April 30, 2018

யோகி ஆதித்யநாத், உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்..!

'யோகி ஆதித்யநாத்! நீயும் உனது வசம் உள்ள காவல் துறையும் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. அந்த சிறுமியின் தந்தையை காவல்துறை அடித்து துன்புறுத்துகிறது. இதனை கண்டு கொள்ளாத உன்னை தாயாகிய நான் சபிக்கிறேன். உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.

எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வு முறையை கற்றுக் கொடுத்துள்ளேன். சகோதரியை தாயை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை எத்தனை மரியாதையோடு பார்க்க வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளேன். உனது கூட்டத்தினரைப் போல அவன் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அந்த நிமிடமே அவனை வெட்டி போட்டிருப்பேன்.

உனக்கும் மோடிக்கும் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர்களையும் காப்பாற்ற வக்கில்லாமல் பதவியை காப்பாற்றிக் கொள்ள குற்றவாளிகளை தப்ப விட்டிருப்பீர்கள்.

யோகி ஆதித்யநாத்! உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.

''குழந்தைகளைக் காப்பாற்றிய, மருத்துவர் கபில்கான் குற்றமற்றவர்" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு


உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. அப்போது, பணியில் இருந்த டாக்டர் கஃபீல்கான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வரவழைத்து சில குழந்தைகளை காப்பாற்றினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு சொந்த பணத்தையே கஃபீல்கான் கொடுத்தார். இக்கட்டான சூழலில் முடிந்த வரை மருத்துவ சேவையாற்றிய அவரை யோகி ஆதித்யநாத் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. கடந்த 7 மாத காலமாக அவர் சிறையில் இருந்து வருகிறார். ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். ஏப்ரல் 25- ந் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கும் கஃபீல்கானுக்கும் எந்த வர்த்தகத் தொடர்பும் இல்லை. குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கும் தகுந்த ஆதாரங்கள் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளவில்லை. இதற்கு முன், எந்த குற்றச்சாட்டுகளும் கூட அவர் மீது இல்லாத நிலையில் சாட்சிகளை மிரட்டக் கூடும் என்பதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை' என்று உத்தரவிட்டு   கஃபீல்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உறுதி செய்தார். 

சிறையில் இருந்த கஃபீல்கான், ''உத்தரபிரதேச அரசின் தோல்விக்கு தன்னை பலிகடா ஆக்குவதாகவும் தன் குடும்பத்தினரின் உயிருக்கு உத்திரவாதம் இலலை '' என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார் . டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த கஃபீல்கானின் மனைவி, அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு விநியோகம் செய்தார். செய்தியாளர் சந்திப்பின் போது,  சிறையில் கஃபீல்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கூட மறுக்கப்படுவதாக அவரின் மனைவி குற்றம்சாட்டினார். இதையடுத்து,  கோரக்பூர் சிறை நிர்வாகம் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற அனுமதியளித்தது. 

பதியுதீன் மஹ்மூத்தே, முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திவாரமிட்டார் - சிவசேனை

பிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும், அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை சன்முகா இந்துக்கல்லூரியில் எழுந்துள்ள அபாயா சர்ச்சை தொடர்பில் குறிப்பிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் மாணவர்களின் பெற்றோரது எதிர்பார்ப்புகளை கல்வித் திணைக்களம் புரிந்துகொண்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

இதே பிரச்சினை அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாளத்தில் காணப்படுகிறது. சைவ மாணவர்களுக்காக உறுவாக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் உள்ளனர்.

1971 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் கிழக்கில் முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திபாரமிட்டார். இவர் பல்கலை கழகத்திற்க்கு தரப்படுத்தலை கொண்டுவந்ததுடன் தமிழ் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆசிரியர்களை நியமிக்க வழிசமைத்தார்.

பிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும் அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்ச பரிந்துரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ச நடுநிலையாக செயற்படக் கூடிய நபர், இதனால் அவர் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டார். இதன் காரணமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அங்கம் வகிக்கும் முற்போக்கு அணியின் சார்பில் சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கூட்டு எதிர்கட்சி மூன்று அணிகளாக பிளவுப்பட்டு செயற்பட்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட சிங்கள தேசியவாத சக்திகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , பசில் ராஜபக்ச உள்ளிட்ட அணியினர், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவும் ஆதரவு வழங்க இந்த அணியினர் முன்வந்துள்ளனர். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனால், நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால் பொதுத் தேர்தலில் மூலம் பிரதமராக பதவிக்கு வரலாம் என மகிந்த ராஜபக்ச எண்ணுவதாக கூறப்படுகிறது. அதேவேளை

வாசுதேவ நாணயக்கார உட்பட இடதுசாரிகளும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. இதன் காரணமாகவே கோத்தபாயவுக்கு பதிலாக சமல் ராஜபக்சவை கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள இடதுசாரிகள் பரிந்துரை்த்துள்ளதாக பேசப்படுகிறது.

கட்சியின் பதவிகள், ஒரே கும்பலினால் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது - பாலித

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய -30- தினம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து திருப்தி கொள்ள முடியாது. எனினும் கட்சியை பலமாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும்.

கட்சியின் தலைமைப் பதவி முதல் அனைத்து விடயங்களிலும் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது.

மக்களின் நிலைப்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கட்சியின் பதவிகள் ஒரே கும்பலினால் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சீட்டாடும் போது விளையாடுவோர் மாறமாட்டார்கள், சீட்டுகளே மாறும்.

இம்முறை சீட்டுக் கட்டின் சீட்டுக்கள் ஒரே கும்பலின் கைகளுக்குச் சென்றுள்ளது.

கட்சியில் முழு அளவிலான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், அது தலைமைத்துவ பதவியிலிருந்தே மே;றகொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சேலை உடுத்துவது உரிமையென்றால், அபாயா அணிவதும் உரிமைதான்..!


ஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களும் போதிக்கின்ற பெண்களின் கண்ணிய உடைக்கலாச்சாரம் இதுதான்.

கிறிஸ்தவ 'கண்ணியாஸ்திரிகள்' அணியும் ஆடை என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது. அதேபோல்தான் இந்து சமயத்தின் பிறப்பிடமான வட இந்தியாவில் இன்றளவும் பெண்கள் தலையை மறைத்து முக்காடு இட்டுத்தான் உடை அணிகின்றனர். இதற்கு இந்திய முன்னாள் ஜனாதிபதி 'பிரதீபா பட்டேல்' ஒரு சிறந்த உதாரணமாகும்.

தற்போது பெண்களில் பெரும்பாண்மையானவர்கள் அணியும் நவீன உடைக் கலாச்சாரங்கள் மதங்கள் கற்றுக் கொடுத்தவை அல்ல மாறாக வயிற்றுப் பிளைப்புக்காக பெண்களை வைத்து கூத்தாடும் சினிமாக்காரரர்கள் ஏற்படுத்தி கொடுத்தது. இவ்வுடைக் கலாச்சாரத்தினால் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான்.

பெண் சுதந்திரம் என்ற பெயரில் இன்று பெண்களின் ஆடைக் குறைப்பினை ஊக்குவிக்கும் பல கயவர்கள் சமுக மட்டத்தில் பல இடங்களில் உலா வருகின்றனர். ஆனால், ஒழுக்கத்தை போதிக்க கூடிய ஒரு பாடசாலை அதுவும் ஒரு பெண் அதிபரைக் கொண்ட பாடசாலை நிர்வாகம் இவ்வளவு கீழ்த்தரமான வன்மத்தைக் கொண்டிருப்பது பாடசாலையில் கற்பிக்கப்படும் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் அதன் உள்விவகாரங்களில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

ஏனைய மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதம் பாலியல் சம்பந்தமான விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை மறுக்க முடியாது. அவர்களின் கோயில் சிற்பங்கள், பண்டிகைகள் உருவாகிய பின்புலங்கள், லிங்கம் போன்ற வழிபாட்டு சின்னங்கள் போன்றவை இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாகும். ஆனால் அவை பற்றி ஏனைய சமயத்தவர்கள் விமர்சனம் செய்ய முடியாது. காரணம் அதற்குரிய தத்துவங்கள் என்ன..? என்பதை இந்து மதத்தை படித்தவர்கள்தான் அறிவார்கள். 

