Header Ads



இலங்கையில் சமூக, ஊடகங்களுக்கு தடை..?


(வீரகேசரி பத்திரிகை)

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும்வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.

நாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.

இந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.