Header Ads



கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த முஸ்லிம் பணிக்கரும் 1000 ரூபாவும்..!!


-என்.எல்.எம்.மன்சூர்-

குரு­ணாகல் சியம்­ப­லாகஸ்­கொடுவ “கடு­பொல” என்ற  இடத்தின் அண்­மையில்  பௌத்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­திக்கு பௌத்த  மதம் சார்­பான பத­வி­யு­யர்­வொன்று வழங்­கப்­பட்­டது. அவரை  கௌர­வித்து  வர­வேற்பும்,  பாராட்டு வைப­வங்­களும் இடம் பெற்­றன. அவ்­வா­றான  வர­வேற்­பொன்று  முஸ்­லிம்­களின்  பள்­ளி­வா­சல்கள் சார்­பாக நடை­பெற்­றது.

 இந்த வர­வேற்பு  நிகழ்வை ஏற்று நன்றி தெரி­வித்து  விகா­ரா­தி­பதி  ஏற்­புரை நிகழ்த்தும் போது முஸ்­லிம்­களின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த  நிகழ்­வொன்றை ஆதா­ரங்­க­ளுடன்  நினைவு  கூர்ந்து உரை­யாற்­றினார்.

“இலங்கை முஸ்­லிம்கள் சிங்­கள மக்­க­ளுடன் விசு­வா­ச­மாக இணைந்து வாழ்ந்­த­துடன்  பௌத்த மதத்­தையும், பௌத்த பிக்­கு­மார்­க­ளையும் கண்­ணி­ய­மாக  மதித்து மதிப்­ப­ளித்து வந்­துள்­ளார்கள் என்­பது மறக்க முடி­யாத வர­லாற்று உண்­மை­யாகும்.

 குறிப்­பாக தலதா மாளி­கைக்கு கொம்பன் யானைக்­குட்­டியை  ஏறா­வூரைச் சேர்ந்த  பணிக்கர்  அன்­ப­ளிப்புச் செய்தார். அந்த யானை ஐந்து நாட்­க­ளுக்குள்  மீண்டும்  ஏறா­வூ­ருக்கே திரும்பி சென்று விட்­டது. இந்த  ஆச்­ச­ரி­ய­மான  விட­யத்தை  அறிந்த பணிக்கர் மீண்டும் அந்த யானையை  அழைத்­துச்­சென்று  தலதா  திய­வ­தன  நில­மே­யிடம் ஒப்­ப­டைத்தார்.

 அப்­போது  இந்த யானை திரும்­பவும்  ஏறா­வூ­ருக்கே  போய்­வி­டுமோ  என்று நாங்கள் கரு­து­வதால்  நீங்­களே  கொண்டு போய்­வி­டுங்கள்.  என்று தலதா  அதி­கா­ரிகள் கூறிய போது  முஸ்­லிம்கள்  கொடுத்­ததை  திரும்ப  எடுத்துக் கொள்ளும் பழக்­கமே  இல்­லா­த­வர்கள்  என்று கூறி  ஒப்­ப­டைத்துச் சென்றார் எனக் கூறினார்.

இந்த தக­வலை  சியம்­ப­லா­கஸ்­கொ­டுவ  பள்­ளி­வாசல்  நிரு­வா­கி­களில்  ஒருவர் என்­னிடம் தெரி­வித்தார்.

எனவே  இத்­த­கைய  முக்­கி­ய­மான  வர­லாற்று  நிகழ்வை எமது ஊரின் மூத்த  தலை­மு­றை­யி­ன­ரி­ட­மி­ருந்தும்  ஏறாவூர்  வர­லாற்று நூலி­லி­ருந்தும் கிடைத்த விட­யங்­களை  ஒழுங்­க­மைப்­பது  இன்­றைய இளைய  தலை­மு­றைக்கு பய­னுள்­ள­தாக அமை­யு­மென்று  நினைக்­கிறேன்.

அமை­விடம்

 கிழக்கு மாகா­ணத்தின்  மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில்  அமைந்­துள்ள ஏறாவூர்,  மட்­டக்­க­ளப்பின் வடக்கே  12 கி.மீ  தொலை­வி­லுள்­ளது.  இயற்கை அழகும்  இனிய வளமும்  கொண்ட  இவ்வூர்  வடக்கே வங்கக் கட­லையும் கிழக்கே குடி­யி­ருப்­பையும்  மேற்கே  செங்­க­ல­டி­யையும்  தெற்கே  மட்­டக்­க­ளப்பு வாவி­யையும்  எல்­லை­க­ளாகக் கொண்­டுள்­ளது.  நாட்டின் எல்லாப் பாகங்­க­ளு­டனும் இல­கு­வாக  போக்­கு­வ­ரத்து செய்­யக்­கூ­டிய  கேந்­திர முக்­கி­யத்­துவம்  வாய்ந்த  இடத்தில்  அமைந்­தி­ருப்­பதே  இதன் சிறப்­புக்கு கார­ண­மாகும்.