இஸ்லாமிய மார்க்கமும் 'நீங்கள் ஏனையவர்களின் கடவுள்களைத் திட்டாதீர்கள். அவ்வாறு நீங்கள் திட்டினால் அவர்கள் அல்லாஹ்வை வரம்பு மீறி திட்டுவார்கள்.' என்று ஏனையவர்களின் கடவுள்களை விமர்சிப்பதை தடை செய்கின்றது.
இந்திய சினிமாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஆடைக்கலாச்சாரமானது பெண்களுக்குரிய பாதுகாப்பினையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சினிமா மோகம் பிடித்த இளம் பெண்கள் ஆடைகள் விசயத்தில் மாத்திரமல்ல தங்களை அழகு படுத்திக் கொள்ளும் விசயத்திலும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
காமசூத்திராவிற்கு அங்கீகாரம் கொடுத்த சினிமாவுக்கும் அந்த சினிமாவே கெதி என்று கிடக்கும் ஒரு சமுகத்திற்கும் பெண்களின் கண்ணியம் பற்றி அலட்டிக் கொள்ளவேண்டிய தேவை இல்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சீரழிந்த கலாச்சாரத்தை அடுத்தவர்கள் மீது திணிப்பது என்ன வகையில் நியாயம்?

குறிப்பிட்ட சில காலத்திற்கு முன்புவரை நமது நாட்டில் குட்டைப் பாவாடை அணிவது விபச்சாரிகளின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அனேகமானவர்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர். பகலில் கூந்தலுக்கு மல்லிகைப் பூ வைத்தால் குடும்ப பெண் என்றும் அதே மல்லிகைப் பூவை இரவில் வைத்து சென்றால் அவள் விபச்சாரி என்றும் இன்றளவிலும் தமிழ் நாட்டில் சில இடங்களில் பெண்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

இவை அனைத்தையுமே கற்றுக் கொடுத்தது சினிமாவே தவிர மதங்கள் அல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன் புதுடில்லியில் ஒரு இளம்பெண் ஓடும் பஸ்ஸில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 'இவ்வாறான சம்பவங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் அபாயாவானது பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கின்றது' என்று இந்துக்களின் புனிதத்தலமாக கருதப்படும் மதுரை ஆதீனத்தின் தலைவர் 'அருணகிரிநாதர்' சொல்லியிருந்தார்.
அதேபோல் பாபர் மசூதியை இடிப்பதற்கு காரணமாயிருந்த 'அத்வாணி' கூட அரபுநாட்டு குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்து மதத்தை படித்தவர்கள் இவ்வாறு இஸ்லாத்தை பற்றி விளங்கியிருக்கும்போது இந்து மதத்தை பாதுகாக்கின்றோம் என்று கிளம்பியிருக்கும் அரைவேக்காட்டு இனவாதிகளும் அதற்கு துணை போகும் பாடசாலை நிர்வாகமும் மிகவும் கண்டிக்கத்தக்கவர்கள்.

சண்முகா வித்தியாலயம் இருக்கும் அதே இடத்தில்தான் கோணேஷ்வரா கோயிலும் இருக்கின்றது. அதற்கு வரும் பார்வையாளர்களில் அபாயா போட்ட பெண்களும் பௌத்த மதத்தைச் சார்ந்த பெண்களும் வருகின்றனர். ஏன் அவர்களையெல்லாம் உங்கள் கலாச்சார? உடை அணிந்து வர சொல்வதில்லை.?; கோவிலுக்குரிய வருமானம் பாதிக்கப்படும். வருமானம் கிடைக்குமானால் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க முடியும் என்பது இந்து மத பாதுகாவலர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இனவாதிகளின் கொள்கையா..?

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய தேசங்களில் குறிப்பாக பெண்கள் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை நன்கு விளங்கிக்கொண்டும் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் கண்ணியத்தை நன்கு உணர்ந்து கொண்டும் அதன்பால் விரைந்து வருவதற்கு இஸ்லாமிய பிரச்சாரகர்களைவிட இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்தான் காரணம்.

ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பாடசாலையிலேயே கவர்ச்சியான ஆடையுடன் வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாடம் படிப்பார்களா அல்லது பாலியலின் பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அதிபரும் அதனோடு தொடர்பு பட்டவர்களும் சிந்தனையற்றிருப்பது கவலை தரக்கூடிய விடயமாகும்.

இன்றைய இளம் சமுதாயத்தினர் சீரழிந்து சின்னா பின்னமாகிப் போவதற்கு பெண்களின் அரைகுறை கவர்ச்சி ஆடைகள் தான் காரணம் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதல்ல அண்மைக்கால சம்பவங்களே இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

உடலினை வெளிக்காட்டும் பெண்களின் கவர்ச்சி ஆடையினால் கவரப்பட்டு வக்கிரப் புத்திக்கு உள்ளாக்கட்டவர்களினாலேயே வித்யா, சீமா, சேயா. ஆசிபா போன்ற இளஞ் சிறுமிகள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது எல்லோரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

சண்முகா வித்தியாலயத்தில் நடந்த பிரச்சினை ஆடை விடயத்தில் மட்டும் சம்மந்தப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்ற இனவாதிகளின் செயற்பாடாகவே தெரிகிறது. 

அத்தோடு தமிழ் தலைவர்கள் வாய் பொத்தி மௌனிகளாக இருப்பதும் இப்போது இரா. சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை கட்டினால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று பொறுப்பற்ற விதத்தில் கருத்துத் தெரிவித்திருப்பதும் முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.

தினக்குரல் தலைப்புச் செய்தி தொடர்பாக, முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு

தினக்குரல் தலைப்புச் செய்தி தொடர்பாக, முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு
ஆப்கான் குண்டுத் தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் மரணம் - இலங்கையும் கண்டனம்


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக குறித்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.  

குறித்த தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பிரதம புகைப்பட பிடிப்பாளர் ஷா மராய் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவாரத்திற்கு முன்னதாக காபுலில் வாக்காளர் பதிவு நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அரசாங்கம்,முட்டாள்தனமான இந்த தாக்குதலில்,  காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
காபூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பொதுச் சுகாதார பரிசோதகரின் மகள், டெங்குவுக்கு பலி


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச்  சேர்ந்தவரும் வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவியுமான செல்வி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (30) உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு டெங்குத் தொற்று காரணமாக உயிரிழந்த மாணவி,  பொதுச் சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார்.

கடந்த 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 1இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜதுர்ஸ்ரிக்கா (வயது 17), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.


பாடசாலையிலும், அரச நிறுவனங்கள் அபாயாவை தடை செய்ய வேண்டும் - ஞானசாரா

நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது.  முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் , அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான  சட்டத்தினை கொண்டுவர வேண்டும் .

அவ்வாறு இல்லாவிடின்  நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ , மாணவிகளுக்கு  முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று சில பாடசாலைகள் வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்க கூடியதாகவே காணப்படுகின்றது. பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் முழுமையாக உடம்பினை மறைக்கும் அபாயா ஆடையினை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து  அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.

 பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக முஸ்லிம் ஆசிரியர்களின் கணவன்மார் கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாட்டினை செய்திருக்க வேண்டும். பாடசாலைக்குள் அத்துமீறிய நிலையில் பாடசாலை அதிபரை அச்சுறுத்தியமையானது கண்டிக்கத்தக்கது. நாட்டில் உள்ள தேசிய பொது சட்டங்களுக்கு முரணாகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டு வருகின்றனர்.

