March 16, 2018

"முஸ்லிம்கள்", முஸ்லிமாக மாத்திரம் நினைப்பது தவறு - JVP கவலை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சமூக பொருளாதார அரசியல் விவகாரங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

முஸ்லிம் சமூக அரசியல் குறித்த உங்களது பார்வையை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

மக்கள் விடுதலை முன்னணியை சூழ பெருமளவிலான முஸ்லிம் மக்கள் அணிதிரண்டார்கள். ஆனால் வாக்களிக்கவில்லை. சிலரே எமக்கு வாக்களித்தார்கள். பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் ஆனால் வாக்களிப்பதில்லை. இத்தகைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இன்றேல், மோசடிப் பேர்வழிகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவார்கள். முஸ்லிம்கள் முஸ்லிமாக மாத்திரம் நினைப்பது தவறு. நாம் இலங்கையர்கள் என்பதாக நினைத்தால் ஒன்றிணைய முடியும். முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்பொழுதும் இனவாதத்தையே தூண்டி வருகிறார்கள்.

இதனால் சிங்கள முஸ்லிம் பிரச்சினைகளே மேலோங்குகிறது. மக்கள் விடுதலை முன்னணியிடம் அவ்வாறான கொள்கைகள் இல்லை. இதனை முஸ்லிம்கள் படிப்படியாக உணர்ந்து வருகிறார்கள். தேசிய அரசியலில் முஸ்லிம்களையும் ஒன்றாக கருதுகின்ற அரசியல் தலைமையுடனேயே முஸ்லிம்கள் அணிதிரள வேண்டும். இதனையே நாம் வேண்டுகிறோம். நாட்டில் முஸ்லிம் கட்சி, சிங்களக் கட்சி, தமிழ் கட்சி என்பதாக பிரிந்திருந்தால் நாட்டில் மோசமான நிலைமைகளே உருப்பெரும். ஒவ்வொரு தரப்புக்கும் இனவாதத்தை பயன்படுத்த முடியும். இனவாத சிந்தனையிலிருந்து விலகி தேசிய ரீதியிலான சிந்தனையுடன் கூடிய கட்சியுடன் அணிதிரளுமாறு நாம் முஸ்லிம் மக்களிடம் வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு ஹிஜாபை பெற்றுக்கொடுப்பதில் நாமே தலையிட்டோம். பதியுதீன் மஹ்மூத் முதல் கபீர் ஹாசிம் வரையில் முஸ்லிம் கல்வியமைச்சர்கள் இருந்தார்கள். ஒருவரும் அதைச் செய்யவில்லை. அளுத்கம கலவரம், கிந்தோட்டை விவகாரம் போன்ற சம்பவங்களின் போது நாம் அவற்றை கண்டித்து அதற்கெதிராக பாராளுமன்றிலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பினோம். வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்கும் விடயத்திலும் நாமே தலையிட்டு அதனை செய்து வைத்தோம். அண்மையில் பேரிச்சம் பழத்திற்கு வரி விதிக்கப்பட்ட போது அந்த வரியை குறைக்குமாறு நாமே குரலெழுப்பினோம். கடந்த காலப்பகுதியில் ஹராம், ஹலால் பிரச்சினை ஏற்பட்ட போது அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கருத்தியல் ரீதியான போராட்டங்களை நாமே முன்னெடுத்தோம். உண்மையில் நாம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தொடர்ந்தெர்ச்சியாக குரல் எழுப்பி வந்துள்ளோம்.

இன்றும் குரல் எழுப்பிக்கொண்டே உள்ளோம். சிலபோது ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் செய்யாத விடயங்களை கூட நாம் செய்துள்ளோம். வடக்கிலிருந்து கிழக்கை பிரிப்பதற்கு ரவூப் ஹக்கீம் தலையிடவில்லை. அதை நாமே செய்துவைத்தோம். ஆனால் இந்த விடயங்களையெல்லாம் முஸ்லிம் மக்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளவில்லை. இதனை தெளிவுபடுத்துவது எங்கள் பொறுப்பு. புரிந்துகொள்வது அவர்களிடமே உள்ளது.

14 கருத்துரைகள்:

Yes very true
Well said
Muslims must realize this
And think about the future Elections

your have told black and white truthful. mudlim community must think twice before bext election. support jvp one time and see. our leaders doesnot want to join jvp because they cant enjoy facilities if jvp come to power . forget the self benefit and think current situation in srilanka and give a chance to jvp one and a time to see their administration

Perfectly correct . We have noticed JVP only looks problems impartially. Our racial parties
Already created among Singhalese for their own end misunderstnding seprating Muslims from nationnal parties.As a result wide distance we can see between local politicians and muslim voters . Muslims in Singhalese dominated
Areas should support local politicians leaders
Of area

In future Muslims will support to JVP only

I appreciate in future Muslim people have to thing.

all muslim must pay our vote to JVP why this our Muslim leaders compete to increase bankbalance not to rise voice for milualims when qe feel this necessary

well said. See the history. Most Muslims majorities voted every time to OoooNP.OoooNP. But nothing has been changed.

That's true. Let's give GVP a chance in upcoming elections. Until Muslims realise and act according, riots may continue. No Government helped you immediately to protect.

