Header Ads



ஒரு தசாப்தகாலமாக இல்லாதிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம், இம்முறை கோட்டே மாநகர சபைக்கு

   கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி  நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர -  கோட்டே மா நகர சபைக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்  சின்னத்தில் போட்டியிட்ட அலி உஸ்மான்,  எதிர்வரும் 26 ஆம் திகதி மா நகர சபை உறுப்பினராகப்  பதவியேற்கவுள்ளார்.

   இவர், கோட்டே வட்டார இலக்கம் 5 இல் போட்டியிட்டு 863 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 

   கோட்டே மா நகர சபைக்காக கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகப்  போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   கோட்டே மா நகர சபை எல்லைக்குள் சுமார் 8 ஆயிரம்  முஸ்லிம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 15 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இரண்டு ஜும்ஆப் பள்ளிவாசல்களும், மூன்று  மத்ரசாக்களும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன. 

   மா நகர சபை உறுப்பினராகத் தெரிவாகியுள்ள அலி உஸ்மான்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டே தொகுதி அமைப்பாளராகவும், கோட்டே நூரானியா ஜும்ஆ  மஸ்ஜிதின் நிர்வாகக் குழு உறுப்பினருமாவார்.

   அரசியல் அதிகாரங்கள் இல்லாத நிலையிலும் கூட, இப்பிரதேச  மக்களுக்காகப்  பல்வேறு விதத்திலும்  சேவைகளைப் புரிந்துவரும் புதிய உறுப்பினர் அலி உஸ்மான், தொடர்ந்தும் இதன் பிறகும்  பிரதேச மக்களின் தேவைகளுக்காக உதவிகளைப் புரிய முன்வந்திருக்கிறார்.  

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.