அதாவது நீதிமன்றங்களில் தொப்பி, மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான  சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது . ஆனால் இவர்கள்  அதனை பின்பற்றுவது கிடையாது. தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த நிகழ்வின் பின்னர் சமூக வலைத்தளங்களில் இலங்கையின்  தேசிய ஆடையான  சேலையினை அவமதிக்கும் பதிவுகள் இடம் பெற்றதுடன் சிங்கள மாணவர்களின் பாடசாலை சீருடைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளின்  சீருடைகள் தொடர்பில் மிகு அருவருக்கத்தக்க பதிவுகள் இடம்பெற்று வருகின்றது . தேசிய உடையினை பற்றி அவமதிக்கும் பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது. இதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. மனித வாழ்க்கையில் ஆடைகள்  என்பது ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது. ஒருவரை தவறான முறையில் நோக்கமிட ஆடைகள் காரணமாக அமையாது பார்ப்பவரின் எண்ணங்களும், பார்வையும் தவறாக காணப்படும் போது நிகழ்வுகளும் தவறானதாகவே காணப்படும்.

தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையில்  நல்லிணக்கம் என்பது பெயரளவிலே காணப்படுகின்றது. ஆனால் அமைச்சுக்களின் மத்தியில் நல்லிணக்கம்  சிறந்த முறையில் காணப்படுகின்றது என தெரிவித்தார்.

ஹபாயா வேண்டாம், சேலை போதும்..!!

இந்த பதிவின் தலைப்பின் ஒரு பகுதியை மட்டும் தந்துள்ளேன் இதன் மிகுதி பகுதியை சரியான வார்த்தைகளை கொண்டு பூர்த்தி செய்யும் பொறுப்பை மதம் கடந்து வேண்டுகிறேன்

தற்காலம் நாம் வாழும் பகுதிகளில் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாத நிலை காணக்கூடியதாக இருக்கிறது இது சிறிய அளவில், அரசியல் லாபத்திட்காக செய்யக்கூடிய ஒன்றாக இருந்த போதிலும் பெரும்பாலும் சில தர்க்க ரீதியான உண்மைகளை நாம் மறந்து அதட்கு எதிராக செயல்படுவதுதான் வருத்தத்தை தருகின்றது இன்னும் இது படித்த கல்விமான்களிடத்தில் காணக்கூடியது, இன்னும் பேரதிர்ச்சியை தருகின்றது.

கடந்து போன வாரங்களில் ஆடை சம்பந்தமாக சில பிரச்சினைகள், வாதப்பிரதிவாதங்கள் போராட்டங்கள் போன்றவற்றை நாம் கண்டோம் இது எந்த அளவு முட்டாள்தனமானது என்பதை நாம் சிந்திக்க தவறிவிட்டோம் அதை இங்கு சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன்.

முதலில் ஒரு மனிதனது ஆடையை எந்த காரணிகள் தீர்மானிக்கின்றன என்று நாம் பார்ப்போமேயானால் பிரதான காரணியாக அவன் வாழும் நாட்டினது அல்லது தேசத்தினது தட்ப வெப்ப நிலையில்தான் தங்கியிருக்கின்றது அதட்கு ஏற்றாற்போல்தான் ஒவ்வொரு மனிதனும், விலங்கும் தன்னை தயார்படுத்திக்கொள்கின்றன. உதாரணமாக கடும் குளிர் பிரதேசங்களான அந்தாட்டிக்கா போன்ற இடங்களில் நாம் ஆடையை பற்றி சர்ச்சை செய்வோமா? அங்கு நம்மை காத்துக்கொள்ளும் கடினமான கம்பளி ஆடைகளைத்தான் அணிவோம். இன்னும் வெப்ப வலய தேசங்களில் இந்த கம்பளியினால் ஆன ஆடையை அணிவதில்லை மாறாக சூரிய வெப்பம் உள்வாங்காத ஆடைகளை தெரிவுசெய்து அணிவோம்.

மற்றுமொரு பிரதான வாதமாக கலாச்சாரம் என்ற ஒரு கருப்பொருளை வைக்கின்றனர். இந்த கலாச்சாரம் எதன் அடிப்படையில் எழுகின்றது என்று பார்ப்போமேயானால் மதத்தை வைத்துத்தான் சொல்கிறார்கள். நாங்கள் இந்து எங்களுக்கு என்று ஒரு தனி கலாச்சாரம் உண்டு என்று சொல்கிறார்கள். இவர்களிடத்தில் ஒரு கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம். அதாவது நீங்கள் இந்துவாக பிறக்க வேண்டும் என்பதை தீர்மானித்தது யார்? அத்தோடு நீங்கள் இந்துவாகத்தான் பிறக்கவேண்டும் என்பதட்காக நீங்கள் செய்த முயட்சிதான் என்ன? இந்த இரண்டு கேள்விகளுமே  விடை தெரிந்த ஒரு சிறந்த சிந்தனையாளனுக்கு போதுமானதாகும்.

இந்த பூமியில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் இருக்கும் தேசமோ, பேசும் மொழியோ, சார்ந்த மதமோ அவனால் தீர்மானிக்க படுவதும் இல்லை அதட்காக யாரும் எந்த முயட்சியும் போராட்டங்களும் செய்வதில்லை இது யதார்த்தமான உண்மை அல்லவா? இதில் என்ன வேடிக்கை என்றால் திருகோணமலை உள்ள அந்த பாடசாலையில் சேலைக்கு ஆதரவாக  போராட்டம் நடத்தியவர்கள், வேறு மதம் சார்ந்து பிறந்து இருப்பார்களேயானால் சேலைக்கு எதிர்த்து போராட்டம் அல்லவா நடத்தியிருப்பார்கள்? எனவே பிறப்பு, இறப்பு என்பது நாம் தீர்மானிப்பதில்லை அதட்கு இடைப்பட்ட வாழ்வே நம் கையில் உள்ளது அது நமக்கும் பிரமனிதனுக்கும் நன்மை உள்ளதா? என்பதை கவனத்தில் கொள்வதுதான் மனித நேயம்.
மனிதனுடைய வாழ்க்கை கட்காலத்தில் இருந்து நவீன காலம் வரைக்கும் முன்னேறி வந்து கொண்டுள்ளதே தவிர மனிதனும் அவனுடைய உணர்வுகளும் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாத ஒன்று. ஒரு ஆணின் அங்க அவயங்களும் ஒரு பெண்ணின் அங்க அவயங்களும் மாறாத ஒன்று. இது காலத்தால் மாற்றம் அடைந்துள்ளதா? இந்த அங்க அவயவங்கள் இருவருக்கும் சமமானதாக கருத முடியாது. பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் சில விடயங்களில் அந்த சம உரிமை இல்லாது போகின்றது அதில் ஒன்றுதான் இந்த ஆடையாகும்.  ஒரு பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்னவெனில் ஒரு வயது வந்த  ஆண் அணிந்துகொள்ளும் குறைந்த பட்ச ஆடையை ஒரு வயது வந்த பெண்ணுக்கு போதுமானதா? என்று கேட்போமேயானால் எந்த ஒரு ஒழுக்கமுள்ள மனிதனும் இல்லை என்ற பதிலே சொல்வார்கள். வீடாக இருந்தாலும் சரி தந்தைக்கு முன்னாள் வயது வந்த மகன் ஒரு கால் சட்டையை மாத்திரம் அணிந்து கொண்டு இருக்க முடியும் அதே கால் சட்டையை மட்டும் ஒரு வயதுக்கு வந்த மகளால் இருக்க முடியுமா? ஒரு தந்தைக்கு முன்னாடியே இந்த நிலைமை என்றால் அப்போ அந்நியர்களுக்கு முன்னால்?

கடவுள் எல்லா இனங்களுக்கும் இனவிருத்தி செய்தல் என்ற ஒரு செயல்பாட்டை வைத்துள்ளார் இந்த இனவிருத்தி இல்லை என்றால் மனித குளம் பல்கி பெருகாது. இந்த இன விருத்தி   செய்வதட்காகவே ஆண் இனத்தை பெண் இனம் கவரும் வகையிலும், பெண் இனத்தை ஆணினம் கவரும் வகையிலும்  இயற்கையாகவே சில பிரத்தியோக அம்சங்கள் காணப்படுகின்றன இது தாவர விலங்குகளிடத்திலும் உண்டு தன் மகரந்த சேர்க்கை, அயன் மகரந்த சேர்க்கை என்றெல்லாம் உண்டு என்பது படித்த மாணவர்களுக்கு தெரியும் .

கடவுள் மனித இனத்தை பொறுத்தவரையில் இந்த ஈர்ப்பு தன்மையை பெண்ணுக்கே அதிகளவில் கொடுத்திருப்பது நாம் சொல்லாமலே எல்லோரும் அறிந்துகொண்ட ஒரு விடயம். இந்த அடிப்படையில் ஆணை விட  பெண்ணுக்கு உடலில் கவரக்கூடிய கணபரிமாணங்களை வைத்திருப்பது அந்த கவர்ச்சிக்கு பெரும்பங்கை வழங்குகின்றது.

இந்த கவர்ச்சியை நாம் யாருக்கு காட்டவேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம் சிந்திக்கவில்லை. விலங்குகள் போன்ற ஒரு வாழ்க்கையை மனிதன் வாழவில்லை. விலங்குகளுக்கு ஒரு குடும்பம், சமூகம் என்ற ஒரு கட்டமைப்பு  இல்லை.  எந்த விலங்கும் அதன் இனத்துடனுன் எத்தனை  விலங்குகளுடனும் கலவியில் ஈடுபடும். மனிதன் அவ்வாறில்லை அவனுக்கு குடும்பம் என்ற கட்டமைப்பும், அதைத்தாண்டி சமூகம் என்ற கட்டமைப்பும் உண்டு. இன விருத்திகூட கண்டபடி செய்வதில்லை அதட்கு நெறிப்படுத்தப்பட்ட முறைமை உண்டு அது திருமணம் என்ற பந்தத்தில் கட்டுண்டு இருப்பதை நாம் அறியாத ஒன்றல்ல.

எனவே எந்த ஒரு பெண்ணும் தன உடல் அழகை தன் கணவனுக்கு அன்றி வேறு எவரையும் கவரவோ, எவருக்கும் காட்டவோ முடியாது என்ற ஒரு நிலையை ஏற்றுத்தான் ஆகவேண்டும். மாறாக பெண் சுதந்திரம் என்று பேசுவது முற்றிலும் இயற்கைக்கு முரணானது. இயற்கையை எந்த இடத்தில் மீறப்படுகின்றதோ அங்கு ஆபத்து உண்டு அதனால்தான் நான்கு சுவருக்குள் இருக்கவேண்டிய பெண்களின் கவர்ச்சிகள்  பெரு வழியில் மலிந்து காணப்படும்போது ஆண்கள் கவரப்பட்டு விபச்சாரம் என்ற சமூக சீர் கேட்டையும், பெண் இணங்காத பட்சத்தில் கடத்தல், கற்பழிப்பு, கொலை இது போன்ற மா பாதக செயல்கள் இடம்பெறுகின்றன. இத்தனைக்கும் பகுத்தறிவுள்ள  சிறந்த சிந்தனையுள்ள  எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வு ஒன்று உண்டு என்று சொன்னால் அது ஆடையை தவிர வேறில்லை. ஆண்களின் ஆடை, அது எந்த விதத்திலும் சமூகத்தை சீரழிப்பதில்லை ஆனால் பெண்களின் ஆடையில்தான் சமூக சீர்கேட்டின் ஆரம்ப புள்ளியாக இருக்கின்றது.

கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள, பரபர தகவல்


கட்சி மறுசீரமைப்பினால் அதிருப்தியடைந்துள்ள ஐக்கியத் தேசியக் கட்சியின் கணிசமான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் திரைமறைவில் இரகசிய பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் என்று அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சிலருடனும் இது தொடர்பில் பேசப்பட்டு அவர்களையும் அரசின் பங்காளிகளாக இணைத்துக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சரொருவர் தெரிவித்திருந்தார்.

புதிய ஆட்சியை அமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ அணியில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் பேச்சு நடத்தப்படவுள்ளது.

அவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாத பட்சத்தில் வெளியில் இருந்து ஆதரவை வழங்க முடியும் என்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சி அமையத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் பிரதமராக யாரை நியமிப்பது என்பன பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அரசாங்கத்திற்கு ஈவு, இரக்கம் கிடையாது - மஹிந்த

இந்த அரசாங்கத்திற்கு ஈவு இரக்கம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சவூதி அரேபியாவில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை விலை அதிகரிப்பு என்ற போர்வையில் எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

நாட்டு மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அரசாங்கம் ரோபோ போன்றது, ஈவு இரக்கம் எதுவும் கிடையாது.

எரிவாயு விலை அதிகரிப்பினால் உணவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டும் காணப்பட்ட எரிவாயு சிலிண்டர் பயன்பாடு இன்று கிராமங்களிலும் வியாபிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு மட்டுமன்றி இவர்கள் ஏதேனும் ஓர் பொய்யைக் கூறி மின்சாரம், நீர்க்கட்டணம் என்பனவற்றையும் அதிகரிக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பஸ் - ஆட்டோ கட்டணம், அதிகரிக்கும் வாய்ப்பு


அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லும் நிலையில், அதற்கேற்ற வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பல்வேறு விலை அதிகரிப்புகள் காரணமாக, தனியார் பஸ் தொழிலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த, பஸ் கட்டண மறுசீரமைப்பின்போது எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

2

பெற்றோலின் விலை 150 ரூபாவைவிட அதிகரிக்குமாயின் முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுமென, அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய தாம் செயற்படத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக பெற்றோலின் விலை அதிகரிக்கப்படுமாயின் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும், எனினும் 150ரூபாவை விட விலை அதிகரிக்கப்படுமாயின் அதற்கேற்ப, தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு


திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் சென்ற வாரம் 5 முஸ்லீம் ஆசிரியைகள் தங்களின் கலாச்சார ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதற்கு அதிபராலும் பாடசாலை நிர்வாகத்தினராலும் தடைவிதிக்கப்பட்டதையும் அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து வெளிப்படையாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட ஆசிரியைகளைச் சந்திப்பதற்காகவும், துல்லியமான தகவல்களைத் திரட்டுவதற்காகவும் குரல்கள் இயக்கம் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது.

குரல்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சப்ரி, சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ருஷ்தி ஹஸன், கமால் ஆகியோர் குரல்கள் இயக்கம் சார்பாக திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் அவர்களின் கணவர் மார்களைச் சந்தித்து நடந்தேறிய சபவங்களின் முழுத்தகவல்களையும் பெற்றுக் கொண்டதோடு அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆலோசனைகளையும் குரல்கள் இயக்கம் வழங்கியது.

ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல், சம்பவம் தொடர்பான முறைப்டாடொன்றை மனித உரிமை ஆணையகத்திற்கு சமர்ப்பித்தல், குறிப்பிட்ட ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை அதிபரை மிரட்டியதாக பரப்பட்ட பொய்ப் பிரச்சாரத்திற்கு செய்தித்தளங்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தல், இனவாதத்தை தூண்டும் வகையில் முக நூல்களிலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடபபட்டன.

