Header Ads



அங்குறுதெனவில் முஸ்லிம் குடும்பங்கள்,பாடசாலைகளில் தஞ்சம் - உணவின்றி அவதி

-அமைச்சர் றிசாத்தின் ஊடகப் பிரிவு-

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர், பாதிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கு விஜயம் செய்து, சேதமடைந்த இடங்களை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

கண்டியில் கட்டுகஸ்தோட்டை, உண்ணஸ்கிரிய, அக்குரணை 04 ஆம் கட்டை ஆகியவற்றில் இன்று இனவாதிகளால் எரிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், கடைத்தொகுதிகள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசமான ஹாரிஸ்பத்துவ அங்குறுதெனவுக்கு அமைச்சர் குழு சென்ற போது, அங்கு பள்ளிவாசல் மற்றும் பல வீடுகள் எரிக்கப்பட்டு காணப்பட்டன.

அங்கு வசிக்கின்ற  189 முஸ்லிம் குடும்பங்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்து தாங்கள் உணவின்றி அவதிப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், இனவாதிகள் எந்த நேரத்திலும் தமது கிராமத்தை தாக்கக் கூடும் என அச்சம் வெளியிட்டனர். 

No comments

Powered by Blogger.