Header Ads



யானைக்கு 4 உப தவிசாளர்கள் நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்புகளுக்கு அமைய அந்த கட்சிக்கு நான்கு உப தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு உப தவிசாளர்களில் மூன்று கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் எனவும் தெரிவந்துள்ளது.

அமைச்சர்கள் மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, டி.எம்.சுவாமிநாதன், தயா கமகே ஆகியோரே உப தவிசாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மலிக் சமரவிக்ரம உட்பட ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.