Header Ads



முஸ்­லிம்­க­ளுடைய இழப்பை, அரசு குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது - FMM

அம்­பாறை மற்றும் கண்டி பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­முறை சம்­ப­வங்கள் தற்­போது ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன என்று அறி­கிறோம்.

எனினும் அதனை உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முடியாத தனது இய­லா­மையை மறைப்­ப­தற்­காக அர­சினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஜன­நா­யக விரோத நட­வ­டிக்கை­க­ளை­யிட்டு சுதந்­திர ஊடக இயக்­கமும் ஜன­நா­ய­கத்தை விரும்பும் ஏனைய அமைப்­பு­களும் அதி­ர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக சுதந்­திர ஊடக இயக்கம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றை­க­ளினால் ஏற்­பட்ட இழப்பை வெறும் பொரு­ளா­தார இழப்­பா­கவும் நட்­ட­ஈடு கொடுத்தால் சரி­யா­கி­விடும் என்றும் அரசு குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது. அடிக்­கடி நிகழும் இது போன்ற சம்­ப­வங்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் கலா­சார கார­ணங்­களை கண்­ட­றிந்து அதற்­கான நீண்­ட­கால தீர்­வு­களை எட்ட வேண்­டி­யது ஒரு அர­சாங்­கத்தின் பிர­தான பொறுப்­பாகும்.

இக்­கா­ர­ணங்­களைக் கண்­ட­றி­யாது அரசு எடுத்­து­வரும் நட­வ­டிக்­கை­களில் பல ஜன­நா­ய­கத்­துக்கு தீங்­கு­வி­ளை­விப்­ப­தா­க அமைந்­துள்­ளது. இது மற்­று­மொரு பெரிய பிரச்­சி­னை­யாகும். அவ­ச­ர­கால நிலை­மையைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதும், சமூ­க­வ­லைத்­த­ளங்­களை முடக்­கி­யதும் பிரச்­சி­னையை மேலும் தீவி­ர­ம­டையச் செய்­துள்­ளது.

சாதா­ரண சட்­டத்தின் ஊடா­கவும், இன பாகு­பா­டு­களை அகற்றும் நோக்கில் மக்­களை அறி­வுறுத்­து­வ­தற்­காக இது­வரை எடுக்­கப்­பட்­டு­வரும் முயற்­சி­களை துரி­தப்­ப­டுத்­து­வதன் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நாம் ஆரம்பத்திலேயே கூறினோம். ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.