Header Ads



தமிழ் கூட்டமைப்பின் 10 நிபந்தனைகளுக்கு, பிரதமர் இணங்கியமை தொடர்பில் சர்ச்சை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 10 நிபந்தனைகளுக்கு இணங்கி அதன் ஆதரவை பிரதமர் பெற்றக்கொண்டதாக கூறப்படுவது பாரிய பிரச்சினையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றியின் பின்னர், அந்த நிபந்தனைகள் மற்றும் யோசனைகளை நிறைவேற்ற வேண்டும்.

குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த முற்படும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கருத்து மாறுபாடு உள்ளது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், நாட்டு மக்களின் கருத்து மாற்றமுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார் என அறிய முடிவதாக உடுவே தம்மாலோக தேரர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. தமிழர்களும் இந்த நாட்டின் முத்த குடிகளே. பிறகு எவ்வாறு நாட்டை காட்டி கொடுப்பார்கள்.

    ReplyDelete
  2. Tamils too Srilankakans like Budists

    ReplyDelete
  3. Tamils had enough its time rebuilt the nation

    ReplyDelete

Powered by Blogger.