்பு  தொடர்­பாக  இறுதி  முடி­வெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும்  அவ்­வட்­டா­ரங்கள்  தெரி­விக்­கின்­றன.

 உலக சந்­தையில்  பால்மா  மற்றும்  சமையல்  கேஸ்  விலைகள்  அதி­க­ரித்­துள்ள கார­ணத்தால்,   இந்­நாட்டு  பால்மா  மற்றும் கேஸ்  நிறு­வ­னங்கள்  விலையை  அதி­க­ரிக்­கும்­படி  வாழ்க்கைச் செலவு  தொடர்­பான  குழு­வி­டமும் பாவ­னை­யாளர் பாது­காப்பு அதி­கார  சபை­யி­டமும்  அனு­மதி  கோரப்­பட்­டி­ருந்­தது.  ஒரு­கிலோ  பால்­மாவின் விலை 100 ரூபா­வாலும்  கேஸ்  விலை  சிலிண்­ட­ரொன்­றுக்கு 275 ரூபா­வாலும்   அதி­க­ரிக்­கும்­படி  இந்­நி­று­வ­னங்கள்  பாவ­னை­யாளர்  அதி­கார சபை­யிடம்  கோரிக்கை  விடுத்­தி­ருந்­தன. 

தற்­போது 12.5 கிலோ எடை­யுள்ள காஸ் சிலிண்­ட­ரொன்றின்  விலை  கொழும்பில்  1431 ரூபாவாகவும் பால்மா கிலோவொன்று 810 ரூபாவாகவும் விற்பனை  செய்யப்படுகின்றமை  குறிப்படத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment