Header Ads



சிறிசேனவின் மடியில் ஞானசாரா - போட்டுத்தாக்கும் சுனந்த தேசப்பிரிய

இறுதியில் மைத்திரிபால சிறிசேன எனும் அரசியல்வாதியும் அபசரண சென்றார். எனினும் நாட்டுப்புற கதையில் வரும் தூள் சாப்பிட்ட மனிதன் போன்று சிறிசேனவும் அபசரண சென்றமை பகிரங்கப்படுத்தப்படுவது தொடர்பாக அச்சத்தில் உள்ளார். சிறிசேனவின் ஜப்பான் விஜயம் தொடர்பாக சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பீஎம்டீடொட்எல்கே இல் அவரது ஜப்பான் விஜயம் தொடர்பாக மூன்று நான்கு செய்திகள் வெளியிடப்பட்டிருப்பினும் அவற்றில் அவருடன் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளதாகத் தோன்றும் அபசரண தலைவர் ஞானசார தேரர் அவர்களின் ஒரு புகைப்படத்தையேனும் காண முடியவில்லை.

எனினும் சிறிசேனவினால் தடை செய்யப்பட்ட சமூக ஊடக வலையமைப்புக்களில் சிறிசேன ஞானசார முன்பாக அபசரண செல்லும் புகைப்படங்கள் பல காணப்படுகின்றன. சிறிசேன தான் அபசரண சென்றதை மிகவும் கீழ்தரமாக மறைக்க முயற்சிக்கிறார். 

பாவம்! தான் செய்வதைப் பகிரங்கமாக சொல்ல முடியாத அளவுக்கு ஓர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி இழிவடைந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் அளுத்கமை முஸ்லிம் பிரதேசங்களைத் தீக்கிரையாக்குவதற்கு மக்களைத் தூண்டிய ஞானசார முஸ்லிம்களை அபசரணை அனுப்ப தான் தயாராக இருப்பதாகக் கூறினார். தற்போது திகனயில் ஆரம்பித்த வன்முறைகளும் அண்மைய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான அந்த அபசரணவின் ஓர் வெளிப்பாடாகும்.

இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக விதைக்கப்பட்ட குரோதம், பற்றியெரியக் கூடிய கோபத்திற்குக் காரணமாய் அமைந்து அதற்காக சிறையிலிருக்க வேண்டிய அபசரண தலைவர் தற்போது சிறிசேனவின் மடியில் உள்ளார். ஐயோ பாவம்! நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதியளித்து சிறுபான்மை மக்களின் தீர்மான வாக்குகளுடன் அதிகாரத்திற்கு வந்த சிறிசேனவின் இந்தத் துரோகம் மற்றைய அரசியல்வாதிகளைக் கூட தோற்கடிக்கிறது.

அபசரண தலைவர் ஞானசார மூன்று மணித்தியாலங்கள் முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதல் காரணமாக மரணித்த திகன அப்பாவி சாரதியின் மரண வீட்டில் கழித்து அபசரண ஜாதகத்தைப் போதிக்கவில்லையா? அந்த மரணத்திற்கு காரணம் இனவாத வன்முறையன்றி முரடர்களின் வன்முறையாகும். அப்போது அபசரண தேரர் சிறிசேனவைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தார். அபசரண ஞானசார மரண வீட்டிற்கு வருகை தந்தமையிட்டு அந்தக் கிராம முஸ்லிம் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். முஸ்லிம்களுக்கு எதிரான அவரது அழகிய தூஷனப் போதனைகளை செவிமடுத்துள்ள, அவரது நோக்கு தொடர்பாக அச்சமடையாத யாராவது ஒரு முஸ்லிம் இருக்க முடியுமா? அபசரண தலைவர் ஞானசார கொழும்பிலிருந்து அந்த மரண வீட்டிற்குச் சென்றது பலாக்காய் பிளப்பதற்கா?

தன்னை நோக்கி வரும் மக்கள் அதிருப்தி எனும் அலையிலிருந்து சிறு வைக்கோலைப் பற்றிக் கொண்டாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலேயே தற்போது சிறிசேன உள்ளார். சமூக ஊடக வலையமைப்புத் தடையை அவசியமற்ற முறையில் நீடித்தமை சிறிசேனவின் அரசியல் சாக்கடையின் ஓர் வெளிப்பாடாகக் காணப்பட்டதுடன், ஞானசார – சிறிசேன உறவு அவரது அழுக்கடைந்த அரசியலின் இறுதித் தறுவாயினைக் குறித்துக் காட்டுகிறது. 