ஆசிரியைகள், அவர்களது கணவன்மாரும் ஒத்துழைப்புத்தருவதாகவும் உறுதியளித்தனர்.

சம்பந்தன் ஐயாக்கு (உங்களுக்கு மறந்தாலும், எங்களுக்கு மறக்காது)


உங்களுக்கு மறந்தாலும் எங்களுக்கு மறக்காது.. 

1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. 

இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது. 

இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர் யாரும் இருக்கவுமில்லை. 

அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார், 

நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். 

இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று. கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார். 

அவர் சொன்னார் "தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது" . இந்த பதிலால் சர்ச்சையும் அடங்கியது.

தலைவர் அஷ்ரப் எங்கே...? ஐயா சம்பந்தன் எங்கே? அவரல்லவோ தலைவர்...!

இம்தியாஸை செயலாளராக்க சஜித் பிடிவாதம், நழுவினார் ரணில்


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரை நியமிக்குமாறு, அமைச்சர் சஜித் பிரேமதாஸா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.

சகல சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், கட்சியில் மூத்தவர் எனவும் இதன்போது சஜித் பிரேமதாஸா ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைப்படுமிடத்து இதற்காக தேர்தலை நடத்துமாறும்  சஜித் வலியுறுத்தியுள்ளார். 

எனினும் இதன்போது குறிக்கிட்டுள்ள ரணில், ஐ.தே.க. யின் யாப்பின்படி தலைவருக்குள்ள அதிகாரத்தின் கீழ் ஐ.தே.க. செயலாளரை தலைவரே நியமிக்க முடியுமெனக்கூறி நழுவியுள்ளார்.

அதேவேளை ஐ.தே.க.யில் தற்போதுள்ள சாபநிலைக்கு, கட்சியின் யாப்பே காரணமெனவும், யாப்பின்படி தலைவருக்கு  அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதும், செயற்குழுவில் கட்சி தலைவருக்கு சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெசாக் தானத்தில், புத்தம் புதிய பணநோட்டு விநியோகம் - மாவனல்லையில் சுவாரசியம் (படங்கள்)


பண நோட்டுக்களை விநியோகித்து வெசாக் தானம் வழங்கிய அபூர்வமான சம்பவம் ஒன்று மாவனல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனில் திசாநாயக்க தனது பெற்றோருக்கு புண்ணியம் தேடி இந்த தானத்தை வழங்கியுள்ளார். இவர் சுதந்திரக் கட்சியின் சார்பில் மாகாண சபையில் உறுப்பினராக கடமையாற்றியிருந்தார். 

 (29) காலை அவரது வீட்டின் முன்பாக 9.30 மணியளவில் ஆரம்பமான பணநோட்டுக்கள் தானம் வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ளது. 

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தம் புதிய நூறு ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன், இந்துனில் திசாநாயக்க தனது கையாலேயே அனைவருக்கும் பணநோட்டுக்களை விநியோகித்து உள்ளார்."இஸ்லாம் தொடர்பில் முஸ்லிம்கள், அதீத பிரமையில் வாழ்கின்றார்கள்"

முஸ்லிம்கள் நாம் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக  அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உபன்யாசங்கள், நாளாந்த வாராந்த பள்ளிவாசல் விஷேட மார்க்க சொற்பொழிவுகள், வானொலி முஸ்லீம் நிகழ்ச்சிகள், வெள்ளி மேதைகளான குத்பாக்கள், புஹாரி மஜ்லிஸுகள், நோன்பு கால விஷேட மார்க்க சொற்பொழிவுகள், திருமண, ஜனாஸா சொற்பொழிவுகள் என இஸ்லாத்தை செவிமடுக்கின்ற சந்தர்ப்பம் பல இருக்கின்றபோது காதியா வகுப்புக்கள் தேவையற்ற ஒன்று என்ற மனப்பதிவு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் உண்மையிலாயவினை மேற்கொள்கின்றபோது மாணவர், மற்றும் இளைஜர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனையின் தாக்கம், ஒழுக்க வீழ்ச்சி, என்பன வரை பார்க்கும்போது எமது அதீத கற்பனை பிழையானது என எண்ணத்தோன்றுகின்றது. பிரபல முஸ்லீம் பாடசாலையில் கல்விகற்று பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மாணவி இஸ்லாம் பாடத்தை விருப்புத்தேர்வாக எழுதி சித்தி எய்திய நிலையில் சக முஸ்லீம் மாணவி வெறுமனே 24 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்துள்ளமை எமது மார்க்க கல்வி தொடர்பான மீளாய்வினை வேண்டி நிற்கின்றது. எனவே காதியா போன்ற முறைசார் கல்வி நடவடிக்கை ஒன்றே எமது அடுத்த சந்ததியையாவது சிறந்த முன்மாதிரி சமூகமாக மாற்றும்' என முஸ்லீம் சமய கலாச்சார திணைக்கள பிராந்திய பொறுப்பதிகாரி ஜுனைட் நளீமி பூநொச்சிமுனை காய்தியா பாடசாலையின் 27வது வருட நிறைவையொற்றி நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு உரையாற்றினார். 

காதியா பாடசாலையின் அதிபர் ரசூல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காதியா சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் பாயிஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இறுதி நிகழ்வாக  மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் மற்றும் ஜுனைட் நளீமி ஆகியோருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி பொன்னாடி பொத்தி கெளரவிக்கப்பட்டது. 

"பல்லின கலாசார சூழலில், ஆடைகளுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்"

-நாகூர் நஹீம்-

இலங்கை பல சமூகங்களில் வாழுகின்ற பல இனங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இப்பல்லினங்கள் அவர்களது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு உரித்தான வழக்காறுகள், நடைமுறைகள், மொழிகள், மதங்கள், நம்பிக்கைகள், அபிலாசைகள் பாரம்பரியங்களைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக எமது திருநாட்டில் பல்வேறு வகையான கலாசாரங்களை இச்சமூகங்கள் கொண்டிருக்கின்றன. ஆடை என்பது பல் சமூக கலாசார விழுமியங்களில் முக்கியமானதாகும். பல கலாசார சமூகக் கட்டமைப்பானது பல்லினங்களுக்கடையிலான சகவாழ்வை கட்டியெழுப்புகின்ற ஒரு அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டியதுடன் அவற்றுக்கான முறைமைகள் மற்றும் பாங்குகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய பல் கலாசார சமூகக் கட்டமைப்பு தொடர்பான புரிந்துணர்வைக் கட்டியெழுப்பி அவைகளை மதிக்கும் போதே இனங்களுக்கிடையிலான அமைதியான சகவாழ்வுக்கான சூழல் நாட்டில் கட்டியெழுப்பப்பட முடியும்.

