Header Ads



ரணிலுக்கு எதிராக 42 பேர் - சு.க.யின் முடிவு வெளியாகியது

-Dc-

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோருவதற்கு இரவு (02) கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலுள்ள 42 பேர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் தொடர்பில் அறிவிப்பதற்கு இன்று (03) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இக்குழு சந்திக்கவுள்ளதாகவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

சிலபோது பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிடின், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் இதுதான் இக்குழுவின் ஏகமனதான தீர்மானம் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் குறிப்பிட்டுள்ளார்.  

2 comments:

  1. (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
    (அல்குர்ஆன் : 35:43)

    இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
    (அல்குர்ஆன் : 35:44

    மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 35:45)

    ReplyDelete
  2. So who will be the alternative ? Did they agree with ONE NAME ?

    ReplyDelete

Powered by Blogger.