அபசரண ஜாதகம் என்பது பயங்கரமான வன்முறைமிகு கருத்தோட்டமாகும். சிறிசேன அதன் நவீன தலைவரான ஞானசார தேரரிடம் சென்றமை மூலம் ஒரு நபர் தொடர்பான விடயம் அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக சிறிசேன அந்த வன்முறைமிகு அபசரண கருத்தோட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதே அதன் கருத்தாகும். மிகவும் கொடிய காட்டிக் கொடுப்பு அதுவே.

சிறிசேன இனியும் 2015 மக்கள் எதிர்பார்ப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை. அவர் ஏற்கனவே இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குத் துரோகமிழைத்துள்ளதுடன் வெகு விரைவில் பரந்த ஜனநாயக சக்திகளையும் ஏமாற்றி விடுவார். தற்போது அவர் தனது குடும்பத்தை இந்த நாட்டு அரசியலின் பரம்பரை உரிமையாளர்களாக மாற்றியமைக்கும் ஒரே நோக்குடன் இருப்பதாகத் தோன்றுகிறது. சிறிசேன எப்படியாவது அதிகாரத்திலிருக்கத் துடிப்பது அதற்காக அன்றி வேறு எதற்கு?

உள்ளுராட்சித் தேர்தல் நெருங்கும்போது பசில் ராஜபக்ஷவிடம் கெஞ்சி நின்ற சிறிசேன தற்போது உதை வாங்குவதற்குத் தயாரான நிலையில் எந்தவொரு ராஜபக்ஷ முன்பாகவும் முழந்தாளிடும் நிலையிலுள்ளார்.

ஒருவருக்குத் தான் விரும்பியதைச் செய்ய முடியுமாயினும் அந்த விருப்பு உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளின் கலப்பினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. தற்போது சிறிசேனவுக்கு இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லை. அதே போன்று ஜனநாயக சக்திகளும் அவரை விட்டுத் தூரமாகியுள்ளன. பரந்த ஜனநாயகத்திற்காக மக்களை அணி திரட்டிய மாதுலுவாவே சோபித்த தேரர் போன்ற சக்திகளும் இல்லை. சிறிசேனவின் மக்கள் பலம் வரையறுக்கப்பட்டது. அது குறைந்தாலும் அதிகரிக்க மாட்டாது. தற்போது சர்வதேச ஜனநாயக சக்திகளும் சிறிசேனவுக்கு எதிராக நிற்கின்றன. 

அவரை ஜனநாயக மேடையில் ஏற்றி வைத்த அந்த வெளிப்புறக் காரணிகள் இல்லாமல் போகும்போது வாளை சுழற்றும், திருக்கை வாலுடைய, மார்புக்கச்சை எதிர்ப்புடைய, பியர் எதிர்ப்புடைய, தமிழரின் கழுத்து வெட்டுவதை நியாயப்படுத்தும், சிவில் சமூக விரோதமுடைய, அபசரண சென்ற, குடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுக்கும் சிறிசேன எனும் கமரால மாத்திரமே எஞ்சுவார்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை மீண்டும் இருண்டதோர் காலப் பகுதியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. எனவே துஷ்டத்தை நோக்கித் திரும்பியுள்ள பயணத்தை மீளத் திருப்ப முடியுமா அல்லது முடியாதா என்பது எமது பிரதான பேசுபொருளாக மாற வேண்டியுள்ளது.  
     
ராவய – 2018.03.18
சுனந்த தேசப்பிரிய 
தமிழில் - சேனையூரான்

4 comments:

  1. எம்மை நாற்றாகவே ஏமாற்றிவிட்டார்கள்

    ReplyDelete
  2. All Muslims should be aware that our president is a Buddhist fundamentalist. He would never go against the monks even if a monk is unruly or creating social disharmony in the country. As we see him going around with Gnanasara thero, it is obvious that he supports BBS in every possible way. Oh Muslims, please know your enemy and friend...

    ReplyDelete
  3. Sanaiyooran, Sunantha
    Thanks for the writing and for the translation. I strongly believe you will continue this very important service to identify the faces of hypocrites against the Democracy and against the peace between Muslim Tamil and Sinhalese.

    ReplyDelete
  4. Sanaiyooran, Sunantha
    Thanks for the writing and for the translation. I strongly believe you will continue this very important service to identify the faces of hypocrites against the Democracy and against the peace between Muslim Tamil and Sinhalese.

    ReplyDelete

Powered by Blogger.