Header Ads



சிறிலங்காவில் மனித உரிமை மீறலை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.

“ஏனைய உறுப்பு நாடுகளில் இருந்து இஸ்ரேலை வேறுபட்ட முறையில் கையாளுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

சிறிலங்கா, வடகொரியா, ஈரான், மியான்மார், தென்சூடான், சிரியா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவை பணியாற்ற வேண்டும்.

சிறிலங்கா விடயம் போன்று,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் வலுவான தீர்மானங்களை நிறைவேற்ற ஒன்றாக முன்வரும் என்று அமெரிக்கா நம்புகிறது.

சிறிலங்கா விடயத்தில் அவ்வாறு ஒன்றுபட்டிருந்ததால், முன்னேற்றங்களைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. Why are your trying to protect ISRAEL...? Rather You should stand neutral... " ISRAEL has stolen the land and supresing the real owners of that land by destroying the remaining houses and killing them" But you want all world to be silent over this issue. You wanted all members of UN to obey US interest over ISRAEL?

    You US ... like FOX ... You are the creator of who violence around the world and then trying to show the world.. You are the PEACE keepers of the world.

    Not all will blindly say yes to your arrogance. GOD will answer you soon from his own style. His reply will be incomparable to what human plans on earth.

    ReplyDelete
  2. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
    (அல்குர்ஆன் : 9:41)

    இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
    (அல்குர்ஆன் : 22:78)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.