பெயர் வரக்­கா­ரணம்

மட்­டக்­க­ளப்பின்  ஆதிக்­குடி  திமி­லர்­க­ளாகும். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து  வந்து  குடி­யே­றி­ய­வர்கள்  முக்­கு­வர்கள். இந்த இரு­பி­ரி­வி­ன­ருக்­கு­மி­டையே  அடிக்­கடி  மோதல் ஏற்­பட திமி­லர்கள் முக்­கு­வர்­களைத்  துன்­பு­றுத்தி வந்­தார்கள்.  இக்­கா­லத்தில் ஆப்­கா­னிஸ்தான், வட இந்­தியா  போன்ற  இடங்­க­ளி­லி­ருந்து  வியா­பா­ரத்­திற்­காக  வந்­த­தாகக் கரு­தப்­படும்  பட்­டா­ணி­யர்­களின்  உத­வியை  முக்­கு­வர்கள் நாடி­னார்கள்.

இந்தப் பட்­டா­ணியர் சிவந்த நிறமும்  பருத்த உட­ல­மைப்பும் திட­காத்­திர­மான  தோற்­றமும் கொண்ட  பல­சா­லி­க­ளாக  இருந்­தார்கள். முக்­கு­வர்கள்  பட்­டா­ணி­யர்­க­ளுடன் இணைந்து  திமி­லர்­களைத் துரத்­தி­ய­டித்­தார்கள்.  விரட்­டி­ய­டித்­த­தோடு மட்­டு­மன்றி  படை­க­ளையும் காவ­ல­ரண்­க­ளையும்  அமைத்து  நிரந்­தர  பாது­காப்­புக்கு ஏற்­பாடு செய்­தனர்.  இப்­பா­து­காப்பு அரண்கள்  கூடு­த­லாக  ஏறாவூர்  பிர­தே­சத்­தி­லேயே  அமைந்­தி­ருந்­தன.  அதனால் எதி­ரிகள் அவ்­வூ­ருக்குள் நுழை­ய­மு­டி­யா­தி­ருந்­தது. அத­னா­லேயே எதி­ரிகள் ஏற­மு­டி­யாமல்  தடுத்த ஊர் என்ற  பொருள்­பட "ஏறாவூர்" என அழைக்­கப்­ப­டு­கி­றது.

பணிக்­கர்­களின்  முக்­கி­யத்­துவம்

யானை­களைப் பிடித்து  அதனை கட்­டுப்­பாட்­டுடன் வளர்த்து பின்னர்  வெளி­யூ­ருக்குக் கொண்டு சென்று விற்­பனை  செய்­வதை  தொழி­லாகக் கொண்­ட­வர்­களே  பணிக்­கர்கள் என்று   அழைக்­கப்­பட்­டார்கள். இந்த யானை­களை கயி­று­களால் சுருக்­கிட்டுப் பிடிப்­பார்கள். கயி­று­களை உறு­தி­யான கொடி­களில்  கட்­டி­வைப்­பார்கள்.  பல்­வேறு உத்­தி­களைப் பயன்­ப­டுத்­தியே  யானை­களைப் பிடிப்­பார்கள்.

காட்டின் நாலா­பு­றமும்  தீப்­பந்­தங்­களைப் பிடித்து  யானை­களை  ஒரே இடத்தில் ஒன்­று­சேர்த்து கொம்பன் யானை­களை துரத்திச் சென்று சுருக்­கிட்­டுப்­பி­டிப்­பது  அவற்றில்  ஓர் உத்­தி­யாகும்.  இவர்கள்  யானை­க­ளைத்­தேடி  தூர இடங்­க­ளுக்கும் செல்­வார்கள்.  அம்­பாறை மாவட்டம் இறக்­காமம் வரை செல்­வது வழக்கம் என  அறி­ய­மு­டி­கி­றது.

