Header Ads



UNP பாசிச இனவாத சிந்தனை, தலைமையை நோக்கி நகர்கின்றதா..?

கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறுவகையான இனவாத நெருக்கடிகளினால் விரக்தியடைந்த முஸ்லிம்கள், தாம் பலகாலமாக போஷித்து, தமது ஆதரவை வழங்கி வளர்த்த யூ.என்.பி கட்சியின் தலைமையிலான நல்லாட்சி?! அரசாங்கத்துக்கு தமது ஆதரவை வழங்கினர். பலகாலமாக தமது ஆதரவை வழங்கிய முஸ்லிம்கள் இம்முறையும் உள்ளுராட்சி சபைத்தேர்தல்களில் பல இடங்களில் அதனை மண்கவ்வாமல் பாதுகத்தனர் என்றால் அது மிகையாகாது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் காலம் காலமான இத்தகைய பாரிய ஆதரவைப்பெற்ற யூ.என்.பி கட்சியின் அண்மைக்கால நகர்வும், போக்கும், திட்டமிடல்களும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இத்தகவல் மிகவும் நம்பத்தகுந்த, ஆதாரபூர்வமாண இடத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இக்கட்சியின், சமகாலப்போக்கை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தோலுரித்துக் காட்டுவது, எம் மீதுள்ள சன்மார்க்க கடமையாகக் கருதுகின்றோம். தற்போதைய இலங்கையின் நிலைமையும், சம்பவங்களும் இதற்கு சிறந்த சான்றுகளாக உள்ளதை எம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியுமாக உள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ம் திகதிக்கு முந்தைய ஆட்சியிலே பல்வேறு இன்னல்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். வெளிப்படையாகவே மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர், இந்நிலைமைகளை மற்றுவதற்கு பல்வேறு தரப்பினராலும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, கடந்தகால பாஷிச ஆட்சி கீழிரக்கப்பட்டு, முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப்பெற்ற யூ.என்.பி கட்சியின் கூட்டணியில் அமைந்த நல்லாட்சி?! அரசாங்கம் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியைக்கைப்பற்றியது. பல்வேறுபட்ட வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம், இதுவரை எவ்வித வாக்குறுதியையும் நிறைவு செய்யவுமில்லை, கடந்தகால அரசின் குற்றவாளிகளை மறைமுகமாகக் காப்பாற்றியதோடு, சகோதரர் தாஜூதீனினின் கொலை விவகாரத்திற்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராததோடு, தற்போது முழு நாடு தழுவிய இனவாத, பாஷிச பயங்கரவாதங்களை கண்டும், காணதது போன்று உள்ளது. இதற்குப்பின்னால் உள்ள மிகப்பயஙகர நிகழ்ச்சி நிரல் இதுதான், இதனை நாம் அறிந்து கொள்வதோடு, எமது எதிர்கால நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது எமது மார்க்க கடமை என்பதை உணர்ந்து கொள்வோம்.

யூ.என்.பி கட்சி மற்றும் அதன் தற்போதைய தலைமையின் ஆதரவோடு, அதன் எதிர்காலத் தலைமையை மிகப் பிரசித்தி வாய்ந்த ஒரு இனவாத பாஷிஸ்ட்டுக்கு வழங்குவதற்கான முழு திட்டமிடல்களும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச, மேற்குலக. ஸியோனிஸ சக்திகளின் முழுத்திட்டமிடல், மற்றும் பின்புலத்தோடு இச்சதியை அரங்கேற்றுவதற்கான முழு முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் முழு ஆதரவையும் தன்பக்கம் ஈர்பபதற்கான திட்டமிடல் அரங்கேர இருக்கின்றது. இதன் விளைவுகளையே இப்போது எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இனவாதத் தலைவன் ஞானசாரனின் செய்தியும் இதனையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. மியன்மாரின் ஆங் சாங் சூகியின் மிகக் குறுகிய கால சிந்தனை மாற்றுமும் முஸ்லிம்களுக்கெதிரான போக்கும் இதனையே எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

எனவே எந்தக்கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கினாலும், முஸ்லிம்கள் அநீதிஇழைக்கப்படப்போது நிச்சயம், எனினும் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள், யூ.என்.பி யின் தலைமையை கைப்பற்றும் போது இந்நிலைமை மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளது. 

எனவே எக்கட்சியை நோக்கி திரும்புகின்ற போதும், இலங்கை முஸ்லிம்களுக்கு சவால்களே நிறைந்திருக்கின்றது. இந்நிலைமையை மாற்றுவதற்கு எம்மீது இரண்டே இரண்டு வழிமுறைகளே உள்ளது,

1. காலங்காலமாக போஷித்த யூ.என்.பி யூம் இனவாத பாஷிஸ சிந்தனைகளை நோக்கி நகருகின்ற போது, ஏற்கனவே பல இன்னல்களை முஸ்லிம்களின் மீது நிகழ்த்திய மாற்று கட்சியை நோக்கி நகர்வதும் பாம்புப் புற்றுக்குள் பாம்பு இருப்பதை அறிந்து கொண்டே, இரண்டாவது முறையும் அதனுள்ளே கையை நுழைப்பதற்குச் சமமானது. ஒரு முஸ்லிமின் பண்பு இவ்வாறு இருக்கமாட்டாது. எனவே எம்மீதுள்ள ஒரே தெரிவு அனைத்துக்கட்சிகளையும் புறக்கணிப்பதாகும்

2. இங்கே வாழ்வதென்றால் எமக்கு அடிபணிந்து வாழு என்பதே அவர்களது கூப்பாடாக உள்ளது. முஸ்லிம்கள் என்ற வகையில் எம்மால் ஒரு காலமும் இதற்கு உடன்பட முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே எம்மீது உள்ள அடுத்த தெரிவு, நாம் அனைவரும் எதிர்த்து நிற்க (சுநளளைவ) தயாராக வேண்டும். இதுவே எம் மார்க்கம் எம் மீது எதிர்பார்க்கும் மார்க்கக் கடமையாகும்

1 comment:

  1. Why not support JVP and give them a chance to p[rove their ability to restore law and order and dignity to all citizen.

    ReplyDelete

Powered by Blogger.