Header Ads



40000 சட்விரோத கருக்கலைப்பு வைத்தியர்கள், வருடத்திற்கு 35500 குழந்தைகள் பிறப்பு, 36500 கருக்கலைப்புகள்

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்துள்ளதாக டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையில், வருடமொன்றுக்கு 35,500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36,500 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1,000 சட்டவிரோத கருக்லைப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத கருக்கலைப்புகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில், தகுதியற்ற நபர்களாலும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 சட்விரோத கருக்கலைப்பு வைத்தியர்கள் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச வைத்தியசாலைகளிலும், பிரபல தனியார் வைத்தியசாலைகளிலும் கருக்கலைப்பு இடம்பெறுவதாகத்  தெரிவித்த அவர், வைத்தியர்கள் பயன்படுத்தும் உபகரணங்களால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு, பெரும்பாலும் பதிவு செய்யப்படாத மருந்துகளே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாலியல் கல்வி அவசியம் என்பதோடு, இளைஞர் யுவதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு தொடர்பிலான தெளிவுபடுத்தலும் அவசியமென டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. முதலில் பாலியல் கல்வி என்ன என்று வரையறுக்கப்பட வேண்டும். கேட்டால் மாணவர்களுக்கு பாதுகாப்பான பாலியல் முறைகளை கற்பிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இவ்வாறான கல்வியினால் சட்டவிரோதமான பாலியல் உறவுகள் கூடுமே தவிர குறையாது.

    ReplyDelete

Powered by Blogger.