1925 இல் தலதா மாளி­கைக்கு யானை வழங்­குதல்

1925 இல் ஏறாவூர்ப் பகுதி காடு வன­மாக இருந்த போது  அப்­ப­கு­திக்­கா­டொன்றில் பிடிக்­கப்­பட்ட  கொம்­பன்­யானைக் குட்­டியை  தல­தா­வுக்கு  வழங்­கி­யதன் மூலம்  ஏறாவூர் மண்ணும் பணிக்கர்  பரம்­ப­ரையும்  வர­லாற்றில்  தனிச்­சி­றப்பைப்  பெற்றுக் கொண்­டது.  ராஜா என அழைக்­கப்­பட்ட கொம்பன் யானைக்­குட்டி  4 அடி  5 அங்­குல உயரம் கொண்­டது. இந்த யானை  தல­தா­வுக்கு  வழங்­கப்­பட்ட பின்  தன்னைப் பிடித்து வளர்த்த உம­று­லெவ்வை பணிக்­கரைத் தேடி  ஏறா­வூ­ருக்கே திரும்பி வந்து விட்­டது.

அதனை மீண்டும் பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் உம­று­லெவ்வை பணிக்கர் தல­தா­வுக்கு கொண்டு சென்று ஒப்­ப­டைத்­துள்ளார்.1937 ஜூலை  மாதம்  தலதா மாளி­கையின்  திய­வ­தன  நில­மே­யா­யி­ருந்த  ரீ.பீ.ரத்­வத்தை என்­ப­வ­ரி­டமே அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டது.
தேசிய சொத்­தாகப் பிர­க­டனம்

1984 இல் திய­வ­தன  நில­மே­யாக இருந்த  நிஸங்க  விஜே­ரத்னவின்  ஆலோ­ச­னையின் பேரில்  இலங்கைக் குடி­ய­ரசின் ஜனா­தி­பதி  ஜே.ஆர்.ஜய­வர்­தனவால்  கொம்­பன்­யானை  ராஜா, தேசிய சொத்­தாக பிர­க­டனப்படுத்­தப்­பட்­டது.  இவ்­வாறு  ஒரு யானை  தேசிய சொத்­தாக  பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டு­வது உலக வர­லாற்றில்  இது இரண்­டா­வது  முறை­யாகும்.

வரு­டந்­தோறும்  நடை­பெறும் கண்டி  எசல பெர­ஹ­ராவில் ராஜா யானை கம்­பீ­ர­மாக பவனி வரு­வதால் தேசிய ரீதி­யாக  பெரு­ம­திப்பைப் பெற்­றது.  தனது  ஐம்­பது  வருட சேவையின்  பின் 15.07.1988 இல் உயிர் நீத்­தது.  திய­வ­தன  நிலமே ரஞ்சன்  விஜே­ரத்­னவின்  அபிப்­பி­ரா­யப்­படி  ராஜாவின்  உடல்  பாது­காக்­கப்­பட்டு  பிரத்­தி­யே­க­மான  அரும் பொருட்  காட்­சி­ய­க­மொன்றில்  வைக்­கப்­ப­ட­வேண்­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ராஜாவின் உடல் அரும்­பொருட்காட்­சி­ய­கத்தில்

யானை  உடலில் உள்ள  பாகங்கள்  துப்­ப­ரவு  செய்­யப்­பட்டு  பஞ்சு போன்ற  பழு­த­டை­யாத  பொருட்கள் உள்ளே  அடைக்­கப்­பட்டு  ராஜா உடலை பாது­காப்­ப­தற்­கான  வேலைகள்  நிறை­வேற்­றப்­பட்­டன.  இதற்­கான முழுச் செலவும் அப்­போது  ஜனா­தி­ப­தி­யா­கவி­ருந்த ஆர்.பிரே­ம­தாஸவின்  பணிப்பின் பேரில்  ஜனாதிபதி  நிதியிலிருந்து  பெறப்பட்டது.

இந்த அரும் பொருட்காட்சியகம் பிரதம மந்திரியாக இருந்த டீ.பி.விஜேதுங்கவால் திறந்து வைக்கப்பட்டது.

ஆயிரம் ரூபா நாணயத்தாள்

ராஜா யானையின்  மதிப்புக் காரணமாக, ராஜா யானையையும் அதனைப் பராமரித்து வளர்த்து  தலதாவுக்கு  வழங்கிய  உமறு லெவ்வைப் பணிக்கரையும் கௌரவிக்கும் வகையில்  யானையுடன்  பணிக்கர் நிற்கும்  படத்தையும்  ஆயிரம் ரூபா  நாணயத்தாளில்  பதித்திருப்பதையும்  ஏறாவூருக்கும் இலங்கை  முஸ்லிம்களுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதவேண்டும்.

1989 டிசம்பர் 12 இல் ராஜா  யானையைச்  சிறப்பிக்கும்  அஞ்சல் முத்திரை யொன்றும்  வெளியிடப்பட்டது.   

1 comment:

Powered by Blogger.