Header Ads



6 அமைச்சுப் பதவிகளுக்கு வெற்றிடம்

நேற்றிரவு தொடக்கம் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் பதவி விலகியுள்ள நிலையில் தற்போதைக்கு ஆறு கபினெட் அமைச்சுகளில் அமைச்சர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த சுதந்திரக் கட்சியின் ஆறு கபினெட் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க, பிரதியமைச்சர்கள் ஒன்பது ​பேர் நேற்றிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் காரணமாக தற்போதைக்கு ஆறு கபினெட் அமைச்சுப் பதவிகள் அமைச்சர்கள் இன்றி வெற்றிடமாக காணப்படுகின்றன. அதன் மூலம் குறித்த அமைச்சுகளின் செயற்பாடுகளில் தொய்வு நிலை ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா, தயாசிறி, சந்திம வீரக்கொடி ஆகியோரே பதவி விலகியுள்ள கபினெட் அமைச்சர்களாகும்.

இவர்களுடன் ராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, டி.பி. ஏக்கநாயக்க ஆகியோரும் பிரதியமைச்சர்களான சுமேத ஜீ ஜயசேன, தாராநாத் பஸ்நாயக்க, அநுராத ஜயரத்ன, சுசந்த புஞ்சிநிலமே, லக்‌ஷ்மண் வசந்த ஆகியோருடன் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் நேற்றிரவு முதல் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவர்களின் பிரச்சினைகள் பார்க்கவே அரசாங்கத்துக்கு நேரம் போதாது இவ்வாறு இருக்கும்போது எவ்வாறு நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பிரச்சினைகளை பார்ப்பது?தேசிய அரசாங்கம் எப்போதும் நாட்டஊக்கு செரிவராது.ஏதாவது ஒரு கட்சிதான் அரசாங்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.