Header Ads



இலங்கையில் 22.1 சதவீதமானவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைப்பாடு

சனத்தொகைக்கு நிகராக, ஊட்டச்சத்து குறைப்பாட்டில் தென் ஆசியாவில், இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு தாபனம் தெரிவித்துள்ளது.

உலக உணவு தாபனத்தின், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பிலான,  2017 ஆம் ஆண்டுக்காக அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 -2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் உள்ள சனத்தொகைக்கமைய, 22.1 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைப்பாடுடையவர்களாக காணப்படுவதாக, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.