Header Ads



மனதை நெருடும் 2 சம்பவங்கள்


மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலை புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்துவரும் ஒரு முக்கிய நிறுவனமாகும். அவ்வைத்தியசாலைக்கு புற்றுநோயை மிகத் தெளிவாக அடையாளம் காணும் பெட் ஸ்கேனர் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் Msh Mohamed தலைமையில் ஒரு குழு களமிறங்கியது.

20 கோடி ரூபாய்க்கு அதிகமான பெறுமதி கொண்ட அவ்வியந்திரத்தை வாங்கும் சவால்மிக்க பணியில் அவர்கள் வெற்றியடைந்தனர். 9 மாத காலத்திற்குள் 26 கோடி ரூபாய்கள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து சிங்கள இதழொன்றில் வெளிவந்த Msh Mohamed உடனான நேர்காணலொன்றை விடிவெள்ளி பத்திரிகையில் ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ. பரீல் மொழிபெயர்த்திருந்தார். அந்நேர்காணலில் Msh Mohamed மனதை நெருடும் இரு சம்பவங்களை குறிப்பிட்டிருந்தார்.

முதலாவது அந்த பெட் ஸ்கேனருக்காக தான் அறிந்திராத, சந்திக்காத சுனில் முத்துமால என்ற ஒருவர் 3 கோடி 60 இலட்சம் ரூபாய்களை பங்களிப்பு செய்திருந்தாக Msh Mohamed குறிப்பிடுகிறார்.

டுத்த சம்பவம் இதுதான். நான் ஒவ்வொரு நாளும் பெட் ஸ்கேனருக்கான சுகாதார அமைச்சின் வங்கிக் கணக்கினை பரிசீலனை செய்வேன். ஒருநாள் மத்துகம சந்தையில் கீரை வகைகளை விற்பனை செய்யும் பாட்டி ஒருவர் இந்தக் கணக்கிற்கு 50 ரூபாய் வைப்புச் செய்திருந்தார்.

பின்னர் ஒருநாள் அந்த வயோதிப மாது மேலும் 100 ரூபாய் வைப்புச் செய்வதற்காக வங்கிக்குக் சென்றுள்ளார்.

அப் பெண்ணால் எழுத வாசிக்க தெரியாது. வங்கியில் பத்திரத்தை நிரப்புவதற்கு அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோத்தரின் உதவியைக் கோரியுள்ளார். பாதுகாப்பு உத்தியோகத்தர் வயோதிபப் பெண்ணை வங்கி முகாமையாளரிடம் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் முகாமையாளர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நான் அவ்வயோதிபப் பெண்ணுடன் கதைத்தேன். நீங்கள் ஒருநாளைக்கு எவ்வளவு உழைப்பீர்கள் என்று கேட்டேன். 300 ரூபாய்கள் என அம்மாது கூறியதாக Msh Mohamed குறிப்பிடுகிறார்.

Mohamed Basir

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:261)

1 comment:

  1. Our people spend in millions in extravagance marriage and similiar several functions while neglecting the social responsibility..

    ReplyDelete

Powered by Blogger.