Header Ads



74 ஆண்டுகளாக யானைகளிடமிருந்த கடுகண்ணாவையை, பிடுங்கிய மகிந்த

கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவை நகர சபையின் அதிகாரத்தை நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசியக் கட்சி பறிகொடுத்துள்ளது.

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கடுகண்ணாவை நகர சபைக்கான 15 உறுப்பினர்களில் 07 உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சி பெற்றிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆறு உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜே.வி.பி. என்பன தலா ஒரு உறுப்பினரையும் பெற்றுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிக்கான தெரிவின் போது பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று நகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தனர்.

கடந்த 74 ஆண்டுகளாக கடுகண்ணாவை நகர சபையை நிர்வகித்து வந்த ஐக்கிய தேசியக்கட்சி முதல் தடவையாக இம்முறை அதன் அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியான பொதுஜன பெரமுனவிடம் பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.