நல்லாட்சி (Good governance) என்பது அரசாங்கக் கொள்கைகளைத் தீர்மானித்து அவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முயைறாகும். நல்லாட்சியில் ஒவ்வொருவரினதும் கலாசார ரீதியான அடையாளத்தை மதிப்பதும் அவசியமான காரணியாக அமைகின்றது. அவ்வாறு மதிக்கப்படும் போதே பல்லினங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கை கட்டியெழுப்பப்பட முடியும். பிரசைகள் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு விரிவாகும். நிருவாக நோக்கங்களுக்கான பல்லினங்களைச் சேர்ந்த மக்களின் பங்குபற்றுதல் விருத்திடையும். ஒருவர் மற்றரை மதிக்கக் கற்றுக்கொள்ளுவார். வெளிப்படைத்தன்மை விருத்தியடையும். ஒவ்வொருவரும் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற மனிதராக மாறுவார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் தற்போது உருவாகியுள்ள நிலைமையும் இந்த அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும். இப்பாடசாலை இந்துக் கலாசார விழுமியங்ளைப் பேனுகின்ற மாணவர்கள் கற்கின்ற ஒரு பாடசாலையாகும். அதேநேரம் இந்தப் பாடசலைக்கு முஸ்லிம் ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றுகின்றனர். இது நாட்டில் நல்லாட்சியுடன் தொடர்புபட்ட நிருவாக செயற்பாடாகும். இந்தப் பாடசலையில் இந்துக் கலாசாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற அதேநேரத்தில் முஸ்லிம் ஆசிரியைகளும் அவர்களுக்கு உரித்தான ஆடை அணிவதன் மூலம் அவர்களது கலாசார ரீதியான அடையாளத்தைப் பேனுவதற்கான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். இங்கு சகவாழ்வு என்பது அவரவர் கலாசார அடையாளங்ளை மதிப்பதன் மூலமே ஏற்படுத்தப்பட முடியும். இந்தப் பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அவர்களுக்கு உரித்தான ஆடைளை அணிவது மாணவர்கள் பல்லினங்கள் தொடர்பான கலாசாரங்களையும் அடையாளத்தையும் அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கான சூழலை விருத்தி செய்வதற்குமான ஒன்றாகவே பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக, இது பல்லினங்களுக்கிடையிலான சகவாழ்வை குழப்பி முரண்பாட்டை உருவாக்குகின்ற ஒன்றாக அமையாது. அவ்வாறு நோக்கப்படவும் முடியாது. இத்தகைய போக்கு இனங்களுக்கு உரித்தான பாடசாலைகள் அவசியமா என்ற கேள்வியை உருவாக்கி விட முடியும். 

இந்த விடயம் அரசாங்க நிருவாகத்துடன் தொடர்புபட்ட விடயமாகவுள்ளதால், தேவையற்ற இன விரிசலை உண்டுபண்ணுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து நிருவாக ரீதியான தீர்வு ஒன்றினைப் பெறுவதற்கு நாம் அதிகாரிகளுக்கும் அசாங்கத்திற்கும் அழுத்தம் வழங்க வேண்டும். உரிய தீர்வினைப் பெறுவதற்கு இன ஒற்றுமையைப் பற்றிச் சிந்திக்கின்ற அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.  

இவ்வாசிரியைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இடமாற்றமானது அங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தணிப்பதற்கான ஒன்றாகவே அமைய வேண்டும். அங்குள்ள அதிபருக்கும் ஆசிரிய சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் பல்லின கலாசார சமூகத்தில் நல்லாட்சியின் அவசியம் உணர்த்தப்பட்டு அவர்களது பிழையான சிந்தனைகள் களையப்படுவதற்கான விழிப்புணர்வும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். குறித்த ஆசிரியைகளின் தற்காலிக இடமாற்றம் அப்பாடசலையில் உரிய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் இரத்துச் செய்யப்படவேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவது நிருவாகிகளின் கடமையாகின்றது. 

புதிய அமைச்சரவையில், ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

புதிய அமைச்சரவை நாளை (01) பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன.

புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறு விலகிச் சென்றவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் சாத்தியங்கள் இல்லை என்றும், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

April 29, 2018

சம்பந்தனுடன், அப்துர் ரஹ்மான் பேச்சு - வருத்தத்துடன் முடிந்தது

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலாக மாறிவிடக் கூடாது. இவ்விடயத்தில் ஒவ்வொருவரும்  தமது பொறுப்பினை தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது  நீதியின் பக்கம் நின்று அணுக வேண்டும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் தனித்துவமான ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மிகவும் கவலையளிக்கின்றன. சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில்  ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாசார தனித்துவங்களை மதித்து பரஸ்பர அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினை எந்த வகையிலும் எற்றுக் கொள்ள முடியாது. 

மட்டுமன்றி, முஸ்லிம் ஆசிரியையின் கணவரினால் அதிபர் மிரட்டப்பட்டார் என்ற ஒரு பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவசரமான இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு எவரும் தன்னை மிரட்டவில்லை என அந்த அதிபர் தற்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஆக, இந்தப் பிரச்சினை திட்டமிடப்பட்ட வகையில் தீய நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பூதாகரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவே நம்ப வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தான் விரும்பும் ஒழுங்கில் ஆடை அணிவதற்கான சுதந்திரத்தினை இந்த நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது போலவே குறித்த இந்தப் பாடசாலை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கப் பாடசாலையாகும். இதற்கென கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்கள் இருக்கின்றன. இதன் பிரகாரம் சீரான உடைகளை அணிந்து வர வேண்டும் என ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இதைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை. இதனை அனுசரிக்கும் வகையில்  சகல அரசாங்கப் பாடசாலைகளும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமையாகும். முஸ்லிம் கலாசார தனித்துவங்களைப் பேணும் பாடசாலைகள் அனைத்தும் பிற மத  ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் எவ்வாறு சட்டத்தையும் அடுத்தவர்களின் கலாசார தனித்துவங்களையும் மதித்து நடந்து கொள்கிறன என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

முஸ்லிம் பெண்களின் ஒழுக்க, விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ள சம்பந்தன்

-வை எல் எஸ் ஹமீட்-

சண்முகா பாடசாலை விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயா “ முஸ்லிம் ஆசாரியைகளும் சாரி அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் sவிழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார்.

வேலைக்காகவும் வேறு கட்டாயத் தேவைகளுக்காகவும் வெளியில் செல்லும் முஸ்லிம் பெண்கள் இன்றைய நவநாகரீக உலகின் சவால்களுக்கு மத்தியில் தன் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேணுவதற்காக தேர்வுசெய்த ஆடையே “ அபாயா” ஆகும். அதற்குப் பதிலாக “ சாரி” அணிந்துகொண்டுதான் முஸ்லிம் பெண்களும் குறித்த பாடசாலைக்கு வரவேண்டும்; என்று கூறியதன்மூலம் எந்த ஆடை, வேலைக்கும் செல்லும் தமது கண்ணியத்தைப் பூரணமாகப் பேணும் என அவர்கள் முடிவு செய்து தெரிவுசெய்தார்களோ அந்த ஆடையை அணிந்துகொண்டு வரவேண்டாம்; எனக்கூறுவதன் மூலம் அப்பெண்களின் கண்ணியத்தை கேவலப்படுத்தியுள்ளார்.

மட்டுமல்லாமல் பழுத்த அரசியல்வாதியாகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துகொண்டு அப்பெண்களின் அடிப்படை உரிமையை மறுத்ததோடு உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் சவாலுக்குட்படுத்தியுள்ளார். ஒரு பெண் என்ன ஆடை அணியவேண்டுமெனக் கூறுவதற்கு சம்பந்தனுக்கு என்ன உரிமை இருக்கின்றது; என்றும் அவர் சிந்திக்கவேண்டும்.

பெண்கள் “ சாரி” தான் அணிந்துகொண்டு வரவேண்டும்; என்று முடிவையும் கூறிவிட்டு சில விடயங்களைப் பேசித்தான் தீர்க்க வேண்டுமென அவர் கூறுவதாயின் அவர் கூறிய முடிவுக்குப்பின் அதேவிடயம் தொடர்பாக பேசுவதற்கு என்ன இருக்கின்றது? என்பதை சம்பந்தன் கூறவேண்டும்.

திரு சம்பந்தன் ஐயாவும் இந்துக் கல்லூரி அதிபரும் ஆர்ப்பாட்டக் காரர்களும் இன்னும் பலரும் ஒரு விடயத்தைப் புரியாமல் இருட்டில் தடவிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைப்பாடு எவ்வாறானதென்றால் ஏதோ திருமலை சண்முகா இந்துக் கல்லூரிக்கு இம்முஸ்லிம் ஆசிரியைகள் செல்வதற்கு ஏதோ தேவை இருப்பதுபோலவும் அவ்வாறு அவர்கள் வரவிரும்பினால் தமது மரபுகளுக்குக் கட்டுப்பட்டே வரவேண்டும்; என்பது போலவுமே அவர்களின் நிலைப்பாடு இருக்கின்றது. 

