Header Ads



மூன்றாக உடைந்துள்ள சு.க. - பொறுமையாக இருங்கள் என்கிறார் ஜனாதிபதி

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மூன்று விதமான நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள், மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, அதே எண்ணிக்கையான உறுப்பினர்கள் சில உள்ளக விட்டுக்கொடுப்புகளுடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு நாடாளுடமன்ற உறுப்பினர்கள், தமது எதிர்கால அரசியல் கருதி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.

தற்போது சிறிலங்கா  சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்து வருகின்றனர்.

இதிலிருந்து விலக விரும்புவோர், தமது நிலைப்பாட்டை ஏற்கனவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை ஒரு மாத காலம் பொறுத்திருக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.