Header Ads



"உணவில் கலப்பதால் மறுநாளே, மலட்டு தன்மையை ஏட்படுத்தும் எந்த மருந்துமில்லை" - Dr சாரத

-தமிழ் மொழி பெயர்ப்பு-

*மகப்பேற்று வைத்திய நிபுணர் மலட்டு தன்மையை உண்டாக்கும் மருந்து சம்பந்தமான வதந்திகளை மறுத்துரைத்தார்.*

ஒரே முறையில் குடிப்பதன் மூலம் ஆணுக்கோ பெண்ணுக்கோ மலட்டு தன்மையை ஏட்படுத்தும் மருந்து இதுவரை கணபிபிடிக்க படவில்லை என்று அரச வைத்திய சங்கத்தின் உப தலைவரும், மகரகம தேசிய புற்றுநோய் வைத்திய சாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான Dr சாரத கண்ணங்கர தெரிவித்தார்.

 Daily News இடம் பேசிய அவர், உணவில் கருத்தடை மாத்திரைகளை கலத்தல் பற்ரிய பீதி விஞ்சான அடிப்படை அற்றது என கூறி மறுப்பு தெரிவித்தார்.

அதே நேரம் மக்கள்  கருத்தரிப்பதை பாதிக்கும் கவலைபட வேண்டிய வேறு பெரிய உணவு பழக்கங்கள் சம்பந்தமான விடயங்கள் உள்ளன.

பார உலோகங்களான கட்மியம், இரசம் போன்றவை கருகட்டலை பாதிக்கும்.

ஆராய்ச்சிகள் மூலம் தொடர்தேட்சியான பார உலோகங்களை பாவித்தல் இனப்பெருக்கத்தை பாதிக்கும் என கண்டறியபட்டுள்ளது.

பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் (BPA) ஆண்களில் மலட்டு தன்மையையும் , அவ்வாறான போத்தல்கள் சூரிய ஒளியில் படும்போது அதன் பாதக தன்மை இன்னும் அதிகரிக்கும்.

பல்வேறு பட்ட உணவு சேர்மானங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உணவுகள், மென்பானங்கள் (Soft drinks) பல்வேறு வகையான souce வகைகள் மலட்டு தன்மைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

மலட்டு தன்மை மாத்திரம் அல்ல கருக்கலைப்பு (abortion) க்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

இவை தான் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய பிரச்சினைகள் என்று கூறினார்.

முடிவாக உணவில் கலப்பதால் மறுநாளே மலட்டு தன்மையை ஏட்படுத்தும் எந்த மருந்துமில்லை என விளக்கினார்.

No comments

Powered by Blogger.