"அபாயாவுக்கு தடை" அதிபரின் தவறா..? பாடசாலையின் தவறா..??


திருகோணமலை சன்முகா கல்லூரி நிரவாகத்தின் ஹபாயா தடையை அடுத்து தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் முகநூல் கருத்து முரன்பாடுகள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது. 

அதுவும் பெண்களுக்கு ஆடை அணிவிக்கவும்  அணிந்த ஆடையை களையவும் முகநூளில் போராட்டம். 

இலங்கையில் ஹபாயாவுக்கு தடைவிதித்த ஒரே பாடசாலை திருகோணமலை சன்முகா ஹிந்து கல்லூரி மாத்திரம் அல்ல. 

கொழும்பு றோயல் கல்லூரிக்கு எந்த ஆசிரியராவது, ஹபாயா அணிந்து செல்ல முடிமா ? 

ஏன் விஷாகா மகளிர் கல்லூரி ?

Buddhist Ladis College ?

Holly family convent ?

இது போன்ற நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இலங்கையில் ஹபாயாவுக்கு தடை விதித்துத் தான் இருக்கின்றது.  

இப்பாடசாலைகளுக்கு எதிராக எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் தனிநபர்களும் ஆரப்பாடம் நடத்தவும் இல்லை முகநூளில் போர் கொடி தூக்கவும் இல்லை. 

ஏன் என்றால் அப்பாடசாலைகள் அவ்விடயத்தை அனுகிய விதமும்  நிர்வாக முறைமை மற்றும் யுக்திகளை கையாண்ட விதமும் தான். 

திருகோணமலை ஹிந்து மகளிர் இலங்கை யின் சிறந்த பாடசாலை விருதை மூன்று முறை பெற்றுக் கொண்ட ஒரு பாடசாலை. 

தொடர்ந்தும் சிறந்த பேறுபேறுகளை தேசிய மட்டத்தில் தனதாக்கி வரும் பாடசாலை 

சன்முகா கல்லூரியின் இயற்கை அலகு , வகுப்பறைகளின்  நேர்த்தி,  5S  நிர்வாக கட்டமைப்பு மாணவிகளின் ஒழுக்கவியல் மிகவும் போற்றத்தக்கது. சன்முகாவின் இந்த வளர்ச்சியில் அதிபர் சுலோச்சனா ஜெயபாலன் அவரது நிரவாக திறமை போற்றத்தக்கது. 

ஆனால் இவ்வளவு ஆற்றல்களை தன் அகத்தே கொண்ட அதிபர் ஜெயபாலன் தனது பாடசாலையின் தனித்துவத்தை பாதுகாக்க கையான்ட முறை அதிபரின் ஒட்டு மொத்த ஆழுமையையும் கேள்விக் குறியாக்கியது. 

திருகோணமலை சன்முகாவின் இந்த சம்பவத்தினை நான் கேள்வியுற்றதும் என்னால் நம்ப முடியாது இருந்தது. ஏன் என்றால் திருகோணமலை சன்முகாவுக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன். 

எனது ஒரு சில நன்பர்களும், நானும் இனைந்து பல முஸ்லிம் பாடசாலைளின் அதிபர்களை சன்முகா கல்லூரிக்கு  அலைத்துச் சென்று அவர்களது நிர்வாக திரன் பாடசாலை கட்டமைப்பு போன்றவற்றை ஒரு exposure visit ,ஊடாக lesson learn session களை ஏற்படுத்தி கொடுத்திருந்தோம். 

இந்த பாடாலை அதிபர் தனது சமூக பாரம்பரியத்தை கையான்ட விதம் அவரா இப்படி செயற் பட்டார்? அல்லது அதிபரையும் மீரிய வெளிச் சக்திகள் இந்த விடயத்தை அனுக முனைந்தா  என்ற கேள்வி  எனது உள்ளத்தில் எழுகின்றது.  
பாடசாலையின் தனித்துவத்தை பாதுகாக்க ஹபாயா ஒரு தடையாக இருக்கிறது என்று கருதியிருந்தால் அதனை நிர்வாக கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொண்டு இருக்க முடியும். இது ஒரு தேசிய பாடசாலை இப்பிரச்சினையை இன்னும் இலகுவாகவே தீர்வு கண்டு இருக்கவும் முடியும். இந்த நிர்வாக செயற்பாடுகளை  நான் மதிக்கும்  அதிபர் ஜேயபாலன் அவர்களும் அரியாது அல்ல. 

-யு.எச். ஹைதர் அலி-

அபாயா அணியக் கூடாது - சம்பந்தன் சொல்வது இதுதான்...!

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாயம்

மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்மித்த ஒருசில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

.இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் மக்கள்க வீடுகளை விட்டு வெளியேறுவது பாதுகாப்பாக அமையுயுமெனம் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான மழையை எதிர்ப்பார்க்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து, பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's wrong with this dress code..?

இதில் என்ன தவறு..?


குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலத்தின் அடிப்படையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரையில் பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த பொது மன்னிப்புக் காலம் இந்த மாதம் 22ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

குவைத்திற்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தலைமையிலான அதிகாரிகள் இந்த நாடு கடத்தல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால், மக்கள் அச்சம்

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்பிட்டிய, கெடன்தொல, உடோவிட்ட பகுதியில் வாழும் ஒரு குரங்கிற்காக பிரதேச மக்கள் பயந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகாலத்தில் அந்த பிரதேசத்தில் சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த நாட்களில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் 20 பேருக்கு அதிகமானோரை குரங்கு கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குரங்கு தொடர்பில் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் வனவிலங்கு திணைக்களம் மற்றும் பொலிஸார் இதுவரை குரங்கினை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சண்முகா வித்தியாலய அதிபர் - ஆசிரியர்களை, பணிநீக்கம் செய்ய வேண்டும் - ஷிப்லி பாறூக்


திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

நேற்று (28.04.2018) விஷேட ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றினூடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

அவரவர் கலாச்சாரத்திற்கு அமைவாக தமது உடைகளை அமைத்துக்கொள்வதற்கு இந்நாட்டில் பூரண அதிகாரமுள்ள போதிலும் மிகவும் ஒழுக்கமான முறையில் முஸ்லிம் ஆசிரியைகள் அணிந்துவரும் அபாயா போன்ற ஆடைகளுக்கு திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் தடை விதிக்கப்பட்டமையானது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். நாட்டிலுள்ள அரச பாடசாலையொன்றில் ஆசிரியர்களின் உடை தொடர்பாக தேவையற்ற இன ரீதியான கட்டுப்பாடுகளை திணிப்பதற்கு எவருக்கும் எத்தகைய அதிகாரங்களும் கிடையாது.

இந்நிலையில் இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றமாக அப்பாடசாலையில் கடமையாற்றக்கூடிய பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆகவே இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளும், அதற்கு ஆதரவளிக்கும் நிர்வாக நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும். இந்நாட்டின் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்து பயணிக்கவேண்டியதொரு தருணத்தில் ஒரு சில இனவாதிகளினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாகும்.  

