Header Ads



சவூதியில் சுடப்பட்டவர் பிரியங்கா ஜெயசங்கர், சுட்டவர் மனநலன் பாதிக்கப்பட்டவர்

சவுதி அரேபியாவில் தொழில் வழங்குனரால் இலங்கை தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முதல்கட்டமாக சவுதி அரேபிய தூதுவராலய அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

42 வயதான பிரியங்கா ஜெயசங்கர் என்ற பெண்ணின் பூதவுடலை உடனடியாக இலங்கைக்கு கொண்டுவருவது உள்ளிட்ட மேலதிக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சு தெரிவித்துள்ளனது.

இலங்கை பெண்ணின் பூதவுடல் சவுதி அல் ராஸ் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் புரைடாஹ் பகுதியில் வீடொன்றில் பணியாற்றி வந்த குறித்த இலங்கை பெண் கடந்த சனிக்கிழமை காலை சுட்டுக்கொல்லப்பட்டதாக சவுதி கெசட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

42 வயதான குறித்த இலங்கை பெண்ணை, 30 வயதான சவுதி பிரஜை ஒருவர், தமதுவீட்டுக்குள் வைத்து சுட்டுக் கொன்றதாக, சவுதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த சவுதி பிரஜையும் அதே துப்பாக்கியால் தமக்கு தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆரம்ப விசாரணைகளில் குறித்த சவுதி பிரஜை மனநலம்குன்றியர் என்று தெரியவந்துள்ளது.

2 comments:

  1. என்ன சவுதி எம்பசிய இன்னும் உடைக்க தோண இல்லையோ

    ReplyDelete

Powered by Blogger.