Header Ads



முஸ்லிம் தலைவர்கள், பதவி விலக வேண்டும் - பொதுபல சேனா

முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் விடயத்தில் முஸ்லிம் தலைவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று, பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பாதுகாத்துக்கொள்ளத் தவறி இருக்கின்றனர். தங்களது கட்சிக்குள் ஜனநாயகத்தை பேணுவதற்கும் அவர்களால் முடியாது போய் இருக்கிறது.

இவ்வாறான நிலையில் அவர்கள் நாட்டில் இணக்கப்பாட்டை எவ்வாறு ஏற்படுத்துவார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கக்கூடாது என்றும், அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

7 comments:

  1. நீ முஸ்லிம் சமூகத்துக்கு அடிக்கும் போது உன்னைத் தட்டிக் கேட்க முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் பதவியில் இருக்கக்கூடாது.

    ReplyDelete
  2. If you resign every think will be okay you are the trouble maker

    ReplyDelete
  3. இவர் சொன்னதை பகிடியாக எடுக்க வேண்டாம் அதுதான் உண்மையும். இதுவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் முதலில் பொருந்தும். இல்லையென்றால் எப்பவோ நடந்த பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லையென்றாலும் அவ்வப்போது துடித்து எழுந்த நம் வாலிபர்களை கிளம்ப விட்டிருக்கலாம். கிளம்பிய வாலிபர்களை தூங்கவைத்த பெருமை ஜ.உ.சபைக்கே சாரும்.இப்படிப்பட்ட கோளைகள், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மார்க்கம் என்ன சொல்லுகிறது என்றுகூட தன் மதத்தைப்பற்றியும் அறிந்திடாதவர்கள். அன்று நம் வாலிபர்களை விட்டிருந்தாள் இப்படி பலவூர்கள் ஒரே கால கட்டத்தில் பெரிதாக தாக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும்.
    நீங்கள் ஒவ்வொருவரும் இவ்வுலகில் ஒவ்வொரு மேய்ப்பாளர்கள், உங்களின் மேய்ப்புக்களைபற்றி நாளை வினவப்படுவீர்கள் என்ற உறுதியான நபிமொழியை இங்கு அனைவருக்கும் ஞாபகம் செய்கிறேன்.

    ReplyDelete
  4. இலங்கையில் முஸ்லீம் அமைச்சர்கள் இல்லையன்றால் முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேர வேண்டியது தான்

    ReplyDelete
  5. ஆடு நனைதிண்டு ஓனாய் அழுகிறது தூ.... வெக்கம் கெட்டவனுகள்.

    ReplyDelete

Powered by Blogger.