எனவே ஒழுக்கத்தினையும், சமூக ஒற்றுமையினையும் போதிக்கக்கூடிய அரச பாடசாலையொன்றில் மிகவும் மோசமான முறையில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை மேற்கொண்ட நபர்களை கண்டறிந்து அத்தகைய ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பாடசாலை நிருவாகிகள் ஆகியோர்களுக்கு குறைந்த பட்சம் ஒருவருட கால பணி நிறுத்தம் செய்யப்படுவதோடு, குறித்த ஒவ்வொரு நபர்களுக்கும் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் இப்பிரச்சனையின் போது சம்மந்தப்பட்ட இனவாதிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அதிகாரிகளுக்கெதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, குறித்த பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளை மீண்டும் அப்பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இதுவிடயம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா. சம்மந்தன் மற்றும் தேசிய சகவாழ்வு அமைச்சர் கௌரவ மனோ கணேசன் போன்ற பொறுப்புவாய்ந்த தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பனூடாக நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதோடு இவ்வாறான செயற்பாடுகள் இனி எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்கள், மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக இனவாத கருத்துக்களை வெளியிடுவதனையும், ஏனையவர்களின் மத நம்பிக்கை ரீதியான விடயங்களை தேவையற்ற முறையில் விமர்சிப்பதனையும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரும் தவிர்ந்து இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மத்தியில் சிறந்ததொரு இன ஒற்றுமை மேலோங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

-எம்.ரீ. ஹைதர் அலி-

16 ஆண்டுகளுக்குப் பின்னர், மோசமான நிலையில் பொருளாதாரம்

16 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் மிகக் குறைந்த நிலை பதிவாகியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின்  ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கை கடந்தவாரம் வெளியிடப்பட்டது. அதில், 2017ஆம் ஆண்டில் சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் 3.6 வீத பொருளாதார வளர்ச்சியை சிறிலங்கா மத்திய வங்கி எதிர்பார்த்திருந்தது. எனினும், கடுமையான வரட்சி, இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் மற்றும் தொழில்துறைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால், பொருளாதார வளர்ச்சி மந்தமானது.

2001 ஆண்டுக்குப் பின்னர், மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியது, 2017ஆம் ஆண்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2001ஆம் ஆண்டு, போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விமானங்களை அழித்ததாலும், சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார வளர்ச்சி மோசமான நிலையில் இருந்தது.

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை, அதிகரிக்கும் அபாயம்

எரிவாயுவின் விலையின் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு, அரசாங்கம் வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என, அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வரிச்சலுகையை வழங்கினால் தான் மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் செயற்பட முடியும் எனவும் இல்லாதுவிடின், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் எனவும் அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை 10 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு, மைத்திரி - ரணில் நீண்ட பேச்சு


சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம், அநேகமாக அன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நேற்று முன்தினம் மாலை  நீண்டநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இதன்போதே, புதி அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுக்களில் சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கலந்து கொண்டார்.

April 28, 2018

அபாயா உரிமைக்கு எதிரான, திருமலைச் சம்பவம் அதிர்ச்சி தருகிறது - நடிகர் ஜெயபாலன் கவலை

முஸ்லிம் பெண்களின் உடைகள் தொடர்பாக இலங்கையிலும், உலக மட்டத்திலும் நடந்த விவாதங்களை கவனித்து வந்திருக்கிறேன். 

மேற்படி சர்வதேச இலங்கை விவாதங்களின் அடிப்படையில் முகத்தை மட்டும் மறைக்காமல் பெண்கள் தங்கள் விரும்பும் உடையை தெரிவு செய்துகொள்ளலாம். 

இதனை புரிந்துகொள்ளவதும், கடைப்பிடிப்பதும் நம் அனைவரதும் தலையாய கடமையாகும். 

முகத்தை மறைக்காமல் ஆடைகளை தெரிவுசெய்யும் பெண்களின் உரிமைக்கு எதிராக தமிழர்களின் பெயரில் சிலர் எதிர்குரல் கொடுத்த திருகோணமலைச் சம்பவம் அதிர்ச்சி தருகிறது. 

இத்தகைய போக்கு வளர்வதற்க்கு தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. 

 வ.ஐ.ச. ஜெயபாலன்

(ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான செய்தியொன்றுக்கு கவிஞரும், தேசிய விருது வென்றவருமான கவிஞர் ஜெயபாலன் பின்னூட்டத்தை பதிவிட்டிருந்தார். காலத்தின் தேவை கருதி அதனை இங்கு தனியாக பதிவிடுகிறோம்)

மதத்தின் பெயரால், அடிபிடிப்படும் கடாமாடுகளே...!

Dr. Mariano Rubharajan. (MBBS)

மதத்தின்/மார்க்கத்தின் பெயரால் சேலைக்கும், அபாயாக்கும் அடிபிடிப்படும் கடாமாடுகளே!

வைத்தியசாலைகளில் உயிர்போகும் தருவாயிலும் இப்படிப்போராட முடியுமா உங்களால்? வைத்தியன், தாதி, உதவியாளன் அப்படி உடை உடுத்தி இருந்தால் நான் செத்தாலும் மருந்தெடுக்கமாட்டேன் என்று போராடமுடியுமா உங்களால்?

உங்களுக்குத்தெரியுமா, இரத்தவங்கிகளில் முக்கால்வாசி இரத்தம் சோனகனுடையது அல்லது சிங்களவனுடையது! எப்போதாவது இப்படி பொங்கியெழுந்து இரத்ததானம் செய்திருப்பீர்களா மடச்சாம்பிராணிகளே!

சேலை ஆபாசம் எனும் வெங்காயங்களே!
கடைத்தெருவில் வெட்டு வைத்த குட்டைப்பாவாடை, கையில்லாத கவுண், ஸீத்ரூ பிளவுஸ் என்று ‘கண்ணியமான’ உடைகள் விற்கும் கடைகள் யாருடையது?

இரண்டு பக்கத்திலும் அற(ரை)ப்படித்த எருமைகளால் சமூகத்தில் இறந்துபோன ஒருத்தியைக்கூட தோண்டியெடுத்து தின்கிறார்கள்! ச்சைக்... வழிசல் நாய்கள்!

சண்முகாவின் ‘காவலர்’களே! எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா உங்கள் சமூகம் குறித்து? உங்கள் பாடசாலைக்கலாசாரம் என்று எவனோ ஒரு விளங்காமண்டை ஏற்றிய உசுப்பில் இப்போது நாறுவது நானும்தான், என் சமூகமும்தான்! அடிப்படை உரிமை குறித்த அறிவு எள்ளளவேனும் கிடையாத உங்களுக்கு யார் எங்கள் சமூகத்தின் பெயரையும் சேர்த்துக்கெடுக்க அனுமதி தந்தது?

‘இனவாதம் வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டு அதையே செய்யும் பைத்தியக்காரத்தனத்தையா நீங்கள் அடுத்த சந்ததிக்கும் கொடுக்கப்போகிறீர்கள்?

வீறாப்பாய் பேசினால் மடத்தனம் கூட எடுபடும் என்றா மைக்கை நீட்டியவுடன் பொங்கியெழுந்து பேசுகிறீர்கள்?

என்ன பேசுகிறோம், சரியாகத்தான் பேசுகிறோமா, நாம் பேசுவது உலகநடப்பில் ஏற்கப்படுமா என்பது கூட அறியாத நீங்களா நாளைய சமுதாயத்துக்கு அறிவூட்டுகிறீர்கள்?

குறித்த முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுப்பவனும் சரி, அதற்கு உத்தரவிடுபவனும் சரி - ஐந்து சதத்துக்கு உதவாத மூளையை வைத்திருப்பவர்கள்! வேலையை விட்டுவிட்டு ஓய்வு வாங்கிக்கொண்டு பரதேசம் போய்விடுவது எல்லாருக்கும் நன்மைபயக்கும்!

திருமலை மக்களே! அந்த ‘வீர’ப்பெண்மணி பேச்சைக்கேட்டுக்கொண்டு வீதிக்கு இறங்காதீர்கள்! உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றை போதிக்கும், நல்ல முன்மாதிரியாகத்திகழும் நல்ல பெற்றோராயின், இவர்களுக்கு புத்திவரும்படி நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுங்கள்!

Teaching Hospital Batticaloa.

Newer Posts Older Posts Home