JVP இக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட JVP இல் முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்பட்டு முஸ்லீம் வேட்ப்பாளர்களும் ஜேவிபி சார்பாக போட்டி இடவேண்டும். பெரும்பான்மை இனம் சிந்திப்பது போல் சிறு பான்மை இனம் சிந்திக்க முடியாது . தங்களது சமூகம் சார்ந்தே சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சமூகம் சார்ந்தே இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜையாக நடத்தப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சிறு பான்மை மக்களை மிகவும் மோசமாக இனரீதியாக துவேசமாக நடத்தப்படுகிறார்கள். அதிலும் போலீஸ் உம், பாதுகாப்பு படையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இனரீதியாகவே செயட்படுகிறது. இந்த விடயம் மிகவும் அவசரமாகவும் ஆழமாகவும் சிந்தித்து சரி செய்யப்பட வேண்டும். தற்போதைய முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கு அரசியலே தெரியாது பிறகு எப்படி தேசிய அரசியல் செய்ய முடியும். அவர்கள் அரசியல் வியாபாரிகள். இன்னும் சிலர் அரசியல் விபச்சாரிகளாகவே இருக்கிறார்கள். ஆக முஸ்லீம் சமூகத்தில் இதட்கான பாரிய வெற்றிடம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் சிந்த்தித்து ஜேவிபி நடந்து கொல்லுமானால் நிட்சயம் முஸ்லிம்களின் கணிசமான வாக்கு ஜேவிபி உண்டு. UNP இல் ஒரு டி பி ஜாயா, எம் சி எம் கலீல், ஏ சி எஸ் ஹமீது, முஜிபுர் ரஹ்மான், SLFP இல் பதுர்டீன் மஹ்மூத், போன்றவர்களை போல் ஜேவிபி யிலும் முஸ்லீம் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். நிஸ்மி சகோதரையா போன்று.

JVP இக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட JVP இல் முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்பட்டு முஸ்லீம் வேட்ப்பாளர்களும் ஜேவிபி சார்பாக போட்டி இடவேண்டும். பெரும்பான்மை இனம் சிந்திப்பது போல் சிறு பான்மை இனம் சிந்திக்க முடியாது . தங்களது சமூகம் சார்ந்தே சிந்திக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சமூகம் சார்ந்தே இந்த நாட்டில் இரண்டாந்தர பிரஜையாக நடத்தப்படுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சிறு பான்மை மக்களை மிகவும் மோசமாக இனரீதியாக துவேசமாக நடத்தப்படுகிறார்கள். அதிலும் போலீஸ் உம், பாதுகாப்பு படையும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இனரீதியாகவே செயட்படுகிறது. இந்த விடயம் மிகவும் அவசரமாகவும் ஆழமாகவும் சிந்தித்து சரி செய்யப்பட வேண்டும். தற்போதைய முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கு அரசியலே தெரியாது பிறகு எப்படி தேசிய அரசியல் செய்ய முடியும். அவர்கள் அரசியல் வியாபாரிகள். இன்னும் சிலர் அரசியல் விபச்சாரிகளாகவே இருக்கிறார்கள். ஆக முஸ்லீம் சமூகத்தில் இதட்கான பாரிய வெற்றிடம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் சிந்த்தித்து ஜேவிபி நடந்து கொல்லுமானால் நிட்சயம் முஸ்லிம்களின் கணிசமான வாக்கு ஜேவிபி உண்டு. UNP இல் ஒரு டி பி ஜாயா, எம் சி எம் கலீல், ஏ சி எஸ் ஹமீது, முஜிபுர் ரஹ்மான், SLFP இல் பதுர்டீன் மஹ்மூத், போன்றவர்களை போல் ஜேவிபி யிலும் முஸ்லீம் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். நிஸ்மி சகோதரையா போன்று.

As he said we, Muslims support jvp orally only. Even in the last election, a few of us had cast vote for them. For the betterment of all Sri lankas, we have to bring jvp in power. Let's once give a chance and see

நாடளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்கள் தம்மைத் தாமே இலங்கையர்களாகவும் நினைக்கவில்லை என்பது உண்மை என்றால், அவர்களின் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள இதுவரையுள்ள எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்காது அவர்களை அந்நியப்படுத்தி வைத்திருந்தது  என்பதுதான் உண்மை.

இந்த அடிப்படையான பிரச்சினைக்கு சரியான தீர்வை, JVP பகிரங்கமாக இப்போதே முன்வைக்குமாக இருந்தால், முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழரும் கூட தமது பிரிவினை எண்ணங்களை மறந்து,  நீதியை நேசிக்கும் சிங்களவர்களோடு இணைந்து, 2020 ஜனாதிபதித் தேர்தலில் JVP யை வெற்றிபெறச் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது.

தொடர்ந்தால் தொடரும்...

மணிபால் பாசி சொல்வது உண்மை. தமிழ் பேசும் மக்களின் அரச சேவை பற்றிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தமிழ் பேசும் மக்கள் ஜே. வி. பி. யை ஆதரிப்பார். ஆனால் ஜே.வி.பி.யின் சமத்துவ பொருளாதார கொள்கைகள் வணிக முயற்சிகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையானவை. விவசாயிகளும் தொழிலாளரும் ஜே.வி.பி.யை ஆதரிப்பார். வணிகர்களும் பொருளாதார வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்களும் ஜே.வி.பி.யை ஆதரிக்க மாட்டார். இதனால் தான் முஸ்லிம் வணிகர்களும் தமிழ் தொழில் முதலீட்டாளர்களும் ஜே.வி.பி.யை விட்டு யு.என்.பி.யை இதுவரை காலமும் ஆதரித்து வந்துள்ளார்கள்.ஜே.வி.பி. பொருளாதாரம் பற்றிய தங்கள் அடிப்படை கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Criticகின் நியாயமான வாதங்கள் மற்றும் எமது கருத்துக்களுக்கான பதில்களை ஜேவிபி முக்கியஸ்தர்கள் இங்கு பதிவார்களென எதிர்பார்ப்போம்.

Post a Comment