Header Ads



முஸ்லிம்களின் ஜெனிவா போராட்டத்தை, தடுக்கும் முயற்சி தோல்வி

(இன்றைய -20- சுடர் ஒளி பத்திரிகை, வெளியிட்டுள்ள செய்தி இது)

ஜெனிவா ஆர்ப்பாட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்கு இலங்கை அரசு இறுதிநேரத்தில் முன்னெடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி கண்டன. இதையடுத்து திட்டமிட்ட அடிப்படையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், நீதி கோரியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் புலம்பெயந்து வாழும் முஸ்லிம்களால் ஜெனிவாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இத்தகையதொரு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டால் அது தமக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும் எனக் கொழும்பு கருதியது.

இதனால், முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவதற்காகவும், முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பதற்காகவும் அமைச்சர் பைசர் முஸ்தபாவை ஜெனிவாவில் களமிறக்கியது இலங்கை அரசு.

ஜெனிவா சென்றுள்ள இலங்கையின் உயர்மட்டக் குழுவுக்கு இறுதிநேரத்திலேயே அமைச்சர் பைசர் முஸ்தபா உள்வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா சென்ற அமைச்சர் அம்பாறை மற்றும் கண்டியில் வெடித்த வன்முறைகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பிரமுகர்களுடன் பேச்சு நடத்தினார்.

"இலங்கையில் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது. எனவே, போராட்டம் நடத்தினால் அது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும்'' எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஏற்பாட்டாளர்கள் இதற்கு உடன்பட மறுத்துவிட்டனர். திட்டமிட்ட அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனக் கூறி அதை நடத்தியும் காட்டியுள்ளனர்.

5 comments:

  1. சபாஷ் அப்படி போடு

    ReplyDelete
  2. Hartals, are indeed not going to serve to any useful or fruitful purposes. There are many other meaningful ways to show our dissent.

    ReplyDelete
  3. Paisa; Paisa; Paisa; Post; Boot licking..... What else, Arumugan Thondaman knows of Paisa best

    ReplyDelete

Powered by Blogger.